ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

To enforce Monday’s constitutional coup
India dramatically intensifies repression in Kashmir

திங்கட்கிழமை அரசியலமைப்பு சதியை நடைமுறைப்படுத்த,

இந்தியா காஷ்மீரில் வியத்தகு முறையில் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Keith Jones
8 August 2019

இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் பிரச்சினைக்குரிய ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி அரசின் மீதும் மற்றும் மத்திய அரசுடனான அதன் உறவுகள் மீதும் செய்துள்ள அப்பட்டமான சட்டவிரோத மாற்றங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்காக, அப்பிராந்தியத்தில் முன்னொருபோதும் இல்லாத இராணுவ-பாதுகாப்பு ஒடுக்குமுறையை அதிகரித்து வருகிறது.

பிஜேபி அரசாங்கம், ஓர் அரசியலமைப்பு சதிக்கு ஒப்பான ஒரு நடவடிக்கையில், திங்களன்று காலை ஜனாதிபதி ஆணை ஒன்றை பிறப்பித்தது, அது 1950 இல் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து இந்தியாவின் ஒரே முஸ்லீம்-பெரும்பான்மை மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீர் பெற்றிருந்த அரைவாசியிலான சுயாட்சி சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. பின்னர் அது மக்கள் நிரம்பிய ஆனால் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்ட லடாக் பகுதியைப் பிரித்து, ஜம்மு & காஷ்மீரை இருகூறாக்க ஆக்க உத்தரவிட்டது, லடாக்கும் மற்றும் எஞ்சிய ஜம்மு & காஷ்மீர் பகுதியும் இனிமேல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இருக்குமென பிரகடனப்படுத்தப்பட்டது. நடைமுறையில் ஜம்மு & காஷ்மீர் புது டெல்லியின் மற்றும் அதன் கடுமையான இந்து வகுப்புவாத அரசாங்கத்தினது சட்ட-அரசியல் பெருவிரலின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளது.

பிஜேபி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான ஜனநாயக-விரோத நோக்கங்களை அடிக்கோடிடும் வகையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, அவரின் அரசியல் கையாள், உள்துறை செயலர் அமீத் ஷா, அந்நாட்டின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், இவரும் ஒரு நீண்டகால RSS தொண்டர் தான், மற்றும் அரசு அதிகாரத்துவத்தின் மிக மூத்த உறுப்பினர்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளால் முடுக்கிவிடப்பட்ட ஒரு சதியில், இந்த மாற்றங்கள் இரகசியமாக கலந்தாலோசிக்கப்பட்டு இரகசியமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

நடத்தப்படவிருந்த இந்த மாற்றங்கள் குறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல. எதிர்கட்சியின் மிக மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஆட்சி செலுத்தும் பிஜேபி இன் சொந்த கூட்டாளிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் முதுகுக்குப் பின்னால் இந்தியாவின் உச்சபட்ச சட்டவிதிகள் என்றழைக்கப்படுவது மாற்றப்பட்டது. இந்த சதிக்கு, ஒரு போலி-ஜனநாயக மூடிமறைப்பை வழங்குவதற்காக, பிஜேபி அதற்கடுத்து ஜம்மு & காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்து, எல்லைகள், மற்றும் அரசு மாற்றங்களை உறுதிப்படுத்தும் இரண்டு தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது, ஆனால் அப்போதும் கூட, விவாதம் ஒருசில மணி நேரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

சுற்றிவளைக்கப்பட்ட நிலைமையின் கீழ் காஷ்மீர்

பிஜேபி அரசாங்கம், திங்கட்கிழமை சதிக்கு முந்தைய ஒரு சில வாரங்களில், பாகிஸ்தான் ஆதரவிலான இந்திய-விரோத கிளர்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்க உத்தேசித்துள்ளனர் என்ற சாக்குபோக்கின் கீழ் ஜம்மு & காஷ்மீரில் பத்தாயிரக் கணக்கான கூடுதல் துருப்புகளைக் குவித்தது.

திங்கட்கிழமையில் இருந்து ஜம்மு & காஷ்மீர் பிராந்தியம் ஓர் இராணுவ-பாதுகாப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது, அப்பிராந்தியத்தை அதிர வைத்த இந்திய-விரோத கிளர்ச்சியின் போதோ அல்லது 1989 இக்குப் பின்னர் இருந்து இந்திய-பாகிஸ்தானிய பதட்டங்கள் தீவிரமடைந்த போதோ நிலவிய சூழலில் கூட அது இந்தளவுக்கு இருந்ததில்லை.

இந்திய அதிகாரிகள் இணையம், செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசி, மற்றும் வழமையான தொலைக்காட்சி சேவை என அனைத்தையும் துண்டித்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, 4 நபர்களுக்கு மேல் ஒன்றுகூடுவதைச் சட்டவிரோதமாக்கும் பிரிட்டிஷ் காலனித்துவ கால குற்றவியல் சட்ட வழிவகையான பிரிவு 144, ஜம்மு & காஷ்மீரின் பெரும்பகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் முஸ்லீம் உயரடுக்கின் மரபார்ந்த இந்திய-ஆதரவு பிரிவின் முக்கிய பிரமுகர்கள் உள்ளடங்கலாக குறைந்தபட்சம் நூறு முக்கிய அரசியல் தலைவர்களாவது கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் ஜம்மு & காஷ்மீர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகிய இரண்டு முன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சஜ்ஜித் கானி லோனெ ஆகியோரும் அதில் உள்ளடங்குவர்.

பிஜேபி சார்பான இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று பிரசுரித்த நேரில் பார்த்தவரின் அறிக்கை, ஜம்மு & காஷ்மீரின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகரின் தற்போதைய நிலைமையைக் குறித்து நடுங்க வைக்கும் ஒரு விவரிப்பை வழங்குகிறது: “உலகத்துடனான (காஷ்மீர்) பள்ளத்தாக்கின் உள்தொடர்புகளும் வெளித்தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன... அங்கே வசிப்பவர்கள் அண்டை பகுதிகளுக்கு வெளியே அனுமதிக்கப்படுவதில்லை. நிர்வாகத்தின் சொந்த பணியாளர்களுக்கும் கூட ஊரடங்கு உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கும் அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை, பாதுகாப்பு சிப்பாய்கள் அரசு அடையாள அட்டைகளை அனுமதியாக ஏற்றுக் கொள்வதில்லை,” என்றார்.

“பத்திரிகைகள் வரவேற்கப்படவில்லை. உள்ளே நுழைந்துள்ள தொலைக்காட்சி குழுக்களில் பெரும்பாலானவை அந்நகரின் ஜீரோ பாலத்தின் 1 சதுர கிலோமீட்டர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்... [பெ]ரும்பாலான அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என இவை மாநிலத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள துணைஇராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன... சாலைகள் மூடப்பட்டுள்ளன ... வீடுகளில் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்து கொண்டே வருகின்றன,” என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் மூன்று ஆசிரியர்களினது அறிக்கை, அரசு பணியாளர்கள் உட்பட கருத்துரைக்கும் நிலைமையில் இருப்பவர்கள் பெருவாரியாக இந்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும், “மக்களில் முஸ்லீம்களின் விகிதத்தைக் குறைக்கும்" வகையில் "ஜம்மு & காஷ்மீர் மக்களின் தொகையை மாற்றுவதை" அந்நடவடிக்கைகள் நோக்கமாக கொண்டிருப்பதாக அவர்கள் அஞ்சுவதாகவும் ஒப்புக் கொண்டது.

மோடியினது அரசியலமைப்பு சதியின் புவிசார்மூலோபாய நோக்கங்கள் மற்றும் உள்நாட்டு நோக்கங்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான பிஜேபி அரசாங்கத்தின் தாக்குதல் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, காஷ்மீர் கிளர்ச்சியை அதன் வரையறைகளின் கீழ் விரைவாக முடிவுக்குக் கொண்டுவர புது டெல்லி தீர்மானமாக உள்ளது என்பதையும், அதுவும், அவ்வாறு செய்வதற்கு, அது சட்டபூர்வ அரசியலமைப்பு விதிகளைக் கலைக்கவும் மற்றும் கடந்த முப்பதாண்டுகளாக ஜம்மு & காஷ்மீரில் இந்திய அரசு தொடுத்து வந்துள்ள "அருவருக்கத்தக்க போரை" தீவிரப்படுத்துவதற்கும் —“காணாமல் ஆக்குவது" மற்றும் நீதிவிசாரணையற்ற படுகொலைகளை அதிகரிப்பதற்கும்— அது தயாராக உள்ளது என்பதை அது சமிக்ஞை செய்வதை அர்த்தப்படுத்துகிறது.

இரண்டாவது, பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டின் முகத்துக்கு நேராக புது டெல்லியின் கரங்களைப் பலப்படுத்துவது தொடர்புடைய நோக்கமாக உள்ளது. காஷ்மீர் மீது மோடி அரசாங்கம் தொடுத்துள்ள "அரசியலமைப்பு தாக்குதல்", பாகிஸ்தான் ஆதரவிலான பயங்கரவாத தாக்குதலுக்கு விடையிறுப்பதற்காக என்ற பாசாங்குத்தனத்தில் கடந்த பெப்ரவரியில் அது உத்தரவிட்டு பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்திய விமான தாக்குதல்களைப் பரிபூரணமாக்குகிறது. அந்த தாக்குதலும் அதற்கடுத்து பதிலடியாக ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலும் தெற்காசியாவின் அவ்விரு அணுஆயுத சக்திகளையும் 1971 இக்குப் பின்னர் அவற்றை முற்றுமுதலான போருக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வந்திருந்தன.

சர்வதேச அளவில் ஜம்மு & காஷ்மீர் அந்தஸ்து சர்ச்சைக்குரிய பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போதினும், இந்திய ஒன்றியங்களாக ஜம்மு & காஷ்மீரை "முழுமையாக ஒருங்கிணைத்து" கொண்டதன் மூலமாக புது டெல்லி இனி இஸ்லாமாபாத் மற்றும் புது டெல்லிக்கு இடையே ஏதேனும் "சமாதான பேச்சுவார்த்தையின்" பாகமாக ஜம்மு & காஷ்மீரின் அந்தஸ்தைக் குறித்து பேச பாகிஸ்தான் அழைப்புவிடுப்பதை ஊக்குவிக்காது என்று அறிவிக்கிறது.

“மோடி அரசாங்கம் ஓர் அபாயத்தை எடுத்துள்ளது என்றாலும் நாட்டின் நீண்டகால நலனுக்கு பெரிதும் அவசியமான படியை எடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலர் கன்வால் சிபில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதினார். “எந்தவொரு 'விரிவான' பேச்சுவார்த்தையிலும் 'நிலுவையிலுள்ள [காஷ்மீர்] பிரச்சினையை' பாகிஸ்தானுடன் விவாதிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, உறவுகளை வழமையாக்குவதற்கான எந்தவித பேச்சுவார்த்தையையும் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இன்னும் கூடுதலாக குறைந்துவிட்டது. பாகிஸ்தானை இந்தியா ஒதுக்கிவிட்டது,” என்றார்.

இதற்கிடையே, இந்தியா ஆத்திரமூட்டும் வகையில் முன்னாள் பிரிட்டிஷ் இந்திய சமஸ்தானத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாகமாக இருந்த தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள "ஆசாத் காஷ்மீர்" மீது அதன் சொந்த இறையாண்மை இருப்பதாக அழுத்தமாக உரிமைகோரியுள்ளது. தெற்காசியாவில் 1947-48 வகுப்புவாத பிரிவினையின் பாகமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர், வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் பெருவாரியான இந்து இந்தியா என்று பிரிக்கப்பட்டது. அப்போதிருந்து காஷ்மீர் பிரச்சினை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பிற்போக்குத்தனமான மூலோபாய போட்டியின் மையத்தில் இருந்து வருகிறது — இந்த போட்டி, நான்கு போர்களுக்கும், எண்ணற்ற எல்லை சச்சரவுகளுக்கும் மற்றும் போர் நெருக்கடிகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது.

மோடி, 2014 இல் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் இருந்து, பாகிஸ்தான் உடனான "விளையாட்டு விதிகளை மாற்ற" அவர் தீர்மானமாக இருப்பதையும், அதற்காக போர் நடத்தவும் தயாராக இருப்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக "உறுதியான" நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களாக அறியப்படும் அதிகாரிகளால் அவர் சூழப்பட்டுள்ளார். மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பெயரிடப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர், அஜித் தோவல் பாகிஸ்தானிடமிருந்து பெரியளவிலான எந்தவொரு கூடுதல் பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்தியா பாகிஸ்தானைத் துண்டாடுவதன் மூலமாக விடையிறுக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார். “நீங்கள் இன்னொரு மும்பை சம்பவத்தை நடத்துவீர்களாயின்,” தோவல் அறிவித்தார், “நீங்கள் பலோசிஸ்தானை இழந்துவிடுவீர்கள்,” என்றார்.

ஜம்மு & காஷ்மீரின் மாற்றங்கள் சீனாவையும் இலக்கில் கொண்டுள்ளன. பிஜேபி அரசாங்கம் பகிரங்கமாக லடாக்கின் சிறு இனக்குழு -மொழிசார் கலப்பைச் சுட்டிக்காட்டி ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து லடாக் பிரிப்பை நியாயப்படுத்தி உள்ளது. (அதன் இரண்டு நிர்வாக மாவட்டங்களில் ஒன்றான லெஹ் இல் பெரும்பான்மை மக்கள், திபெத்திய மொழியான லடாக்கி பேசுவர், மற்றும் புத்த மதத்தினர்.) ஆனால் இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவை இந்த வாதத்தை ஏற்றுக் கொள்வது வெளிப்படையான சூழ்ச்சியாக உள்ளது.

வடமேற்கில் பாகிஸ்தானையும் கிழக்கில் சீனாவின் திபெத் மற்றும் ஜின்ஜியாங் "சுயாட்சி பிரதேசங்களையும்" எல்லைகளாக கொண்டுள்ள லடாக், பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டுடனுமான இந்தியாவின் போர்கள், எல்லை மோதல்கள் மற்றும் விட்டுக்கொடுப்பற்ற எல்லையோர உரசல்களுக்கு மீண்டும் மீண்டும் முதன்மையான எல்லையில் இருந்துள்ளது.

லடாக்கைப் பிரித்ததன் மூலமாக மற்றும், ஜம்மு மற்றும் காஷ்மீரை புதிய யூனியன் பிரதேசமாக வேறுபடுத்தியதில், அதை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சட்டமன்றம் மற்றும் மக்கள் தேர்ந்தெடுக்கும் யூனியன் பிரதேச அரசாங்கமாக கூட ஆக்க மறுத்து, புது டெல்லி எந்தவித பொதுவான குறுக்கீடுமின்றி அதன் நடவடிக்கைகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்காக தற்போதைய இந்திய அரசியலமைப்பின் கீழ் இந்திய இராணுவத்திற்குச் சாத்தியமானளவுக்கு பரந்த இடவசதியை வழங்கி உள்ளது.

லடாக்கின் அந்தஸ்து மாற்றப்பட்டதைக் குறித்து பொதுவில் அறிவித்ததற்கு சற்று பின்னர், பெய்ஜிங், அந்த பிரதேசம் இந்தியாவுடனான அதன் தீர்க்கப்படாத எல்லை பிரச்சினையின் பாகமாக இருப்பதைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அந்நடவடிக்கையைக் கண்டித்தது. பெய்ஜிங் அதன் "உள்விவகாரங்களில்" தலையிடுவதாக கண்டித்து புது டெல்லி பதிலிறுத்ததுடன், அந்நாள் காலை உள்துறை செயலர் அமீத் ஷா அறிவித்திருந்த அதே கூற்றை, அதாவது செயலிழந்து போயுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மீதும் அதன் உரிமைகோரல்களை வைத்துள்ளதாக மீண்டும் அறிவித்தது. பாகிஸ்தான் 1963 உடன்படிக்கையின் பாகமாக சீனாவுக்கு கைமாற்றிய லடாக் எல்லையோரம் அமைந்துள்ள அக்சாய் சின் பிரதேசமும் இதில் உள்ளடங்கும்.

பிஜேபி தலைமையிலான இந்திய அரசு நடைமுறைப்படுத்திய அரசியலமைப்பு சதியின் மூன்றாவது முக்கிய நோக்கம், தொழிலாள வர்க்கத்தைப் பீதியூட்டி பிளவுபடுத்துவதற்காக இந்து வகுப்புவாதம் மற்றும் போர்நாடும் தேசியவாதத்தை முடுக்கிவிடுவதும் மற்றும் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தத்திற்காக" மற்றும் இந்திய உயரடுக்கின் வல்லரசு அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக பின்தொடர்வதற்கான தீவிரப்பட்ட நகர்வுக்காகவும் இந்திய சமூகத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளை அணித்திரட்டுவதும் ஆகும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்குவதும் மற்றும் அதனை இந்திய ஒன்றியத்திற்குள் "முழுமையாக ஒருங்கிணைத்து" கொள்வதும் பல தசாப்தங்களாக இந்து வலதின் முக்கிய கோரிக்கைகளாக இருந்துள்ளன என்பதோடு, ஒரு இந்து ராஷ்ட்ரா அல்லது அரசாக இந்தியாவை மாற்றுவதற்கான அவர்கள் திட்டத்தின் உள்ளார்ந்த பாகமாக அது இருந்துள்ளது.

இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, பெரும்பாலான பகுதியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான அரசு தாக்குதல் என்பது அபாயம் நிறைந்த "பகடைக் காய் விளையாட்டு" என்பதை ஒத்துக் கொண்டும் கூட அதைப் பின்தொடர்ந்து சென்றுள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்ட-அரசியலமைப்பு நசுக்கப்படுவதற்கு எதிராக வந்தது என்றாலும், ராகுல் காந்தியை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரக்கூடிய முன்னணி நபராக பரவலாக கருதப்படும் ஜோதிராதித்ய சிண்டியா உட்பட பெரும்பாலான மூத்த பிரமுகர்கள் விரைவிலேயே இந்த விவகாரத்தில் அவர்கள் "நாட்டு நலனுக்காக" பிஜேபி உடன் நிற்பதாக அறிவித்தனர்.

இந்திய தலித் (முன்னர் தீண்டத்தகாதவர்கள்) சிறுபான்மையினருக்காக அரசியல் குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) உள்ளடங்கலாக பிராந்திய மற்றும் ஜாதி அடிப்படையிலான பல கட்சிகளும் அவற்றின் ஆதரவு குரல் கொடுத்தன.

பெரிதும், இந்து வலதின் அடிப்படை கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்ற அரசியலமைப்பின் மீது பிஜேபி தாறுமாறாக ஏறி மிதித்திருப்பது சில தாராளவாத பத்திரிகைகளை கைகளைப் பிசைந்து நிற்க விட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ஓர் அரசியல் மற்றும் மூலோபாய விமர்சகரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இந்திய அமைப்புகளது கூட்டமைப்பின் (FICCI) முன்னாள் பொது செயலாளர் சன்ஜாயா பாரூ ஆவார். “பிஜேபி,” “இவ்வாரம் எடுத்த படிகளை மேற்கொள்ள அதன் சொந்த அரசியல் காரணங்கள் இருந்திருக்கலாம் என்றாலும், இந்திய அரசுக்கும் அதன் காரணங்கள் உள்ளது. மென்மையான சாத்தியக்கூறுகள் எல்லாம் செயலிழந்து போய், ஒரு கடுமையான தீர்வு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் பல மூத்த தலைவர்கள் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கவில்லை மாறாக அவசியத்திற்காக இந்திய அரசின் நலன்களைப் பாதுகாக்கிறார்கள்,” என்றார்.

போர் முழக்கம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் நகர்வுகள் பாகிஸ்தானுடனான உறவுகளை மட்டுமே கொதிப்புற செய்யும் என்றாலும் கூட, அவை ஆறு மாதங்களுக்கும் குறைந்த காலத்திற்கு முன்னர் அடுத்தடுத்து போருக்கு நெருக்கத்தில் வந்த ஒரு பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கின்றது என்ற நிலையில், அமெரிக்காவில் இருந்து தொடங்கி, மேற்கத்திய அரசாங்கங்களின் விடையிறுப்போ அடக்கமாக உள்ளது. திங்களன்று, வாஷிங்டன் எல்லா தரப்பும் அமைதியாக இருக்குமாறு சம்பிரதாயமாக ஒரு விண்ணப்பம் செய்தது.

தெற்காசியாவின் பிராந்திய மேலாதிக்கவாதியாக தன்னை ஸ்தாபித்து கொள்வதற்கான இந்தியாவின் முனைவில் முக்கிய கணக்கீடு என்னவென்றால், வாஷிங்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் சீனாவுக்கு எதிராக ஓர் இராணுவ-மூலோபாய எதிர்பலமாக இந்தியா சேவையாற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றன என்பதாகும். உண்மையில், அதிநவீன ஆயுதங்கள் கிடைக்க செய்தல், மற்றும் இந்திய பெருங்கடலில் பொலிஸ் வேலை செய்வதில் புது டெல்லியின் முன்னணி பாத்திரத்தை ஏற்றுக் கொண்டமை உட்பட அமெரிக்காவின் "மூலோபாய உதவிகளுக்கு" கைமாறாக, மோடியின் கீழ் இந்தியா, சீனாவுடனான அமெரிக்க இராணுவ-மூலோபாய மோதலில் ஒரு முன்னணி நாடாக அதிகரித்தளவில் சேவையாற்றுமளவுக்கு, இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டுறவை மிக வேகமாக அதிகரித்து கொண்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக, நேற்று, பாகிஸ்தான் இந்திய தூதரான உயர் ஆணையர் அஜய் பிசாரியாவை வெளியேற்றியதுடன், இருதரப்பு வர்த்தகத்தை இடைநிறுத்தியது மற்றும் இந்தியாவுடனான உறவுகளையும் கூடுதலாக குறைத்தது. முன்னதாக பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் கூறுகையில், ஜம்மு & காஷ்மீரின் சுயாட்சியை நீக்கியமையால் கடந்த பெப்ரவரியில் இந்தியா வசமிருக்கும் காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படைகள் மீது நடத்தப்பட்டதைப் போன்றவொரு தாக்குதல் மீண்டும் "நடத்தப்படலாம்" என்று கூறினார், அதேவேளையில் புல்வாமா குண்டு வெடிப்பில் இஸ்லாமாபாத் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவதை மீண்டும் மறுத்திருந்தார். மோடி அரசாங்கம், அமெரிக்க ஆதரவுடன், பொறுப்பின்றி பாகிஸ்தானுக்குள் விமானத் தாக்குதல்கள் நடத்தியதை நியாயப்படுத்துவதற்கு அந்த புல்வாமா தாக்குதலைக் காரணமாக காட்டியிருந்தது.

“இது நடக்குமென ஏற்கனவே என்னால் ஊகிக்க முடிந்தது,” பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று உரையாற்றுகையில் கான் தெரிவித்தார். “அவர்கள் மீண்டும் பழியை நம்மீது சுமத்த முயல்வார்கள். அவர்கள் மீண்டும் நம்மை தாக்கக்கூடும், நாமும் திருப்பி தாக்குவோம்,” என்றார்.

மேலதிக வாசிப்புக்கு,

இந்தியாவின் இந்து மேலாதிக்க அரசாங்கம் காஷ்மீரின் சுய அதிகாரத்தை நீக்குகிறது [PDF]