WSWS ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் ரஷ்யப் புரட்சி பற்றி நடக்கவுள்ள விரிவுரைகளை கலந்துரையாடுகிறார். டேவிட் நோர்த்தின் கலந்துரையாடலை தமிழில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 1917 இன் அசாதாரணமான நிகழ்வுகளின் அடித்தளங்கள், விசைவீச்சு மற்றும் விளைவுகள் சம்பந்தமாக நடத்தும் இணையவழி விரிவுரைகளுடன் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவுகூறுகின்றது. முதல் தொடர், மார்ச் 11 ஆரம்பமாகி மே 6 வரை இரு வாரங்களுக்கு ஒருமுறை இடம்பெறும். இரண்டாவது தொடர் செப்டெம்பர் மாதம் தொடங்கும்.

கூட்டங்கள் YouTube இல் நேரலையாக ஒளிபரப்பப்படும். விரிவுரைகளுக்கு பதிவு செய்வதோடு சமீபத்திய விரிவுரை அறிவிப்புகள், புத்தக விலை தள்ளுபடிகள் மற்றும் ஏனைய பிரத்தியே உள்ளடக்கங்களையும் பெற முகநூல் பிரச்சாரத்தை பின்தொடருங்கள்.

விரிவுரை அட்டவணை

11 மார்ச் 2017 • மாலை 5 மணி (அமெரிக்க நேரம் EST)

ரஷ்யப் புரட்சியை ஏன் படிக்க வேண்டும்?

1917 ரஷ்யப் புரட்சி, உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் அடங்கும். ஸார் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிந்து போல்ஷிவிக் கட்சி ஆட்சிக்கு வந்து நூறு ஆண்டுகளுக்கு பின்னர், அதன் நிலைத்திருக்கும் தாக்கம் மற்றும் அதன் தீவிரமான அரசியல் பொருத்தத்துக்கு சான்றாயிருக்கும் புரட்சி பற்றிய கலந்துரையாடல்களைச் சூழ இன்னமும் கசப்பான முரண்பாடுகள் நிலவுகின்றன.

விரிவுரையாளர் டேவிட் நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினதும் தலைவராவார். இந்த விரிவுரை மாலை 5:00 EST (22:00 UTC) மணிக்கு YouTube இல் ஒளிபரப்பப்படும். நேர மண்டல கணிப்பீடுகளுக்கு, இங்கே கிளிக்செய்யவும். பங்கேற்பதற்காக, இணையவழி விரிவுரை தொடருக்கு பதிவு செய்யவும். 

25 மார்ச் 2017 • மாலை 5 மணி (அமெரிக்க நேரம் EdT)

1905 இன் மரபும் ரஷ்யப் புரட்சியின் மூலோபாயமும்

1905 புரட்சியானது 1917 நிகழ்வுகளுக்கான "இறுதி ஒத்திகையாக" வரலாற்றில் இடம்பிடித்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பெரும் புரட்சிகர எழுச்சியான 1905 இன் படிப்பினைகள், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டை விரிவுபடுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கியது.

விரிவுரையாளர் பிரெட் வில்லியம்ஸ், பல ரஷியன் மொழியிலான வரலாறு மற்றும் இலக்கிய படைப்புகளை மொழிபெயர்த்தவராவார். அவர் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராவார். இந்த விரிவுரை மாலை 5:00 EDT (21:00 UTC) மணிக்கு YouTube இல் ஒளிபரப்பப்படும். நேர மண்டல கணிப்பீடுகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும். பங்கேற்பதற்காக, இணையவழி விரிவுரை தொடருக்கு பதிவு  செய்யவும். 

8 ஏப்பிரல் 2017 • மாலை 5 மணி (அமெரிக்க நேரம் EdT)

உலக போரும் புரட்சியும்: 1914-1917

1914 ஆகஸ்ட்டில் உலகப் போர் வெடிப்பானது முதலாளித்துவ தேசிய அரசு முறைமையினுள் ஆழ வேரூன்றியுள்ள முரண்பாடுகளில் இருந்தே எழுந்தது. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாத தலைவர்கள், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் கொள்கைகளை நிராகரித்து யுத்தத்தை அங்கீகரித்தனர். உலகப் பேரழிவிற்கான பின்னணிக்கு எதிராக, இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில் கொள்கைப் பிடிப்பான தலைவராக எழுந்த லெனின், ஏகாதிபத்திய போரின் பேரழிவே உலக சோசலிசப் புரட்சியின் வெடிப்பிற்கு களம் அமைக்கின்றது என்று வலியுறுத்தினார்.

விரிவுரையாளர் நிக் பீம்ஸ், அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவு ஸ்தாபக உறுப்பினரும் ஏகாதிபத்தியத்தியம் பற்றிய மார்க்சிஸ கோட்பாடு சம்பந்தமான விடயத்தில் முன்னணி வகிப்பவரும் ஆவார். இந்த விரிவுரை மாலை 5:00 EDT (21:00 UTC) மணிக்கு YouTube இல் ஒளிபரப்பப்படும். நேர மண்டல கணிப்பீடுகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும். பங்கேற்பதற்காக, இணையவழி விரிவுரை தொடருக்கு பதிவு  செய்யவும். 

22 ஏப்பிரல் 2017 • மாலை 5 மணி (அமெரிக்க நேரம் EdT)

பிப்ரவரி புரட்சி

300 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ரோமனோவ் வம்சம், ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராட்டில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகர இயக்கத்தினால் ஐந்து நாட்களுக்குள் தூக்கி எறியப்பட்டது. வரலாற்றை உருவாக்குவதற்காக வெகுஜனங்கள் வன்முறையாக தலையீடு செய்தமை, சமூகப் புரட்சியின் வெளிப்படையான "தன்னெழுச்சி" வெடிப்புக்கும் நனவான அரசியல் தலைமைத்துவத்தின் வகிபாகத்துக்கும் இடையிலான உறவு பற்றிய மைய அரசியல் பிரச்சினையை எழுப்பியது.

விரிவுரையாளர் ஜோசப் கிஷோர், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஆவார். இந்த விரிவுரை மாலை 5:00 EDT (21:00 UTC) மணிக்கு YouTube இல் ஒளிபரப்பப்படும். நேர மண்டல கணிப்பீடுகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும். பங்கேற்பதற்காக, இணையவழி விரிவுரை தொடருக்கு பதிவு  செய்யவும். 

6 மே 2017 • மாலை 5 மணி (அமெரிக்க நேரம் EdT)

லெனின் ரஷ்யாவுக்கு திரும்பி வந்தமையும் ஏப்பிரல் ஆய்வுகளும்

லெனின் சுவிச்சர்லாந்தில் புகலிட வாழ்வில் இருந்த போதே பிப்ரவரி புரட்சி திடீரென வெடித்தது. அவர் இல்லாத நிலையில், ஸ்டாலின் மற்றும் காமனேவ் தலைமையில் இருந்த போல்ஷிவிக் கட்சி, புதிய முதலாளித்துவ தற்காலிக அரசாங்கத்திற்கும் உலக போரில் ரஷ்யா தொடர்ந்தும் பங்குகொள்வதற்கும் ஆதரவு கொடுக்க பரிந்துரைத்திருந்தது. இந்த நடைமுறையை லெனின் கசப்புடன் எதிர்த்தார். ஒரு "சீல் வைக்கப்பட்ட ரயிலில்" ரஷ்யாவிற்கு அவர் திரும்பிய பிறகு, தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கிவீசுவதை நோக்கி போல்ஷிவிக் கட்சியை திசையமைவுபடுத்த ஒரு அசாதாரணமான போராட்டத்தை முன்னெடுத்தார். நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டமை அக்டோபரில் சோசலிச எழுச்சியை தயாரிக்க களம் அமைத்தது.

விரிவுரையாளர் ஜேம்ஸ் கோகன், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளர் ஆவார். இந்த விரிவுரை மாலை 5:00 EDT (21:00 UTC) மணிக்கு YouTube இல் ஒளிபரப்பப்படும். நேர மண்டல கணிப்பீடுகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும். பங்கேற்பதற்காக, இணையவழி விரிவுரை தொடருக்கு பதிவு  செய்யவும்.