ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian court dismisses Maruti Suzuki workers’ bail application

இந்திய நீதிமன்றம் மாருதி சுசுகி தொழிலாளர்களின் பிணை மனுவை நிராகரிக்கிறது

By Keith Jones 
23 October 2018

ஆயுள் தண்டனை விதிக்க பட்ட 13 மாருதி சுசுகி தொழிலாளர்களில் 3 பேர் தங்களது மேல் முறையீடு விண்ணப்பம் விசாரணைக்கு வரும் வரையில் பிணையில் விடுவிக்கும்படி கேட்டு தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்கள் அலட்சியமாக நிராகரித்து தூக்கி வீசின.

அக்டோபர் 12, வெள்ளிகிழமை அன்று, தன் முன்னிலையில் வந்த தொழிலாளர்களின் பிணைக்கான கோரிக்கையை ஈவிரக்கமற்று உயர் நீதிமன்ற நீதிபதி எ.பி.சௌதிரி நிராகரித்தார். ஜாமின் கோரிக்கைக்கு ஆதரவான எந்த வாதங்களையும் கூட அவர் கேட்க தயாராக இல்லை.

சண்டீப் திலொன், சுரெஷ் துல் மற்றும் தன்ராஜ் பாம்பி ஆகியோருக்கு ஆதரவாக வாதாடும் இந்தியாவின் முன்னணி குடிஉரிமை பாதுகாப்பு வழக்கறிஞரான ரெபேக்கா ஜான், அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களே இந்த தொழிலாளர்கள் என்பதை எடுத்து காட்டும் வகையில் மலையளவு ஆதாரங்களை அடிக்கி முன்வைத்தார்.

ஆனால் நீதிபதி இதை எதையும் பொருட்படுத்தவில்லை.

மாருதி சுசுகி நிர்வாகத்தோடு இணைந்து தொழிலாளர்களுக்கு எதிராக ஆதாரங்களை போலிஸ் பொய்யாக சித்தரித்து இருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத அளவு ஆதாரங்கள் இருக்கிறது. நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்டு தொழிற்சாலையில் எற்பட்ட கலவரத்தின் இடையில் ஜுலை 18, 2012 அன்று, எற்பட்ட மர்மமான தீயிற்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த தீயால் எற்பட்ட புகையை சுவாசித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் உயிர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜான் ஆரம்பிப்பதற்கு முன்பே நீதிபதி சௌத்ரி அவரை முடக்கி அமரவைத்து விட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில், ஆறு ஆண்டு சிறை தண்டனையை முன்பே அனுபவித்த தொழிலாளர்களில், 3 பேரின் பிணை மனுவை நீதிபதி நிராகரித்தார்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த 13 தொழிலாளர்கள், இந்திய ஆளும் வர்க்கத்தால் ஒரு முன்னுதாரணமான தண்டனைக்கு குறிவைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் குறைந்த ஊதியம், சுரண்டப் படும் சுழ்நிலை மற்றும் ஒப்பந்த முறை ஆகியவற்றுக்கு எதிராக ஹரியானா மனெசரில், ஜப்பானை சேர்ந்த வாகனம் தயாரிக்கும் ஆலையில் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தது தான்.

இந்த போராட்டம், இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு அருகில் இருக்கும் மிக பரந்த தொழிற்குழுமங்கள் நிறைந்த குர்கான் மானெசர் தொழிற்சாலை வட்டத்தில், தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்திற்கான குவிமைய புள்ளியாக மாறி இருக்கிறது.

அந்த 13 தொழிலாளர்களில் 12 பேர் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) MSWU அலுவலக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, நிர்வாகத்துக்கு சார்பான தொழிற்சங்கத்துக்கு எதிராக, 2011-12 ஆகிய காலங்களில் உக்கிரமான போராட்டங்கள் மற்றும் ஆலை உள்ளிருப்புகள் மூலமாக தொழிலாளர்கள் MSWU என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கினர்.

வேறு வழியின்றி நிர்ப்பந்ததின் காரணமாக MSWU வை அங்கீகரித்த அடுத்த நான்கு மாதத்திற்குள்ளாக, மாருதி சுசுகி நிர்வாகம் போலிஸ் மற்றும் காங்கிரஸ் தலைமைலான ஹரியான அரசாங்கத்தோடு இணைந்து தொழிலாளர்களை திருப்பி அடித்தது.

ஜுலை 12, 2012 அன்று நடந்த சம்பவங்களை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட MSWU போராளித் தொழிலாளர்களை கைது செய்தது மட்டும் இல்லாமல், 2,400 தொழிலாளர்களை அதாவது ஒட்டுமொத்த தொழிலாளர் படையை வீட்டுக்கு அனுப்பியது.

மாருதி தொழிலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு, இந்திய மற்றும் சர்வதேச தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்தின் பாகமாக WSWS (உலக சோசலிச வலைத் தளம்) இந்த ஜோடிப்புகளை மிக தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆனால், 148 தொழிலாளர்கள் மீது கொலை மற்றும் பயங்கரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தி ஆரம்பிக்கப்பட்ட போலிஸின் விசாரணைகளும், மற்றும் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஆரம்பம் முதலே போலியானவையாகவும் உண்மைக்கு புறம்பாகவும் இருந்தது.

அந்த கலவரத்தில் தொழிலாளர்கள், ஆயுதமாக வாகனத்தின் எந்த பாகத்தை பயன்படுத்தினார்கள் என்பது உட்பட அவர்கள் தரப்பு வாதத்தை போலிஸும் நிர்வாக தரப்பும் வழக்கில் தொடர்ந்து மாற்றி மாற்றி கூறினார்கள்.

வழக்கின் முக்கிய அதாரங்களை தரும் கைரேகை சோதனை மற்றும் தடவியல் சோதனை ஆகியவற்றை போலிஸ் நடத்த தவறியதை தொழிலாளர் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர்.

எதிர்தரப்பின் வாதத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் தொடர்ச்சியின்மை ஆகியவற்றை மறைக்க, வழக்கை விசாரிக்கும் நீதிபதியான ராஜிண்டர் பால் கொயல், சட்டத்தை மாற்றி, குற்றமற்றவர் என்று நிருபிக்கும் பொறுப்பை தொழிலாளர் மேல் சுமத்தியது மட்டும் அல்லாமல், அவரே எதிர்தரப்புக்கு வேண்டிய வாதங்களை எடுத்து கொடுத்தார்.

MSWU க்கு சாதகமாக இருப்பார்கள் என்றும் அல்லது அதன் ஆதரவாளர்களால் பயமுறுத்தபட்டு இருப்பார்கள் என்றும் கூறி, எந்த குற்ற பின்னணியும் இல்லாத, ஜுலை 18,2012 சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த அனைத்து தொழிலாளர்களையும் சாட்சி சொல்ல விடாமல் நீதிபதி தடுத்து விட்டார்.

நிர்வாகம் தந்த பட்டியலை வைத்துத்தான் 89 தொழிலாளர்களை போலிஸ் கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தொழிலாளர் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் நிருபித்ததின் பின்னர், அவர்களை வேறு வழியின்றி மன்னித்து விடுதலை செய்த்தார் நீதிபதி. மேலும் 28 தொழிலாளர்களில் யாரையுமே எதிர்தரப்பு சாட்சிகளால் சரியாக அடையாளம் காட்டமுடியவில்லை என்பதால், அவர்களை எந்த குற்றசாட்டும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட, மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் மீதான சட்டபூர்வமான பழிவாங்கலை நிலைநிறுத்தும் நோக்கத்தோடுதான், கொயல் அவ்வாறு செய்தார். வழக்கை விசாரிக்கும் போலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் தான் போலிஸ் ஆதாரங்களை போலியாக தயாரித்தது என்பதை நீதிபதி கொயல் தனது தீர்ப்பில் ஒப்புக்கொண்டாலும் கூட எல்லா ஆதாரமும் பொய் அல்ல என்கிறார்.

முதலீட்டாளர்களுக்கு இவர்களை ஒரு முன்னுதாரணமாக காட்ட வேண்டும் என்றே இந்த வழக்கை சார்ந்த எதிர்தரப்பினரும், நீதிபதிகளும் வெளிப்படையாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர்.

“நமது தொழில்துறை வளர்ச்சி குறைந்து இருக்கிறது. FDI (வெளிநாட்டு நேரடி முதலீடு) வறண்டு விட்டது, பிரதமர் நரேந்திர மோடி “MAKE IN INDIA” (இந்தியாவில் தயாரியுங்கள்) என்று அழைக்கிறார், ஆனால் இப்படியான நிகழ்வுகள் நம் மேல் ஒரு கறையை உண்டாக்குகிறது” என்று மார்ச் 2017 இல் கூறிய எதிர்த்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா, அந்த 13 பேருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்று வாதாடினார்.

“இது போன்ற போராட்டங்கள் மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவும்” என்று கூறிய நீதிபதி சௌத்திரி மூன்று தொழிலாளர்களின் பிணை மனுவை இந்த மாதம் நிராகரித்தார்.

மூன்று நாள் கழித்து, இந்திய ஊடகம் அனைத்தும், RETUERS பத்திரிகையின் கட்டுரையான ”குர்கான் மானேசர் மற்றும் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் தொழில் நகரங்களில் தொழிலாளர் போராட்டங்கள் அதிகரிக்கிறது” என்பதை பெரும் அளவு பரப்பின.

“ஆசியாவின் டிட்ராய்ட்” என்று அழைக்கப்படும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுர் தொழிற்பேட்டையில் உள்ள Yamaha India Motors, Royal Enfield, மற்றும் Myoung Shin Automotive plants ஆகிய நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்களை ஆங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாருதி சுசுகி தொழிலாளர்களை போன்று, தமிழ்நாட்டை சேர்ந்த இந்த தொழிலாளர்களும், நிறுவனம், நீதிமன்றம், போலிஸ், அரசு ஆகியவற்றின் கூட்டுச் சதியை எதிர்கொள்கின்றனர். நிறுவனத்தின் வேண்டுகோள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்களின் ஆலை உள்ளிருப்பு போராட்டம் மற்றும் மறியல் ஆகியவற்றை போலிஸார் உடைத்தனர்.

குர்கான் மானெசர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள், மாருதி தொழிலாளர்களை ஒரு வர்க்கப் போராளிகள் என்று அங்கீகரிப்பது மட்டும் அல்லாது, அவர்கள் மீதும் வேலையில் இருந்து நீக்கப்பட்ட 2400 தொழிலாளர் மீதும் அனுதாபம் கொண்டு உள்ளனர்.

பிராமணர்கள் எப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்தினார்களோ அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய ஸ்ராலினிச கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்களான CITU மற்றும் AITUC ஆகியவை மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டத்தை திட்டமிட்டு தனிமைப்படுத்தின.

ஸ்ராலினிச பத்திரிக்கைகள் இந்த 13 பேரின் ஆயுள் தண்டனை பற்றி வாய்திறக்கவில்லை. CITU தான் தமிழ்நாட்டில் தற்போது வர்க்க போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறது, ஆனால் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் போராட்டகாரர்களிடம் பேசிய வரையில், ஸ்ராலினிச சங்கங்களின் தலைவர்கள் மாருதி சுசுகி சம்பவம் பற்றி அதாவது இந்தியாவின் வர்க்க உற்வுகளை தெளிவாக காட்டுகின்ற நீதிமன்றம், போலிஸ், அரசு ஆகியவற்றின் கூட்டு சதியை அம்பலபடுத்தும் இந்த சம்பவத்தை பற்றி சொல்லாமல் அவர்களை அறியாமையில் ஆழ்த்துகின்றனர்.

WSWS முன்பே குறிப்பிட்டது போல “ஸ்ராலினிஸ்டுகள், மாருதி சுசுகி தொழிலாளர்களின் போர்க்குணம் மிக்க போராட்டங்களை பார்த்து அஞ்சுகின்றனர். தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராடுவது என்பது, இந்து மேலாதிக்கவாத BJP க்கு எதிராக காங்கிரஸ் உடன் அவர்களது அரசியல் கூட்டணி மற்றும் நீதிமன்றம், அரசு இயந்திரம் ஆகியவற்றை ஜனநாயக ஆயுதமாக காட்டும் அவர்களது நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஸ்ராலினிச மற்றும் பிற தொழிற்சங்கள் ஒரு விரல் கூட உயர்த்தாமை ஆளும் வர்க்கதை வலிமை அடையச் செய்திருக்கிறது.

ஹரியானா அரசு அவர்களது ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்ற வேண்டும் என்கிறது. இரண்டரை ஆண்டு சிறை அனுபவித்து பின்னர் விடுவிக்கபட்ட 117 தொழிலாளர்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறது. இந்திய மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு எதிராக சவால் விடுத்த இந்த மாருதி தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டம் இந்தியா மட்டும் அல்லாது சர்வதேச தொழிலாள வர்க்கத்துகான அழைப்பாகும். அவர்களை பாதுகாப்பது என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் உலக நிதி மூலதனத்துக்கு எதிராக போராடுவதற்குமான முக்கியமான முதல் படியாக இருக்கும்.