ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Preparing for great-power war, France creates space command

'விண்வெளி கட்டளையகம்' உருவாக்கம்: பிரான்ஸ் பெரும் வல்லரசு போருக்கு தயாரிக்கிறது

By Will Morrow 
31 July 2019

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் நிர்வாகம், ஒரு இராணுவ விண்வெளி கட்டளையகத்தையும் மற்றும் கோளப்பாதையில் செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுத அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் உருவாக்குவதற்கு அறிவித்தது. இந்த அறிவிப்பானது, அணுவாயுத அரசுகளுக்கிடையிலானது உட்பட, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய சக்திகளின் “பெரும் சக்திவாய்ந்த” போர்களைத் தொடுப்பதற்கான ஒரு இராணுவ தயாரிப்புக்களின் கட்டமைப்புக்கான சமீபத்திய படியாகும்.

ஜூலை 13 அன்று மக்ரோனால் சமிக்ஞை செய்யப்பட்ட உருவாக்கமான புதிய இராணுவக் கிளை, விமானப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும், இனிமேல் இது விமானம் மற்றும் விண்வெளிப்படை என்று அழைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி ஜூலை 25 அன்று லியோனில் உள்ள விமான தளம் 942 இல் 100 க்கும் அதிகமான விமானப்படை இராணுவ அதிகாரிகளின் முன்பு உரையாற்றியபோது இந்த புதிய படைப் பிரிவு பற்றிய விபரங்களை சுருக்கமாக விவரித்தார்.

“பாதுகாப்பதற்கு விண்வெளி ஒரு புதிய முன்னணி விடயமாக உள்ளது, எனவே நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்று பார்லி அறிவித்ததுடன், “விண்வெளி பொதுவானதாக மாறும் ஒரு நாளை நாம் நாடுகையில், அது ஒரு கற்பனை வடிவமாக நீண்ட காலத்திற்கு நீடிக்காது, அது ஒரு நம்பகமான இலட்சியமாக இருக்கும்” என்றார்.   


ஜூலை 25 அன்று லியோனில் விமானத் தளம் 942 இல் ஃப்ளோரன்ஸ் பார்லி [நன்றி : ஃப்ளோரன்ஸ் பார்லி]

கட்டளையக செயல்பாடுகளின் இந்த முதல் கட்டம், அருகிலுள்ள பிற செயற்கைக்கோள்களை அடையாளம் காண வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்ட புதிய தலைமுறை சைராகஸ் (Syracuse) செயற்கைக்கோள்களை அனுப்பும். இரண்டாவது கட்டத்தில், சுட்டு வீழ்த்துவதற்கான மிகவும் கடினமான நானோ செயற்கைக்கோள்கள் என்றழைக்கப்படுபவையும், மற்றும் அழிக்கும் அல்லது போட்டி செயற்கைக்கோள்களை திறனிழக்கச் செய்யும் திறன்வாய்ந்த துணை இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஒளிக்கதிர்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களும் அனுப்பப்படும்.

ஊடகங்களினால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்டதான இந்த அறிவிப்புகளின் வெளிப்படையான உட்குறிப்பு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற மோசடி பதாகையின் கீழ் இலக்கு வைத்து, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தவோ அல்லது பிரெஞ்சு செயற்கைக்கோள்களை அழிக்கவோ திறன் இல்லாத மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள வறிய மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், தங்களது நடவடிக்கைகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியுள்ள ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற இராணுவ ரீதியாக முன்னேறிய அணுவாயுத சக்திகளுக்கு எதிராகவும் போர்களைத் தொடுப்பதற்கு ஆளும் வர்க்கம் தயாரிப்பு செய்து வருகிறது.

இந்த பைத்தியக்காரத்தனமான முன்னோக்கு எந்தவொரு பொது விவாதத்திற்கும் முன்வைக்கப்படாமல், முற்றிலும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டின் விவாதங்களை தொகுத்து வழங்கிய Le Point பத்திரிகை “ஒரு விண்வெளி ஆயுதப் போட்டியில் இறங்குவதற்கு நாம் விரும்பவில்லை,” மாறாக “நியாயமான ஆயுதமயமாக்கலில்” தான் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்று பார்லி அமைச்சின் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியதை மேற்கோளிட்டுள்ளது.

உண்மையில், இந்த பிரெஞ்சு அறிவிப்பு விண்வெளி ஆயுதங்களின் அபிவிருத்திக்கு முக்கிய சக்திகள் அதிகரித்தளவில் திரும்புவதற்கு துரிதப்படுத்தும். ஆர்டிக் பகுதி முதல், மின்வெளி (cyberspace) மற்றும் விண்வெளி வரையிலான உலகின் ஒவ்வொரு பகுதியும், ஆளும் உயரடுக்கை போரை நோக்கி உந்தித் தள்ளும் வகையிலான மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை துரிதப்படுத்தும் வகையிலான முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் வரலாற்று வீழ்ச்சியின் மத்தியில் போரின் அரங்கமாக மாற்றப்பட்டு வருகிறது.

ஜூன் 2018 இல், விமானப்படையின் விண்வெளி கட்டளையகத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்கனவே 20,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை மேற்பார்வையிடவும் படையை விரிவுபடுத்தவும் புதிய “விண்வெளி படை” ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். மார்ச் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவதற்கு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அடுத்த மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று இரத்தத்தை உறையவைக்கும் வகையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்ததுடன், “நாம் இப்போது ஒரு விண்வெளி சக்தியாக உள்ளோம்” என்றும் பறைசாற்றினார். அத்துடன், இராணுவ சக்தியின் மூலம் தனது ஒப்பீட்டு பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்கு முனையும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் இரண்டு முக்கிய இலக்குகளாக உள்ள சீனாவும் ரஷ்யாவும், தங்களது சொந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புக்களை உருவாக்குகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் விடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பில் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை பீடித்திருக்கும் பரபரப்பு மற்றும் Dr. Strangelove-esque (டாக்டர். ஸ்ட்ரேஞ்லவ்-எஸ்க்) படத்தை போன்ற இராணுவவாத வெறி சுட்டிக்காட்டப்பட்டது. மக்ரோனின் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கண்டுபிடிப்பு நிறுவனம், எதிர்கால ஆயுத அமைப்புகளுடன் இராணுவம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்யவும் அதுபற்றி அறிவுறுத்தவும் செயலாற்றுவதான ஐந்து முதல் ஆறு அறிவியல் புனைகதை ஆசிரியர்களைக் கொண்ட ஒரு “சிவப்பு அணி”யை உருவாக்கியுள்ளது.

ஒரு பிரெஞ்சு விண்வெளிப் படையின் வளர்ச்சி என்பது, பாரிஸ் மற்றும் பேர்லின் தலைமையிலான ஒரு ஐரோப்பிய இராணுவத்தின் தலைமையை முன்னெடுத்துச் செல்வதற்கான மக்ரோனின் முயற்சியின் பாகமாக உள்ளது. அவர்களது நோக்கம், அமெரிக்காவிலிருந்து சுயாதீனமானதும், அதை எதிர்ப்பதும் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தை போரை நடத்தக்கூடிய ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதாகும். ஜேர்மனி, எந்தவித அணுவாயுதங்களையும் மற்றும் தனக்கென சொந்த செயலூக்கமிக்க விண்வெளி திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்ற நிலையிலும், அதேவேளை, பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலையிலும், தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய நீல-நீர் கடற்படையை கொண்டிருக்கும் ஒரே ஐரோப்பிய ஒன்றிய அணுசக்தி நாடாக பிரான்ஸ் உள்ளது.

சென்ற மாதம் புரூஸ்ஸெல்ஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் “2019-2024 க்கான மூலோபாய திட்ட நிரல்,” ஐரோப்பா “அதன் உலகளாவிய செல்வாக்கை பலப்படுத்த வேண்டும்” என்றும், “உலக நிகழ்வுகளின் போக்கில் செல்வாக்கைச் செலுத்த வேண்டும்” என்றும் “உண்மையான ஐரோப்பிய பாதுகாப்பு ஒன்றியத்தை நோக்கி முன்னேற வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறது.

கடந்த மாதம், அமெரிக்க பாதுகாப்புத் துறை கிட்டத்தட்ட 500 போர் விமானங்களை வாங்குவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு வாரம் கழித்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஒருங்கிணைந்த ஐரோப்பிய விமான போர் முறையை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஒரு புதிய போர் மட்டுமல்ல, கடற்படை மற்றும் நிலப் படைகள் தொடர்பான போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பையும் உள்ளடக்கிய இந்த திட்டத்தின் செலவு 100 பில்லியன் யூரோக்களை தாண்டும். 2050 க்குள் இது 500 பில்லியன் யூரோக்களை எட்டும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர்.

சென்ற மாதம், அண்ணளவாக 500 போர் விமானங்களை வாங்குவதற்கான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை எட்டிய ஒரு வாரத்திற்குப் பின்னர், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ஐரோப்பிய விமானப் போர் முறையை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த திட்டத்திற்கான செலவு —இதில் ஒரு போர் விமானம் மட்டுமல்ல, கடற்படை மற்றும் தரைப்படைகளுடன் இணைக்கப்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பும் உள்ளடங்கும்— 100 பில்லியன் யூரோக்களை விஞ்சும். 2050 ஆம் ஆண்டு வாக்கில், இது 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும் என்றும் சிலர் மதிப்பிடுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை பேசுகையில், மற்ற ஐரோப்பிய சக்திகளும் இந்த திட்டத்திற்கு பங்களிக்க வேண்டுமென பிரான்ஸ் எதிர்பார்ப்பதை பார்லி தெளிவுபடுத்தினார். “பிரான்ஸ் அதன் சுதந்திரத்தைக் கொண்டுள்ளது,” என்றாலும் “இந்த புதிய விண்வெளி மோதலில் அது தனித்துவிடப்படவில்லை” என்று கூறினார். “இப்படியாக நமது ஐரோப்பிய பங்காளிகளுடன் சேர்ந்து அண்டவெளி சார்ந்த அறிவின் எதிர்கால பொதுவான ஒரு திறனை நாம் கட்டியெழுப்புவோம்” என்றும் தெரிவித்தார். மேலும், செயற்கைக்கோள்களைக் கண்டறிந்து அடையாளம் காண்பதற்கான ரேடார் தொழில்நுட்பத்திற்கு ஜேர்மனியும் இத்தாலியும் பங்களிக்கும் என்றும், இதற்கிடையில், மொத்தம் 4.3 பில்லியன் யூரோ விமான மற்றும் விண்வெளி கட்டளையக வரவு-செலவுத் திட்டத்திற்கு, 700 மில்லியன் யூரோக்கள் மறுஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்ரோன் நிர்வாகம் பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவ செலவினங்களை உயர்த்தியுள்ளதுடன், தொடர்ச்சியான பெரும் ஆயுதத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் என்ற ஐரோப்பிய ஒன்றிய இலக்கின் ஒரு பாகமாக, ஓய்வூதியங்கள் நீங்கலாக, பிரான்ஸ் மொத்த இராணுவ செலவினங்களை 5 சதவிகிதம் அதிகரித்து 35.9 பில்லியன் யூரோவாக உயர்த்தியுள்ளது.

சென்ற மாதம், ஆறு சஃப்ரென் பிரிவு (Suffren-class) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் முதல் ஒன்றை மக்ரோன் வெளிப்படுத்திக் காட்டினார், ஒவ்வொன்றும் சுமார் 9 பில்லியன் யூரோ மதிப்பு கொண்டது. அதன் முன்னயவற்றினைக் காட்டிலும் சஃப்ரென், 45 நாட்களுக்குப் பதிலாக 70 நாட்கள் வரை நீருக்கடியில் மூழ்கியிருக்கும் என்பதுடன், 50 சதவிகிதத்திற்கு கூடுதலாக ஆயுதங்களையும் சுமக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இது, பிரான்சின் அணுவாயுத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கிகள் அத்துடன் உளவு பார்ப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து ஈடுபடும்.

போருக்கான பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பரபரப்புமிக்க மறுசீரமைப்பானது, ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் அமெரிக்க சமதரப்புடன் ஒப்பிடுகையில் ஒரு கனிவானது, மிகவும் இரக்கமானது என்பது போன்ற அனைத்து கூற்றுக்களின் மோசடியையும் அம்பலப்படுத்துகிறது. 1930 களில் இருந்து, முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் மீண்டும் போருக்கு தயாராகி வருகின்றன. இந்த அழிவுகரமான ஆயுத அமைப்புகளுக்கு நிதியளிக்க தேவைப்படும் பில்லியன் கணக்கான யூரோக்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் மற்றும் சமூக சிக்கனத்தை இடைவிடாமல் திணிப்பதன் மூலம் புழிந்தெடுக்கப்படவிருக்கின்றன.