ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Paris steps up calls for coup in Venezuela

வெனிசுவேலாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான அழைப்பை பாரிஸ் அதிகரித்துள்ளது

By Alex Lantier 
6 February 2019

பிரதான ஐரோப்பிய சக்திகள் வெனிசுவேலாவின் "இடைக்கால ஜனாதிபதியாக" தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஜுவான் குவைடோவை (Juan Guaidó) அங்கீகரித்த பின்னர், பாரிஸ் ஆனது கராகஸ்ஸில் ஆட்சி மாற்றத்திற்கான அச்சுறுத்தல்களையும் அழைப்புகளையும் அதிகரித்துள்ளது. குவைடோவை ட்விட்டர் வழியாக ஜனாதிபதியாக அங்கீகரித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் வழிமுறைகளால் ஆச்சரியமடைந்து, பாரிஸ் மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் முற்றிலும் சட்டத்திற்கு புறம்பாக மூலோபாய மற்றும் எண்ணெய் வளம் நிறைந்த நாட்டை கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் வெனிசுவேலாவின் இறையாண்மையை கால்களின் கீழ் போட்டு மிதிக்கின்றது.

பிரெஞ்சு இராஜதந்திரிகள், ஊடகங்களுக்கு அதிகளவான அச்சுறுத்தல்களை ஊட்டுவதில் கடந்தகாலத்தில் கொண்டுள்ள வரலாறானது, ஜனாதிபதி நிக்கோலா மதுரோவைக் (Nicolas Maduro) கவிழ்ப்பதற்கு ஒரு தலையீட்டை பாரிஸ் ஆதரிப்பதை தெளிவாக்குகிறது. "தலையீட்டை விட அலட்சியமாக இருப்பது மோசமானதாக இருக்கும்," என ஒரு இராஜதந்திரி கூறினார். இன்னொருவர் Le Monde  இடம் ஐரோப்பிய சக்திகள் மதுரோ பதவி விலகுவதற்கு எட்டு நாட்கள் இறுதி காலக்கேடு கொடுத்துள்ளன. "நிக்கோலா மதுரோ தான் கோர்பச்சேவ் (Gorbachev) ஆகவோ அல்லது பஷார் அல் அசாத் (Bashar al-Assad) ஆகவோ இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவை முற்றுகையிடவும், நாட்டை ஆக்கிரமிக்கவும் அச்சுறுத்துகிறது. பிரேசிலின் தீவிர வலதுசாரி அரசாங்கம் எதிரொலிக்கும் ஒரு அச்சுறுத்தல், இந்த அச்சுறுத்தலின் தாக்கங்களை தவறாக எடுக்க முடியாது என்பதை காட்டுகின்றது. வெனிசுவேலாவை ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு மதுரோ கையளிக்க வேண்டும் அல்லது வல்லரசுகளி்ன் தலையீட்டுடன் சிரியாவில் நடந்தது போன்ற நூறாயிரக்கணக்கானோர் இறந்த பினாமிப்போர் போன்ற ஒன்றில் இலக்கு வைக்கப்படலாம்.

பெருகிவரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்களை அடக்குவதற்கு அவர்கள் முகங்கொடுத்து நிற்கையில், வெனிசுவேலாவிற்கு எதிரான ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களை எதிர்ப்பது பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அது முற்றுகையிடப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது, அதன் நாணய பெறுமதி வீழ்ச்சியால் பணவீக்கம் அதிகரித்தமை மற்றும் பரந்தளவான உழைக்கும் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதை எதிர்கொள்கிறது. ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் ஒரு இடைவிடா ஆத்திரமூட்டல் பிரச்சாரத்திற்கு வெனிசுவேலா இலக்கு வைக்கப்படுகிறது.

France Inter உடன் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், மதுரோவின் நீக்கமும் அவரை குவைடோவால் பதிலீடு செய்வதும் அவசியம் என்று கூறினார்: "சுதந்திரமான தேர்தல்கள் மட்டுமே நாட்டிற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட அதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்க அனுமதிக்கும்" என்று கூறினார். வெனிசுவேலாவில் நிலைமை இன்னும் சுலபமாகி, தெளிவுபடுத்தவும், அமைதியாகவும் செயல்பட ஜனாதிபதி தேர்தலை நடாத்த ஜனாதிபதி மதுரோ மறுத்துவிட்டார் என்றும், அத்தகைய தேர்தல்களை ஒழுங்கமைக்கும் திறன் மற்றும் சட்டபூர்வமான தன்மையை திரு.குவைடோ கொண்டுள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

வெனிசுவேலாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சட்டபூர்வமான தன்மையை குவாடோ கொண்டுள்ளார் என்ற கூற்று அபத்தமானது. ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சிக்கு முன்னர் அரசியல்ரீதியாக அறியப்படாத ஒரு 35 வயதான வலதுசாரி கையாளான குவைடோவிற்கு அமெரிக்க அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED) ஆகியவற்றால் ஆதரவளிக்கப்பட்டு நிதியுதவி அளிக்கப்பட்டது. இவை இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் சிஐஏ தலையீடுகளுக்கான ஒரு நீண்டகால முன்னணி அமைப்பாகும்.

ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் நோக்கம், ஜனநாயகத்தை மீட்டெடுப்பது அல்ல, மாறாக நாட்டை கொள்ளையடிப்பதாகும். தற்போது ரஷ்யா மற்றும் சீனாவுடனான இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவுகளை கொண்ட நாட்டின் தலைவருக்கு பதிலாக அமெரிக்க ஆதரவான ஒருவரை பதவியில் இருத்தும் மூலோபாய நோக்கங்களை ட்ரம்பின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் மறைக்கவில்லை. கடந்த மாதம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஃபாக்ஸ் நியூஸ்க்கு அளித்த பேட்டியில் "அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் வெனிசுவேலாவில் உள்ள எண்ணெய் திறன்களில் முதலீடு செய்து உற்பத்தி செய்ய முடியுமானால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

ட்ரம்பை தொடர்ந்து, ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு குவைடோவுக்கு ஆதரவளிக்க தலையிடுவதற்கு அதன் எவ்வித அடித்தளமுமற்ற பாசாங்குத்தனத்தை பயன்படுத்துவதை ஒரு பாரபட்சமற்ற ஜனநாயக செயல் என்று சித்தரிக்கிறது. வெனிசுவேலா அரசியலில் தலையிடுவது தொடர்பாக France Inter  இல் வினவப்பட்ட போது லு திரியோன் அதை வெறுமனே மறுத்து, அதனை "அழைப்புக்கு" அல்லது "உதவிக்கான கோரிக்கைக்கு" ஒரு பிரதிபலிப்பாக அறிவித்தார்.

இதற்கிடையில், ஐரோப்பிய பத்திரிகைகள்: ட்ரம்பினால் தொடங்கப்பட்ட ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்து அவர்கள் வெனிசுவேலாவின் இறையாண்மையை கால்களின் கீழ்போட்டு மிதிக்கின்றனர் என்பதை வெளிப்படையாகக் குறைத்துக்காட்டி அல்லது கடுமையாக மறுத்து வருகின்றன. “மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரங்கள், பாரிஸ் உட்பட, வாஷிங்டனுடன் இணைந்து செயல்படுவதாக தோன்றுகிறது” என்று Le Monde பத்திரிகை எழுதியது. ஸ்பெயினின் El Pais  பத்திரிகை: "ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் அறிவிப்பு சட்டபூர்வத்தன்மை மீதான ஒரு முறிவு அல்ல. ஆனால் துல்லியமாக இடைக்கால ஜனாதிபதியை அது மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சி ..." என்று வலியுறுத்தியது.

இரு பத்திரிகைகளும் அவற்றின் கொள்கையானது, குவைடோவை அதிகாரத்தில் நிறுவுவது ஒரு சிறந்த வழியாகும் எனக் கூறி ட்ரம்ப்பில் இருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றன. வெனிசுவேலாவை அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு எதிராக அழைப்பு விடுப்பதன் மூலம் அவர்கள் உண்மையில் அவரின் இலத்தீன் அமெரிக்க கொள்கைக்கு எதிராக போராடுவதாகக் கூறி வருகின்றனர்.

El Pais பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் "குவைடோவுக்கு ஆதரவளி" என்பதன் கீழ் பின்வருமாறு எழுதியது: "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்கிரமிப்பு வார்த்தையாடல்கள் வெனிசுவேலாவில் ஜனநாயகம் திரும்புவதற்கு விரும்பும் எவருக்கும் உதவவில்லை. மாறாக, அது நிக்கோலா மதுரோ மற்றும் அவரது ஆதரவாளர்களை பலப்படுத்துகிறது. வாஷிங்டனின் ஒரு சாத்தியமான இராணுவத் தலையீட்டிற்கான தொடர்ச்சியான அழைப்புக்கள் சர்வதேச ரீதியான அக்கறையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகியவை அவற்றை தெளிவாக எதிர்கொள்ள வேண்டும். இது ஒரு சிவப்பு கோடு. இது எந்த விதத்திலும் கடக்கப்படலாகாது. 20 ஆம் நூற்றாண்டு இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கத் தலையீடுகளின் முடிவாகும்.”

Le Monde ஆசிரியர் தலையங்கத்தில், "வெனிசுவேலா: ஆதரவளிக்கவேண்டும் தலையிடவேண்டாம்" என்று அது ஒரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திக் கூறியது: "வெனிசுவேலா இராணுவம் இப்போது முகாமை மாற்றிக்கொள்ளவில்லை என்பதே முக்கிய காரணியாகும். திரு குவைடோ அவர்களுக்கு நம்பிக்கையூட்ட அவரது முயற்சிகளை தொடர வேண்டும்" என்று கூறியது.

ஆயினும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு அமெரிக்க மோதல் ஆபத்துப்போல, பிரேசிலில் உள்ள ஜயிர் போல்சொனாரோவின் பாசிச ஆட்சி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், மெக்சிக்கோவின் ஜனரஞ்சகவாத ஆண்டெர்ஸ் மானுவல் லோபஸ் ஒபிரடரின் அரசாங்கத்தின் தேர்வினாலும் இலத்தீன் அமெரிக்காவில் அரசியல் வெடிக்கும் நிலைமையை Le Monde சுட்டிக்காட்டியது. "இந்த ஸ்திரமற்ற சூழ்நிலையில், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்: அதாவது ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவத் தலையீடு, ஒரு பெரும் பிழையாக இருக்கும்" என்றும் அது குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியம் முன்வைக்கும் இத்தகைய முயற்சிகள், ட்ரம்பை விட ஒரு அடிப்படையில் வித்தியாசமான, மிகவும் பொறுப்பான மற்றும் குறைவான ஆக்கிரோஷமான கொள்கையை முன்னெக்கும் என்பது அடிப்படையில் தவறானதாகும். ஏனெனில் இவை முக்கியமாக, அவர்களது கொள்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பற்றிய தங்கள் கவலையயினாலேயே முக்கியமாக உந்தப்படுகின்றன.

திரைக்கு பின்னால் வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சந்தேகத்திற்கு இடமி்ன்றி சக்திவாய்ந்த ஏகாதிபத்தியத்திற்கிடையிலான போட்டிகள் வெடித்துள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் இருந்து இலாபத்தையும் எண்ணெயையும் எடுப்பதற்கான போராட்டம் குறிப்பாக, ஜேர்மனியின் கார் ஏற்றுமதிகள் மீதான வரிகள் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக யுத்த நடவடிக்கைக்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களைப்போல் கசப்பானவையே. அதே சமயம் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரதான முதலீட்டாளராக ஐரோப்பாவின் பங்கையும் அச்சுறுத்துகின்றது. வெனிசுவேலாவில் பேரழிவுகரமான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை பற்றி ஐரோப்பிய சக்திகள் சந்தேகத்திற்கு இடமின்றி அச்சம்கொண்டுள்ளன.

போர்கள் மற்றும் சதிகளை எதிர்ப்பதாக ஐரோப்பிய சக்திகள் காட்டிக்கொள்வது ஒரு அரசியல் பொய்யாகும். 21 ம் நூற்றாண்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய இரத்தம்சிந்துதலின் கடுமையான எழுச்சியை கண்டது; மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் மேற்குக் கோளப்பகுதி ஆகியவற்றில் போரினால் அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீடு ஹைட்டியில் இருந்து கொலம்பியா வரை நடந்தது. வாஷிங்டனுடனான முரண்பாடுகள் எவ்வளவு கசப்பானவையாக இருந்தாலும், ஐரோப்பிய சக்திகள் ஆப்கானிஸ்தான், ஈராக், மாலி, சிரியா, லிபியா மற்றும் அதற்கும் அப்பால் துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளன. வெனிசுவேலாவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான ஐரோப்பிய சக்திகளின் ஆதரவு அவர்கள் சட்டவிரோதத்தன்மையில் முற்றாக இறங்கியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.