ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK education system breaking apart after decade of cuts

தசாப்த கால வெட்டுக்களுக்குப் பின்னர் இங்கிலாந்து கல்வி முறை உடைகிறது

By Tom Pearce
22 April 2019

ஈஸ்டர் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆரம்பிக்கையில் பல இங்கிலாந்து பாடசாலைகள் முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கின்றன. சில ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறைகளை சுத்தம் செய்கின்ற அதேவேளையில் மற்றவர்கள் தமது உதவி ஊழியர்களின் வேலைகளை காப்பாற்றுவதற்காக சம்பள வெட்டுக்களை எதிர் கொள்கிறார்கள். ஒரு தசாப்த காலமான கல்வி நிதி வெட்டுக்கள், இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பாடசாலைகளை எவ்வாறு இயங்கச் செய்வது என்பது பற்றி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துடன் கல்வித் துறையில் நிதியுதவியின் பற்றாக்குறை, பெரிய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளுக்கு வழிவகுக்கிறது.

கடந்த தவணையில், தெற்கு லண்டனில் Wandsworth இல் உள்ள Furzedown ஆரம்ப பாடசாலையில், ஐந்து ஆசிரியர்கள், தங்கள் சக இரண்டு ஆசிரிய உதவியாளர்களின் வேலையைப் பாதுகாக்கும் நோக்கில் 7,000 பவுண்டுகள் வருடாந்த ஊதியக் குறைப்புக்கு முன்வந்த நிலைமை மிகவும் கொடியது.

பாடசாலையின் துப்பரவுத் தொழிலாளர்களில் ஒருவர் வேலையிலிருந்து விலகியமையாலும் அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கப் போதுமான பணம் இல்லாமையாலும், தலைமை ஆசிரியரான Monica Kitchlew-Wilson வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய மேல்வகுப்பு மாணவர்கள் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைமை ஆசிரியை ஒரு பயிற்சி பெற்ற குழாய் பொருத்துனரான அவரது கணவரிடம் கூட உதவி கேட்டார். பாடசாலை குறைவான புத்தகங்களை வாங்குவதோடு தகவல் தொழில்நுட்பத்திலும் பிள்ளைகளுக்கான சேவைகளில் குறைத்து முதலீடு செய்வதால், நடத்தை மற்றும் கற்றலில் கஷ்டங்களை உருவாக்குகின்றது.

பாடசாலைகள் அரச கல்வி வழங்கல் மற்றும் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நிதியளிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களில் தங்கியிருக்கிறது. ஆறு மாநில பாடசாலைகளில் ஒன்று, ஒரு மாதத்திற்கு 20 பவுண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நன்கொடைகளைக் கோரி ஏறத்தாழ 1.4 மில்லியன் மாணவர்களின் குடும்பங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சில பாடசாலைகள் நேரடியாக வங்கி மூலம் மாதாந்த உதவிக்கும் மற்றும் ஒரு தடவை உதவிகளையும் வழங்குமாறும் குடும்பங்களை கேட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 1,000 க்கும் அதிகமான பாடசாலைகள் இணையத்தினூடாக அனைவரையும் நிதியளிக்குமாறு கேட்டு நிதி திரட்டியுள்ளன.

பாடசாலை சமூகத்தால் திரட்டப்படும் நிதி, புதிய தொழில்நுட்பத்திற்காக பணம் செலுத்தவும், பாடசாலை விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இதைத் தவிர இதற்கு வேறு எதுவும் சாத்தியமில்லை. நிறப் பென்சில்கள், காகிதங்கள், பிசின் போன்ற உபகரணங்கள் தலைமை ஆசிரியர்களால் உள்ளூர் சமூகங்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் பெற்றுக் கொள்ளவது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது.

கடந்த வாரம் NASUWT கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஆய்வில், 20 சதவிகித ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை அடிப்படை வகுப்பறை பொருட்களை வாங்குவதற்குச் செலவழித்துள்ளதுடன் ஆய்வில் பங்குபற்றியோரில் ஏறத்தாழ அரைவாசியளவு ஆசிரியர்கள், ஏழை மாணவர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் அடிப்படை குளியலறைப் பொருட்களுக்கு பணம் செலுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் வகுப்பறைப் பொருட்களுக்காக 5,000 பவுண்டுகளை செலவிட்டதாக ஆசிரியர் ஒருவர் கூறினார்.

மிகவும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளையே வெட்டுக்கள் பாதித்தது. பாடசாலை வரவு-செலவுத் திட்டத்தின் வெட்டுக்கள் காரணமாக அவர்களுக்குப் பணத்தை ஒதுக்குவது கடினம் எனப் பாடசாலை கருதியமையால் பேர்மிங்ஹாமில் கிங்ஸ் ஹீத் பாடசாலையில் உள்ள ஊனமுற்ற பிள்ளைகள் பாடசாலையிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்கள். "சாத்தியமற்ற தெரிவுகள் மற்றும் சாத்தியமற்ற முடிவுகளை எடுக்க நாங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்" என்று ஆளுநர்களின் தலைவி Penny Colbourne கூறினார். உடல் நலம் குன்றிய பிள்ளைகளுக்கு சிறப்பு வள ஆதாரத்தை இல்லாமல் செய்வது "வருத்தமளிக்கின்றது" என்று பாடசாலையின் தலைவியான Shirley Hanson கூறினார்.

அடுத்த தவணையில் வரவிருக்கும் மேலும் 3 சதவிகித வீழ்ச்சியுடன் இங்கிலாந்தில் ஒரு மாணவனுக்கான நிதியுதவி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று நிதி கற்கை நிறுவனம் (IFS) வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது ஆரம்ப பாடசாலையில் ஒவ்வொரு மாணவனுக்கு தலா 130 பவுண்டுகள் வெட்டுக்கும் மற்றும் இடைநிலை பாடசாலையில் ஒவ்வொரு மாணவனுக்கு தலா 170 பவுண்டுகள் வெட்டுக்கும் வழிவகுக்கும். பெரும்பாலான பாடசாலைகளில் மேலும் இந்த நிதி குறைப்பின் தாக்கம் கல்விக்கான தரநிலையின் மீது பேரழிவுகரமான விளைவை உண்டாக்கும்.

2015 மற்றும் 2018 க்கு இடையில், இங்கிலாந்தின் பாடசாலைகளுக்கு நிதியளித்தல் 5.4 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறையை அடைந்தது என்று உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்து School Cuts Coalition காட்டுகிறது. இதன் விளைவாக, Yorkshire மாவட்டத்தில் 90 சதவீத பாடசாலைகள் பாதிக்கப்பட்டு மொத்தம் 481 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையுடன் Leeds நகரத்தில் மட்டும் 66 மில்லியன் பவுண்டுகள் குறைவு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான இடைநிலைப் பாடசாலைகளும் மற்றும் கிட்டத்தட்ட 30 சதவிகித ஆரம்ப பாடசாலைகளும் மத்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு தனியாரால் கட்டுப்படுத்தப்படும் கல்விக் கழகங்களாகச் -Academies- செயல்பட்டு வருகின்றன. இந்தகல்விக் கழகங்கள் 2000 ஆம் ஆண்டு பிளேயர் தொழிற், கட்சி அரசாங்கத்தின் திட்டம் ஆகும்.

பல கல்விக் கழகங்கள் சங்கிலிகளாக இயங்குகின்றன, அதாவது ஒரு கல்விக் கழக அறக்கட்டளை, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை இயக்கும். வெட்டுக்களை நிவர்த்தி செய்ய, அநேக கல்விக் கழகங்களின் அறக்கட்டளைகள் பணத்தை சேமிக்க தங்கள் பணியாளர்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதை பரிசீலித்து வருகின்றன.

Yorkshire இல் உள்ள 13 பாடசாலைகளை இயக்கும் கல்விக் கழக சங்கிலியான பிரட்போர்ட் டீஒசன் கல்விக் கழக அறக்கட்டளை (BDAT) கடந்த இலையுதிர்காலத்தில் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றுவதில் ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

அறக்கட்டளையை விட்டு வெளியேறும்போது ஆசிரியர்கள் கொடுக்கக் கூடிய அறிவிப்புக் காலத்திற்கு கூடுதல் மாதத்தை சேர்ப்பதை இந்த அறக்கட்டளை நோக்காகக் கொண்டுள்ளது. தற்போது, ஊழியர்கள் வெளியேறுவதற்கான அறிவிப்பை வழங்குவதற்கு பாடசாலை வருடத்தில் மூன்று தேதிகள் மாத்திரம் உள்ளன என்று நிபந்தனைகள் கூறுகின்றன. இந்த மாற்றம் "ஏப்ரல் நடுப்பகுதியில் ஊழியர்கள் அறிவிப்பை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குவதோடு, அவை கோடை தவணையின் இறுதியில் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தும்" என்கிறது. இதன் விளைவாக, ஆசிரியர்களுக்கு கோடை மாதங்களில் ஊதியம் செலுத்தப்படமாட்டாது. இதனால் அறக்கட்டளை ஆயிரக்கணக்கான பவுண்டுகளை சேமிக்கிறது. இது நிறைவேறினால், மற்ற கல்வி நிறுவனங்கள் இதைப் பின்பற்றும் மற்றும் வெட்டுக்களை பணி நிலைமைகளுக்கு பிற மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும்.

அதே நேரத்தில், சில அறக்கட்டளை சங்கிலிகள் சட்ட ரீதியாகவும், சட்டவிரோதமாகவும், நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோர் தொகையை வீணாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பழமைவாத தலைமையிலான அரசாங்கங்கள், தொடர்ச்சியாக ஒட்டுமொத்த கல்வி வரவு-செலவுத் திட்டங்களைக் குறைக்கும்போது, பாடசாலைகளை கட்டுப்படுத்தி மற்றும் பல அகாடமி அறக்கட்டளைகளை அமைப்பதன் மூலம் பல மில்லியன் கணக்கான பவுண்டுகளை சேமித்தன.

ஒரு Schools Week  விசாரணை படி, 2013 ஆம் ஆண்டு முதல் கல்வித்துறை "நிதி உதவியாளர் நிதியளிக்கும் தகமைக்கு 126 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமாக" ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016-17 கல்வியாண்டில், 5 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்ட பின்னர், "ஆறு அறக்கட்டளைகள் ஒன்றிணைந்து வழங்கிய 195,334 பவுண்டுகள் எந்த புதிய பாடசாலைகளுக்கும் வழங்கப்படவில்லை" என்று கண்டறியப்பட்டது.

"2015-16 இல் நிதியுதவி பெற்ற நான்கு அறக்கட்டளைகளை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். சவுத்மூர் அகாடமி அறக்கட்டளை, Brighter Futures, Keys Federation மற்றும் Zest அகாடமி அறக்கட்டளை ஆகியவை இவற்றுள் 293,045 பவுண்டுகளைப் பெற்றன" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது ஒரு பாடசாலை திறந்திருப்பதா அல்லது மூடுவதா என்ற நிலையில், இடையேயுள்ள வித்தியாசத்தை தீர்மானிப்பது வரி செலுத்துவோர் பணமாகும்.

உண்மையில் எதுவும் நடைபெறாத “northern hubs" என்னும் திட்டத்தை உருவாக்குவதற்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை வீணாகி விட்டன என்ற இந்த கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டில் முந்தைய Schools Week  விசாரணையை தொடர்ந்து வந்துள்ளது.

கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பவுண்டுகளை தமக்கிடையே பெற்ற Bright Tribe மற்றும் Wakefield City Academy Trusts போன்ற அதி உயர்ந்த திட்டங்களும் வீழ்ச்சியடைந்து விட்டன.

சில அகாடமி சங்கிலிகளில் ஒரு குற்றவியல் அளவிலான நிதியியல் ஊழலை "அகாடமி பாடசாலை ஊழல்," அம்பலப்படுத்தியது, ஆனால் குற்றவாளிகள் எந்தவொரு குற்ற விசாரணையையும் சந்திக்கவில்லை என்று கடந்த மாதம் ஒரு BBC1 Panorama ஆவணம் தெரிவித்தது.

இந்த தாங்க முடியாத சூழ்நிலையில் ஆசிரியர்களை இருத்தியுள்ளமை, கல்வி குறைப்புக்கள் வெட்டு அலைகளுக்கு எதிராக தங்கள் உறுப்பினர்களை அணிதிரட்டுவதற்கு எதுவும் செய்யாத தொழிற்சங்கங்களின் மீதான குற்றச்சாட்டாகும். மிகப்பெரிய, ஆசிரியர்களின் சங்கமான, தேசிய கல்வி சங்கம் (NEU), பாடசாலைகள் ஒரு "தேசிய அவசரநிலையை" எதிர்கொள்ளும் என்று சரியாக அறிவிக்கிறது. ஆசிரியர்கள் இதைப்பற்றி தெரிந்திருப்பது மட்டுமல்லாது எதிர்ப்பில், NEU அங்கத்தவர்கள் பல தடவை போராடுவதற்கு பல தடவை வேலைநிறுத்தத்திற்காக வாக்களித்துள்ளனர். இதற்கு மாறாக NEU உம் மற்றவர்களும் அவர்களின் போராடும் விருப்பத்தை ஒடுக்குகின்றனர். "வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் கவனித்துக் கொள்கிறார்கள், ஆனால் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தை அவர்கள் உணரத் தொடர வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை ஒரு வலைத் தளத்தில் பாடசாலை வெட்டுக்களைக் கவனிக்க அழைப்பு விடுகின்றன.

மற்ற அரசதுறை ஊழியர்களுடன் இணைந்து இங்கிலாந்து ஆசிரியர்களால் கடைசியாக நடத்தப்பட்ட தேசிய வேலைநிறுத்தம் அவர்களின் ஓய்வூதியங்களை பாதுகாப்பதற்காகும். இவை 2011 ல் இறுதியில் தொழிற்சங்கங்களால் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையால் இன்று ஆசிரியர்களும் மற்றைய அரசதுறை ஊழியர்களும் கூடுதலான பணம் செலுத்த வேண்டி இருப்பதுடன் சிறிய ஓய்வூதியத்திற்காக நீண்ட காலம் வேலை செய்ய வேண்டியும் உள்ளது.

ஜெர்மி கோர்பின் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கத்தை தேர்வு செய்யும் வரை ஆசிரியர்களைக் காத்திருக்குமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் தொழிற் கட்சித் தலைவரால் அறிவுறுத்தப்பட்டபடி, சமநிலைப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டங்களை அமைப்பதற்காக மில்லியன் கணக்கான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை தொழிற் கட்சி நகரசபைகள் மேற்கொள்வதால் கோர்பினால் தலைமை தாங்கப்படும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் "நிதிய பொறுப்புடையதாக" இருக்கும் என்பதை கோர்பின் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும், சமூகங்கள் மீண்டும் போராட தங்கள் சொந்த அமைப்புகளை அமைக்கின்றன. இந்த மாதம், St Matthew’s ஆரம்பப் பாடசாலை, பெற்றோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் பாடசாலையின் நிதியுதவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேம்பிரிட்ஜ் வழியாக அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் பாடசாலை வரவு-செலவுத் திட்டத்தில் பாடசாலை ஒரு 60,000 பவுண்டுகள் வெட்டுக்களை எதிர்கொள்ளும் என்று ஒரு பேரணி கேள்வி எழுப்பியுள்ளது. எங்கள் பாடசாலைகளுக்கு நிதியளியுங்கள் என்ற பிரச்சாரக் குழுவை பெற்றோர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலும் சர்வதேச அளவிலும் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் தொழிலாளர்களும் மற்றைய அரச ஊழியர்களுடனும் தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுமாறு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. தங்கள் தொழிற்சங்கங்களை மீறி நடவடிக்கை எடுப்பது போலந்தில் ஆசிரியர்களால் நடத்தப்படும் வேலைநிறுத்தங்கள் முன்னோக்கிச் செல்வதற்கான வழியைக் காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் முக்கியமானது, பொதுக் கல்வியை தகர்க்கையில் பழமைவாதிகள் தலைமையிலான பழமைவாத அரசாங்கங்களுடன் ஒரு தசாப்தங்களாக ஒத்துழைத்துள்ள தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியும் மற்றும் தொழில் இடங்களிலும் குடியிருப்புகளிலும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவது ஆகும்.