ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European powers move toward scrapping nuclear treaty with Iran

ஐரோப்பிய சக்திகள் ஈரான் உடனான அணுசக்தி உடன்படிக்கையை முறித்துக் கொள்வதை நோக்கி நகர்கின்றன

By Alex Lantier
15 January 2020

செவ்வாயன்று, பேர்லின், இலண்டன் மற்றும் பாரீசின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் அவர்கள் 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை மீறியதாக குற்றஞ்சாட்டி ஈரானுக்கு எதிராக ஒரு புகார் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார்கள். இது, வாஷிங்டன் 2018 இல் கைவிட்ட அந்த உடன்படிக்கையை அவர்களும் மறுத்தளிப்பதற்கும் மற்றும் மத்திய கிழக்கில் முற்றுமுதலான போரைத் தூண்ட அச்சுறுத்தும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க பிரச்சாரத்துடன் அவர்கள் அணிசேரும் விதத்தில் ஐ.நா. தடையாணைகளை மீளத்திணிப்பதை ஆதரிப்பதற்கும் அனுமதிக்கும்.

வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அறிக்கை, இராஜாங்க நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்க கோருகின்ற அதேவேளையில் ஆக்கிரோஷ நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் ஓர் இழிந்த ஆத்திரமூட்டலாகும். ஈரான் கடந்த ஜூனில் அதன் எல்லை மீது பறந்த அமெரிக்க டிரோனைச் சுட்டு வீழ்த்திய பின்னர் வாஷிங்டன் ஏறத்தாழ ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய உண்மை மீது அந்த அறிக்கை வாய்மூடி இருப்பதுடன், ஜனவரி 3 இல் ஈரானிய தளபதி காசிம் சுலைமானியைப் பாக்தாத்தில் அமெரிக்கா டிரோன் படுகொலை குறித்தும் ஒன்றுமே குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, விரிவார்ந்த கூட்டு நடவடிக்கை திட்டம் (JCPOA) என்றழைக்கப்படும் அந்த உடன்படிக்கையில் இணங்கி இருப்பதைக் குறைத்துக் கொள்வதற்கான ஈரானின் நகர்வுகள் உட்பட அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஈரானின் எதிர்நடவடிக்கைகளை அது கண்டிக்கிறது. இந்த ஒருதலைப்பட்சமான பாணியில், அது ஈரானை ஓர் அணுசக்தி அச்சுறுத்தலாக முத்திரை குத்துகிறது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஈரானுடன் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளை மேற்கோளிட்டு, “ஈரான் JCPOA இல் இணங்கி இருப்பதைக் குறைத்துக் கொள்ள ஈரானுக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை,” என்று அது கூறுகிறது. “இதற்கு பதிலாக போக்கைத் தலைகீழாக ஆக்கி, ஈரான் JCPOA உடன் இணங்கி இருப்பதை மேற்கொண்டு குறைப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளதுடன், “ஈரானின் இஸ்லாமிய குடியரசு, அதன் பொறுப்புக்களைக் குறைத்துக் கொள்ளும் ஐந்தாவது கட்டத்தில், JCPOA இல் அதன் மட்டுப்பாடுகள் மீதான கடைசி முக்கிய அம்சமான, 'அணுப்பிளவு அமைப்புகளின் (centrifuges) எண்ணிக்கையை மட்டுப்படுத்தும்' அம்சத்தை கைவிடுகிறது,” என்று அறிவித்தது.


ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போரெல், பேர்லின், இலண்டன் மற்றும் பாரீசின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிராக புகார் ஒன்றை சமர்பிக்க இருப்பதாக அறிவிக்க, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ஜோன்-பிரான்சுவா பாதியாஸ்)

ஈரானின் கொள்கை "அதிகரித்தளவில் கடுமையான, திரும்ப பெற முடியாத அணுசக்தி அதிகரிப்பை உள்நோக்கமாக" கொண்டுள்ளது, அதாவது ஈரான் ஓர் அணுகுண்டு தயாரிக்க முயன்று வருவதாக அந்த அறிக்கை, ஆதாரமின்றி, குற்றஞ்சாட்டுகிறது. “ஆகவே, ஈரானின் நடவடிக்கைகளைப் பார்க்கையில், JCPOA இன் கீழ் ஈரான் அதன் பொறுப்புறுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற எங்கள் கவலைகளை இன்று பதிவு செய்வதையும், JCPOA இன் 36 ஆம் பத்தியில் உள்ளவாறு, பிரச்சினைகளைத் தீர்க்கும் இயங்குமுறையின் கீழ் கூட்டுக் குழுவிடம் இந்த விடயத்தை பரிந்துரைப்பதையும் தவிர, எங்களுக்கு வேறு தெரிவு இல்லை,” என்று அது வலியுறுத்துகிறது.

ஈரான் அணுஆயுதங்கள் கட்டமைப்பதன் விளிம்பில் நிற்கிறது என்ற ஐரோப்பிய கூற்றுக்கு உள்ளது உள்ளவாறே எந்த அடித்தளமும் இல்லை. சர்வதேச அணுசக்தி ஆணைய ஆய்வாளர்கள் அதன் அணுசக்தி ஆலைகளைக் கண்காணிக்க ஈரானில் தங்கியுள்ளனர். ஈரான், அது கையெழுத்திட்ட 1970 அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தைக் கைத்துறக்கவில்லை. ஆனால், 2003 இல் ஈராக் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத படையெடுப்புக்கு முந்தைய அமெரிக்க நடவடிக்கைகளை எதிரொலித்து, ஐரோப்பிய சக்திகள் நடைமுறையளவில் IAEA கண்காணிப்பை உதறித் தள்ளி வருகின்றன என்பதுடன், ஈரான் அணுஆயுத தயாரிப்புக்கு அருகாமையில் இருப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன.

ஐரோப்பிய சக்திகளின் அறிக்கையின் பெரும்பகுதி அவற்றினது கொள்கையால் ஏற்படும் போர் அபாயத்தைக் குறைத்துக் காட்ட அர்பணிக்கப்பட்டுள்ளது. அவை ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா மறுத்தளித்ததற்கு அவை "வருந்துவதாக" எரிச்சலூட்டும் விதத்தில் அறிவிக்கின்றன. அவை சமாதானத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களாக காட்டிக் கொண்டு, ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையைக் கைவிட அவை நகர்கின்ற வேளையில் ஏதோ அதை " நேர்மையாக" பாதுகாக்க விரும்புவதாக வலியுறுத்துகின்றன.

“JCPOA இன் பெருவாரியான நோக்கத்தைக் காப்பாற்றும் நன்நம்பிக்கையிலும் மற்றும் ஆக்கபூர்வமான இராஜாங்க பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த முட்டுச்சந்தைக் கடந்து முன்னோக்கிய வழியைக் காண முடியும், அதேவேளையில் அந்த உடன்படிக்கையின் கட்டமைப்புக்கு உள்ளிருந்தே அதை காப்பாற்ற முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையிலுமே இதை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு செய்வதன் மூலம், எங்களின் மூன்று நாடுகளும் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு பிரச்சாரத்தில் இணையவில்லை. ஈரானை JCPOA இன் கீழ் அதன் பொறுப்புகளுக்கு முழுமையாக இணக்கமாக மீண்டும் கொண்டு வருவதே எங்களின் நோக்கமாகும்,” என்று அவை வலியுறுத்துகின்றன.

இது பொய்களின் தொகுப்பாகும், ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விடுபடும் அழைப்புகளுடனும் தெஹ்ரானுக்கு எதிரான டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்கள் பகிரங்கமாக அழைப்புவிடுவதன் மூலமும் அவை நேரடியாக முரண்படுகிறன. செவ்வாய்க்கிழமை காலை, வெளியுறவு அமைச்சர்களின் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டு கொண்டிருந்த போதே, பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பிபிசி காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, ஐரோப்பா JCPOA ஐ மறுத்தளிக்க வேண்டும் என்றும், ஈரானுடன் "ட்ரம்பின் உடன்படிக்கையை" பேரம்பேசுவதற்கான நகர்வுகளை ஆதரிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

ஈரானிய அணுசக்தி உடன்படிக்கை குறித்து ஜோன்சன் கூறுகையில், “அதிலிருந்து நாம் விலகப் போகிறோம் என்றால், பின்னர் நமக்கு ஒரு பிரதியீடு தேவைப்படுகிறது. அதை ட்ரம்பின் உடன்படிக்கையைக் கொண்டு பிரதியீடு செய்யலாம்,” என்றார்.

ஜோன்சன் தொடர்ந்து கூறினார், “அமெரிக்க முன்னோக்கில் இருந்து, அது குறைபாடுள்ள ஓர் உடன்படிக்கையாக உள்ளது … அத்துடன் அது ஜனாதிபதி ஒபாமாவினால் பேசி முடிக்கப்பட்டது. அதை ட்ரம்ப் உடன்படிக்கையைக் கொண்டு பிரதியீடு செய்யலாம். அதைத்தான் நாம் பார்க்க வேண்டும். ஜனாதிபதி ட்ரம்ப் அவரின் சொந்த முன்வரலாற்றின்படியும், இன்னும் பலரின் கருத்துப்படியும், உடன்பாட்டை வகுப்பதில் தலைசிறந்தவராக உள்ளார். ஆகவே JCPOA ஐ பிரதியீடு செய்யவும் அதற்கு பதிலாக ட்ரம்பின் உடன்படிக்கையை எட்டுவதற்கும் வேலை செய்யலாம்,” என்றார்.

"உடன்படிக்கையை வகுக்கும்" ட்ரம்பின் மூலோபாயம், உயர்மட்ட ஈரானிய அதிகாரிகளைப் பகிரங்கமாக படுகொலை செய்வது மற்றும் மிகப்பெரும் வான்வழி தாக்குதல்களைக் கொண்டு அச்சுறுத்துவது போன்ற போர் நடவடிக்கைகளைக் கொண்டு அச்சுறுத்துவதையும் அல்லது அவற்றை நடத்துவதையும் உள்ளடக்கி உள்ளது. உள்ளவாறே, நேற்றைய கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் உண்மையில் ஈரானுக்கு எதிராக "அதிகபட்ச அழுத்த" கொள்கையை —அதாவது, போரை— பரிசீலித்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஈரானிய ஆட்சியோ, அது JCPOA இல் தங்கியிருப்பதாக வருத்தத்துடன் வலியுறுத்தியும், வாஷிங்டன் அந்த உடன்படிக்கையை மறுத்தளித்து ஈரான் மீது தடையாணைகளை திணித்த பின்னர், ஐரோப்பா அதனுடன் வர்த்தகம் செய்ய தவறி வருவதற்காக அதன் மீது பழிசுமத்தியும் எதிர்வினையாற்றியது. “ஓராண்டுக்குப் பின்னரும், ஐரோப்பிய தரப்பு அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் வெற்றியடையவில்லை, இதுதான் அந்த அணுசக்தி உடன்படிக்கையின் 26 மற்றும் 36 பிரிவுகளின் கீழ் இடைவெளி விட்டு விட்டு ஐந்து முறை JCPOA பொறுப்புகளை ஈரான் குறைத்துக் கொள்ளுமாறு செய்தது,” என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டது. அந்த உடன்படிக்கையை மறுத்தளிப்பதற்கான குறிப்பிடப்படாத "விளைவுகளை" ஐரோப்பா அனுபவிக்கும் என்று அது எச்சரித்தது.

ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஐரோப்பா "நெருக்கமாக கலந்தாலோசிக்கிறது" என்ற அந்த அறிக்கையின் கூற்றை நடைமுறையளவில் மறுத்தளிக்கும் விதமாக, மாஸ்கோ ஐரோப்பிய சக்திகளின் அந்த அறிக்கைக்குத் திட்டவட்டமாக கண்டனம் தெரிவித்தது. “ஐரோப்பியர்களின் அசட்டைத்தனமான நடவடிக்கைகள் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையைச் சுற்றி ஒரு புதிய தீவிரப்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை,” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் இராணுவத் தீவிரப்பாடு, ஓர் உலகப் போராக மாறும் பயங்கர ஆபத்தை முன்நிறுத்துகின்றன. ஈரான் உடனான ஓர் அமெரிக்க-ஐரோப்பிய போர் என்பது 2011 இல் சிரியாவில் தொடங்கப்பட்ட நேட்டோ பினாமி போரைக் காட்டிலும் வேகமாக நேரடியாக இன்னும் அதிகளவில் ரஷ்யா மற்றும் சீனாவை உள்ளீர்க்கும். வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், ரஷ்ய மற்றும் சீன போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பல்களுடன் கூட்டு ஒத்திகைகள் மேற்கொண்டன, தெஹ்ரானின் இரண்டு அணுஆயுதமேந்திய கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து அதை இராணுவரீதியில் தனிமைப்படுத்த முடியாது என்பதற்கு அதுவொரு சமிக்ஞை என்பதாக தெஹ்ரான் அதை குறிப்பிட்டது.

எவ்வாறிருந்த போதினும், சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்ததற்கு நேர்மையாக பார்த்தால் ஈரானிய முதலாளித்துவ ஆட்சியின் பலவீனமான விடையிறுப்பால், வெளிப்படையாகவே துணிவு பெற்ற வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் வேகமாக தீவிரப்பட்டு வருகின்றன. ஈராக்கிய அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தெஹ்ரான் நடத்திய தாக்குதல்கள் குறிப்பிடத்தக்களவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஆனால் ஈரானிய அதிகாரிகள் 80 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதாக கூறி ஆரம்பத்தில் பொய்யுரைத்தனர். உக்ரேனிய பயணியர் விமானம் ஒன்றை எதிரி போர் விமானமாக கருதி அதை தற்செயலாக அது சுட்டுவீழ்த்தியதையும் ஈரானிய அரசாங்கம் ஆரம்பத்தில் பொய்யாக மறுத்தது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரும் போர் எதிர்ப்புக்கு எந்த முறையீடும் செய்யவில்லை.

தற்போது ஈரானிய எண்ணெய்யைக் கொள்முதல் செய்து வரும் சீனாவில் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், ஈரானுக்கான முன்னாள் சீன தூதர் ஹுவா லிம்மிங் கூறியதை மேற்கோளிட்டது: “சொல்லப் போனால் உலகம் அதன் மீதும் அமெரிக்க எதிர்ப்பு கோபத்தால் ஒருங்கிணைந்திருந்த அதன் மக்கள் மீதும் அனுதாபம் காட்டிய போது, ஆரம்பத்தில் ஈரான் சுத்தமான கரத்தை கொண்டிருந்தது, மாறாக அது குழப்பிவிட்டது.” தெஹ்ரானின் விடையிறுப்பு "மக்களிடையே ஈரானிய புரட்சிப் படைப்பிரிவுகளின் பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் கடுமையாக சேதப்படுத்தியது" என்று எழுதிய குளோபல் டைம்ஸ், “தெஹ்ரான் அதை சரியான முறையில் கையாளவில்லை, இப்போது நிலைமை அதற்கு எதிராக திரும்பி உள்ளது,” என்று நிறைவு செய்தது.

“சுலைமானி மீதான தாக்குதலால் ஈரான் பொறியில் சிக்கி உள்ளது,” என்று அவரின் பங்கிற்கு, பிரான்சின் வலதுசாரி நாளிதழ் Le Figaro இன் கட்டுரையாளர் Georges Malbrunot நிறைவு செய்தார். உக்ரேனிய பயணியர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதன் மீது எழுந்து வரும் போராட்டங்கள் குறித்து தெஹ்ரானின் அச்சத்தை மேற்கோளிட்டு அவர் வாதிடுகையில், எதிர்பார்த்ததை விட முன்னதாக அமெரிக்காவுடன் ஒரு முற்றுமுழுதான மோதலுக்குள் தள்ளப்படுவோமோ என்று தெஹ்ரான் அஞ்சுகிறது என்றார்: “அமெரிக்க தாக்குதல் தெஹ்ரானின் மூலோபாயத்திற்கு மிகவும் முன்கூட்டியே வந்தது, அது அடுத்த கோடையில் தான் ஒரு தீவிரப்பாட்டை எதிர்பார்த்திருந்தது,” என்றார்.

அமெரிக்க அதிகாரிகள் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திட்டமிடுகின்றனர். கலிபோர்னியாவின் ஹூவர் பயிலகத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ பேசுகையில், சுலைமானியின் கொலை ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக “தடுப்பை நிறுவுவதற்கான” ஒரு "மிகப்பெரிய மூலோபாயத்தின்" ஒரு பகுதியாகும் என்றார். இது, சுலைமானி "உடனடியான" அச்சுறுத்தலை முன்நிறுத்தி இருந்தாரா இல்லையா என்பது "உண்மையில் விடயமே இல்லை" என்று திங்களன்று அறிவித்த ட்ரம்ப், சுலைமானி அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்ததற்காகவே படுகொலை செய்ததாக ட்ரம்ப் பொய்யை உதிர்த்த பின்னர் வந்தது.

பொம்பியோ கூறினார், “ஜனாதிபதி ட்ரம்பும் அவரின் தேசிய பாதுகாப்பு குழுவில் உள்ள எங்களைப் போன்றவர்களும் ஈரானின் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக முன்னேற்பாடுகளை, உண்மையான முன்னேற்பாடுகளை, மீளஸ்தாபிதம் செய்து வருகிறோம். விலை கொடுக்க செய்யக்கூடிய தகைமை உங்களுக்கு உள்ளது என்பதை மட்டுமல்ல மாறாக உண்மையில் நீங்கள் அதை செய்யவும் விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் எதிரி புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார். ரஷ்யாவுடன் மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் கட்டுப்பாட்டு உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியதை மேற்கோளிட்டும், அத்துடன் சீனாவுக்கு எதிரான அமெரிக்க கப்பற்படை நிலைநிறுத்தல்கள் மற்றும் வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களையும் மேற்கோளிட்டு, அவர் கூறுகையில், “முன்னேற்பாட்டின் முக்கியத்துவம் ஈரானுடன் நின்றுவிடவில்லை,” என்றார்.

ஐரோப்பிய சக்திகளினது ஆக்ரோஷமான கொள்கையும் ஈரானிய ஆட்சியின் திவாலான விடையிறுப்பும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் போருக்கு எதிரான எதிர்ப்பை சுயாதீனமாக அணித்திரட்டுவதால் மட்டுமே புதிய இன்னும் கொடிய போர்களின் வெடிப்பைத் தடுக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.