ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands attend right-wing, anti-Catalan protest in Madrid

மாட்ரிட்டில் கட்டலான் எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான வலதுசாரிகள் கலந்து கொள்கின்றனர்

By Alejandro López 
11 February 2019

ஞாயிறு அன்று, ஸ்பெயினின் பிரதான வலதுசாரிக் கட்சிகளால் மாட்ரிட் பிளாஸா டு கொலோனில் (Plaza de Colon) ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டனர். ஸ்பெயின் முழுவதிலும் இருந்து வலதுசாரி ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டுவருவதற்காக மக்கள் கட்சி (Popular party), சிற்றிசன் கட்சி, மற்றும் வலதுசாரி வோக்ஸ் (far-right Vox party) கட்சிகள் நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஒழுங்குபடுத்தியிருந்தன. கட்டலான் தேசியவாதிகளுடன் சமூக ஜனநாயகக் கட்சி பிரதமர் பெட்ரோ சான்சேஸ் இன் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, அவரைப் பதவியிலிருந்து “தூக்கி எறிய”  ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு  விடுக்கின்றனர்.

வலதுசாரி அரசியல்வாதிகளின் உரைகளை செவிமடுப்பதற்காக 20,000 க்கும் 45,000 க்கும் இடைப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் நவ-நாஜி ஹோகர் சமூகம் (Social Home); ஸ்பானிஷ் ஃபலாங் (Spanish Falange); எஸ்பான்னா 2000 (España 2000); மற்றும் ஸ்பெயினின் பிரதான பொலிஸ் தொழிற்சங்கமான ஐக்கிய பொலிஸ் யூனியன் (United Police Union) போன்ற குழுக்களும் பங்கேற்றன. இந்த ஐக்கிய பொலிஸ் யூனியனின் பங்கு போராட்டத்தை ஊக்குவிப்பதிலும், பரந்த நவ-பாசிச, கட்டலான் எதிர்ப்பு கிளர்ச்சியின் எழுச்சியில் அரச இயந்திரத்தின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

12 கட்டலான் பிரிவினைவாத தலைவர்கள் நாளை விசாரணைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளர்ச்சி செய்ததற்காகவும் மற்றும் 2017 கட்டலான் சுதந்திர சர்வஜனவாக்கெடுப்பை ஏற்பாடு செய்ய பொது நிதியை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றின் மீது 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்நோக்குகின்றனர். இருப்பினும், சான்சேஸின் சிறுபான்மை ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) அரசாங்கம், பொடெமோஸ் (Podemos) மற்றும் கட்டலான் தேசியவாதிகளின் பாராளுமன்ற ஆதரவுடன் இந்த வாரம் தனது வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தேர்தல் நடாத்தப்படுமானால் மக்கள் கட்சியும், சிற்றிசன்ஸ் கட்சியும் வெற்றியடையலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் இவ்வார ஆரம்பத்தில் வலதுசாரி தகவல்சாதனங்களின் உதவியுடன் மக்கள் கட்சியும், சிற்றிசன்ஸ் கட்சியும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்க பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. இதனால் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை பதவியிறக்கக்கூடும். மக்கள் கட்சி தலைவரான பாப்லோ காஸாடோ (Pablo Casado), கட்டலான் பிரிவினைவாதிகளுடன் வரவு-செலவுத் திட்டத்தை விவாதிப்பதற்காக சான்சேஸ் செய்தது "பெரும் தேசத்துரோகம்" என்று குற்றம் சாட்டினார். சான்சேஸை ஒரு போதைப்பொருள் கடத்துபவருடன் ஒப்பிட்டு, சான்சேஸ் "ஒரு குற்றவியல் நடவடிக்கையை செய்கிறார், அவர் ஸ்பானிய ஜனநாயகத்தின் ஜனநாயகத் தொடர்ச்சிக்கு எதிரான ஒரு குற்றவாளி" என்று குறிப்பிட்டார்.

சிற்றிசன்ஸ் கட்சியின் தலைவர் ஆல்பேர்ட் ரிவேரா, "கருத்தியல் அல்லது சுருக்கெழுத்துக்களுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக" அழைப்பு விடுத்தார். "நாங்கள் சான்சேஸை தெருக்களில் நிறுத்த வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

கட்டலான் தேசியவாதிகளுடன் ஒரு பேச்சுவார்த்தையை உருவாக்கும் நோக்கம் கொண்டு திட்டமிடப்பட்ட கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு "மத்தியஸ்தரை" சேர்க்க PSOE அரசாங்கத்தின் முடிவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கான போலிக்காரணமாக இருந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவான சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் ஸ்பெயினின் 2019 வரவு-செலவுத் திட்டத்தை அவர்கள் தடுக்க முடியும் என்று அறிவித்த பின்னர்தான், வரவிருக்கும் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தேசியவாதிகளின் ஆதரவைப் பெறுவது PSOE இன் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த "மத்தியஸ்தர்" என்பது கட்டலான் தேசியவாதிகளின் நீண்டகால கோரிக்கை ஆகும்.

அதன் பின்பு விரைவில், ஸ்பெயினின் EFE செய்தி நிறுவனத்திடம் காஸாடோ கூறினார், பிப்ரவரி 23, 1981 தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு பின்னர், மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பது ஸ்பெயினின் "மிகமோசமான நிகழ்வு" என்று கூறினார். இதன்போது 200 க்கும் அதிகமான சிவில் காவலர்கள் இயந்திர துப்பாக்கிகளுடன் ஆயுதமேந்தி பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் 18 மணிநேரத்திற்கு தமது பிணைக்கைதியாக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். காசோடோ, சான்சேஸை "ஸ்பானிய ஜனநாயகத்தின் வரலாற்று தொடர்ச்சிக்கான பெரும் துரோகி" என்றும் ஒரு "குற்றவாளி" என்றும் அவரது அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும் கூறுகிறார்.

காஸாடோவின் கருத்துக்கள் PSOE நிதி அமைச்சர் மரியா ஜேசுஸ் மோன்ரேரோவைத் தூண்டியது. அவர் காஸாடோவின் வார்த்தைகள் "ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தை நினைவுபடுகின்றது" என்றார்.

PSOE அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் சான்சேஸை தாக்கினார்கள், எனினும். காஸ்டிலா-லா மன்ச்சா (Castilla-La Mancha) பிராந்திய பிரதமர் எமிலியோ கார்சியா-பேஜ், சான்சேஸ் "அரசியலமைப்பை பாதுகாத்து, தனது பங்கைக் ஆற்ற வேண்டும்” என்றார். அராகோன் (Aragón) பிராந்திய பிரதமர் ஹாவியர் லம்பான் (Javier Lambán), "வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பது, அரசியலமைப்பு சலுகைகள், ஸ்பெயினின் ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி அல்லது கண்ணியம் ஆகியவற்றிற்றை கேள்விக்குரியதானதாக்காது" என்று கூறினார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாசிச ஆட்சியை கொண்டிருந்து இன்னும் பசுமையாக நினைவில் இருக்கையில் ஸ்பெயினில் இவ்வாறான ஒரு அதிவலதுசாரி ஆர்ப்பாட்டத்தை நடாத்துவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். வலதுசாரி மற்றும் நவ பாசிச கட்சிகள் பாரிய ஆதரவைக் கொண்டிருக்கவில்லை, அவை அரச எந்திரத்தின் நேரடியான ஆதரவில் தங்கியிருக்கின்றன. எவ்வாறாயினும், ஸ்பெயினின் ஆளும் உயரடுக்கு 2017 ஆண்டு கட்டலான் வாக்கெடுப்பை பயன்படுத்தி அரசியல் வாழ்க்கையை மறுகட்டமைப்பதையும் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைக்கு நகர்வதைப் பற்றி உலக சோசலிச வலைத் தளம் எடுத்த மதிப்பீட்டை நிகழ்வுகள் உறுதிப்படுத்துகிறது.

ஸ்பெயினின் அனைத்து முக்கிய முதலாளித்துவக் கட்சிகளும், சர்வதேச அளவிலும் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பையும் வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் கண்டு அஞ்சுகின்றன. அண்டை நாடான பிரான்சில் பெருமளவில் தொழிலாள வர்க்கத்தின் "மஞ்சள் சீருடை" போராட்டம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தை தமது அடிபணிடய செய்கின்றன. அத்துடன், இத்தாலியில் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை நூறாயிரக்கணக்கானோர் எதிர்க்கின்றனர். ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதம் மட்டும், ஸ்பெயினின் வணிக கூட்டமைப்பின் (CEOE) படி, 49 வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன, இதனால் 2.9 மில்லியன் வேலை நேரங்களை இழக்க வேண்டி ஏற்பட்டது. CEOE இன் கணக்கீட்டின் படி, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 622% ஆல் அதிகரித்தது, அத்துடன் வேலைநிறுத்தங்களால் இழந்த மணிநேர அளவு 575% ஆல் அதிகரித்தது. இதில் பெரும் பகுதி நாடு தழுவிய டாக்சி வேலைநிறுத்தத்திற்கு உரியது.

எனினும், ஸ்பெயினில் எந்த அரசியல் அமைப்பும் தொழிலாள வர்க்கத்தின் PSOE அரசாங்கத்திற்கு பெருகிவரும் எதிர்ப்பைப் பற்றி பேசுவதற்கு இல்லை. "இடதுகளுக்குள்" ஆதிக்கம் செலுத்துவது என்னவெனில், போலி-இடது பொடேமோஸ் மற்றும் அதன் பல்வேறு குட்டி முதலாளித்துவ நட்பு கூட்டுகளினதும் மற்றும் கட்டலான் மற்றும் பாஸ்க் தேசியவாத கட்சிகளின் அரசியல் ஆகும். அவர்கள் பெரும்பாலும் PSOE ஐ சார்பான மாநில கட்சிகள் ஆகும். அவர்கள் அதிகரித்து வரும் வலதுசாரி மற்றும் சர்வாதிகார சக்திகளின் செல்வாக்கை விட தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் சமூக எதிர்ப்பை பற்றியே அதிகம் அஞ்சுகின்றனர்.

அரசாங்கத்தில் PSOE போன்றே இந்த சக்திகள் அனைத்தும் தீவிர சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ்-அரச ஆட்சிக்கு உந்துதலுடன் ஒத்துழைக்க உதவுகின்றன. நேற்று, சான்சேஸ் கூறினார், தான் ஆர்ப்பாட்டத்தை "மதிக்கிறேன்", ஆனால் மக்கள் கட்சி மற்றும் சிற்றிசன்ஸ் கட்சியில் இருந்து "விசுவாசத்தை" கோருகிறேன் என்றார். சான்சேஸ் பின்னர் PSOE ஆனது மரீயானோ ரஹோய் (Mariano Rajoy) இன் மக்கள் கட்சி அரசாங்கத்தை விசுவாசமாக ஆதரித்தமையை நினைவு கூர்ந்தார். கட்டலான் சுதந்திர வாக்கெடுப்புக்கு எதிராக போலீசை அனுப்பி வாக்கெடுப்பு நிலையங்களை நொருக்கி, கட்டலான் சுய அரசாங்கத்தை இடைநிறுத்தியமை, மற்றும் அரசியல் கைதிகள் கலகம் மற்றும் கிளர்ச்சி குற்றச்சாட்டுகளில் கட்டலான் அரசியல்வாதிகளை சிறையில் இட்டமை போன்றவற்றை நினைவு கூர்ந்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன், பிரதி பிரதமர் கார்மென் கால்வோ வலதுசாரிகளை சமாதானப்படுத்த முயன்றார், PSOE ஒரு "நிருபரையே" தவிர "ஒரு மத்தியஸ்தரை அழைக்கவில்லை" என்று கூறினார். அந்த நபர், "குறிப்புகளை எடுக்க முடியும், கூட்டங்களுக்கு எங்களை அழைக்க முடியும், ஒருங்கிணைக்க முடியும்" என்று அப்பெண்மணி மேலும் சேர்த்துக்கொண்டார்.

வெள்ளியன்று, PSOE அரசாங்கம் அது பின்வாங்குவதாக அறிவித்தது. கால்வோ, கட்டலான் பிரிவினைவாதக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன என்றும் மாட்ரிட் இன்னும் முன்மொழிவுகளை செய்யவில்லை என்றும் கூறினார். "இந்த அரசாங்கம் முடிந்தவரை பல பாலங்களை உருவாக்க உறுதியான முடிவை எடுத்தது, ஆனால் இப்போது நாம் உருவாக்கிய கட்டமைப்பானது சுதந்திர சார்பு கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று கால்வோ கூறினார்.

"ஒரு வரவு-செலவு திட்டம் இல்லாமல், அரசியல் எனும் சொற்பதம் குறைக்கப்பட்டுவிடும்," புதன்கிழமை கட்டலான் தேசியவாதிகள் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை ஏற்க மறுத்தால், இது காலத்திற்கு முந்தைய தேர்தல்களைத் தூண்டிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

பொடேமோஸ் வலதுகளை மட்டுமே பலப்படுத்தியுள்ளது. இது, கடந்த ஆண்டு அரசாங்கத்தில் PSOE ஐ அமர்த்துவதில் தலைமை வடிவமைப்பாளராக இருந்தது. கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிரான சான்செஸின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு தங்களை ஏற்புடையதாக செய்து கொண்டது. இப்போது, ​​PSOE தேர்தல்கள் ஒத்திவைக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி விவாதிக்கையில் PSOE உடனான வரவு-செலவுத் திட்ட உடன்படிக்கையுடன் அதிகளவில் ஒட்டிக்கொண்டு, இது பொடெமோஸ் தன்னால் PSOE இனை இடது நோக்கி தள்ளுவதற்கு ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பதை காட்டுவதாக Público குறிப்பிட்டது.

நிகழ்வுகள் மீண்டும் கட்டலானிய தேசியவாதிகளின் வங்குரோத்தினை வெளிப்படுத்திக்காட்டுகின்றன. மேலும் அவர்கள் PSOE இன் சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவுவதற்கு உதவினார்கள்.

கட்டலான் ஜனாதிபதி காயிம் ரோறா ஞாயிறன்று, தேசியவாதிகளுடனான பேச்சுவார்த்தையை "மறுபரிசீலனை" செய்யுமாறு சானெஸ்சைக் கேட்டார். "நாங்கள் அவருடன் பேசுவதற்கு மேசையில் காத்திருக்கிறோம்" என ரோறா கூறினார்.

கட்டலான் தேசியவாதிகள், பேச்சுவார்த்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே வரவு-செலவு திட்டத்தில் இரத்துச்செய்யும் அதிகாரத்தை பயன்படுத்த அச்சுறுத்தியுள்ளனர். மற்றும் PSOE பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கவில்லை. La Vanguardia பத்திரிகை, கட்டலான் தேசியவாதிகள் "வரவு-செலவுத் திட்டம் புதன்கிழமையாக இருப்பதால், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வரை பேச்சுவார்த்தையை தொடர நேரம் இருப்பதாக கணிப்பிட்டனர்" எனக் குறிப்பிட்டது. PSOE தொடர்ச்சியாக கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகளை சிறையில் அடைத்துள்ளபோதிலும் தனது சிக்கன நடவடிக்கைக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு கட்டலான் தேசியவாதிகளை ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கும் முயற்சியில் தனது அரசாங்கத்தின் உயிர்வாழ்க்கையை பந்தயத்தில் வைத்திருக்கின்றது போல் தோன்றுகின்றது.