ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of Korean shipyard workers strike against wage and job cuts

நூற்றுக்கணக்கான கொரிய கப்பல்துறை தொழிலாளர்கள் சம்பள மற்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

31 March 2018

தென்கொரிய கப்பல்துறை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்

தென்கிழக்கு நகரமான சென்ங்வான் இல் எஸ்டிஎக்ஸ் கடல் சார்ந்த & கப்பல்கட்டும் ஜின்ஹெ கப்பல்துறையிலிருந்து தொழிலாளர்களுக்கான செலவில் 75 சதவீத குறைப்புக்கும் 40 சதவீத தொழிலாளர்களுக்கான வேலை இழப்புகளுக்கு திட்டமிட்டிருக்கும் நிறுவனத்திற்கு எதிராக  சுமார் 700 தொழிலாளர்கள் திங்கட்கிழமையன்று ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை தொடங்கினர்.

கொரிய அபிவிருத்தி ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் அரசு உட்பட நிறுவனத்தின் பங்குதாரர்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த நிறுவனத்தின் மறுகட்டமைப்பின் பகுதியாக ஒரு ”சுய மீட்புத் திட்டம்” உருவாக்கப்பட்டிருக்கிறது.  தொழிலாளர்கள் இந்த இழப்பை ஏப்ரல் 9 க்குள் ஏற்றுகொள்ளவேண்டும் அல்லது நிறுவனம் கடனில் மூழ்கி இந்த கப்பல்துறை மூடப்பட்டுவிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்டிருக்கிறது.

தொழிற்சங்கம் வேலைநீக்கங்களை எதிர்ப்பதாக ஒருபக்கம் கூறிக்கொள்கிறது ஆனால் சம்பள மற்றும் நலன்கள் மீதான வெட்டுக்களை செயல்படுத்த தயாராக இருப்பதாக காட்டிக்கொள்கிறது. சீனாவின் கப்பல்கட்டும் நிறுவனங்களுடன் அதிகரித்துவரும் போட்டியால் ஒரு பகுதியும், அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை அமுல்படுத்தும் முயற்சிகளாலும் உலகில் ஒரு நான்காவது பெரிய கப்பல்கட்டும் எஸ்டிஎக்ஸ் கடல்சார்ந்த & கப்பல்கட்டும் நிறுவனம் 2013 இலிருந்து ஆட்குறைப்புகளை செய்துவருகிறது.

இந்தியா: மேற்கு வங்களத்தில் கிராம வங்கித் தொழிலாளர்கள் மூன்று நாட்களாக வேலைநிறுத்தம்

மேற்கு வங்காளத்தில் கிராமிய வங்கித் தொழிலாளர்கள் மூன்று நாட்களாக வெளிநடப்பு செய்து வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். இது மார்ச் 26 ன்று தொடங்கியது, அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தினை ஆர்ப்பாட்டத்தில் எதிர்த்தனர். தேசிய வங்கி தொழிலாளர்களுக்கு சரிசமமான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைத் தொழிலாளர்கள் கோரிக்கையாக வைத்தனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பிராந்திய கிராமிய வங்கி ஊழியர் சங்கத்தின் ஐக்கியமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.  110,000 இதில் 15,000  சாதாரண மற்றும் 95,000  நிரந்தரத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று அது கூறியிருந்தது. இந்த வங்கி நாடு முழுவதும் 22,000 கிளைகளைக் கொண்டிருக்கிறது மேலும் அது பெருமளவிலான இலாபத்தினை ஈட்டியிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்திய மின்சாரசபை ஊழியர்கள் தனியார்மயமாக்களை எதிர்க்கின்றனர்

மார்ச் 27 அன்று லக்னோ, வாரனாசி, கொரக்பூர், மீரட் மற்றும் மொராடாபாத் போன்ற இடங்களிலிருக்கும் மின் உற்பத்தி நிலையங்களை யூலையில் தனியார் மயமாக்க அரசாங்கம் தொடங்கயிருக்கும் திட்டத்தை எதிர்த்து உத்தரப் பிரதேச மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டனர். 1,00,000 தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது மின்சார ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

லாபங்களை தனியார்மயமாக்குகின்ற அதேவேலை நட்டங்களை தேசியமயமாக்கப்படுகின்றன  அதாவது மின் நிறுவனத்தின் கடன்களை வரி செலுத்துபவர்கள் மீது சுமத்தும் அதேவேலை லாபங்கள் பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்ற அரசாங்கத்தின் திட்டங்களை இந்தக் குழு கண்டனம் செய்தது.

மணிப்பூர் நகராட்சித் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு திட்டமிடுகிறார்கள்

வட இந்திய மாநிலமான மணிப்பூரில் நகராட்சித் தொழிலாளர்கள் ஏப்ரல் 2 அன்று மேம்பட்ட ஊதியக் கோரிக்கைக்காக  வேலைநிறுத்தபோராட்டத்திற்கு தயாராகிறார்கள். கடந்த நவம்பரிலிருந்து 27 உள்ளூராட்சி மன்றங்களில் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் 1க்குள் ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என அனைத்து மணிப்பூர் நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மாநில அரசாங்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ஊதிய உயர்வு வழங்கப்படவில்லையெனில் இந்த வேலைநிறுத்தம் ஏப்ரல் 2 அன்று இரண்டு நாள் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் மேலும் ஏப்ரல் 8 அன்று அது காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டமாக தொடரும் எனவும் கூறியுள்ளார்கள்.

இந்திய டாக்சி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முடித்துக்கொண்டனர்

சுமார் 1.5 மில்லியன் உபேர் மற்றும் ஓலா ஓட்டுநர்களால் ஊதிய உயர்வுக்காக நடைபெற்ற வேலைநிறுத்தப்போராட்டம் மார்ச் 22 அன்று ஒரு தொகை தெளிவில்லாத உறுதிமொழிகளைக் கொடுத்து ஓட்டுநர்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனத்திற்குமிடையில் நடந்த  ஒருநாள் பேச்சுவார்த்தைகளளைத் தொடர்ந்து திரும்பப் பெற்றுகொள்ளப்பட்டது.

ஓட்டுநர்களின் கொரிக்கைகளை கவனிப்பதாக உபேர் மற்றும் ஓலா நிர்வாகத்தினரிடமிருந்து எழுத்துபூர்வமான செயல்திட்டத்தினை பெற்று வெற்றிபெற்றுவிட்டதாக கூறிய மஹாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா (MNS) வின் போக்குவரத்து பிரிவு உரிமைகோரிய அதேவேளை அந்த தொழிற்சங்கம் அதைப்பற்றிய எந்த விபரத்தையும் வழங்கவில்லை அல்லது தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு ஒரு கால வரையறையும் குறிக்கப்படவில்லை.

பாகிஸ்தான்: ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் (USAID) நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் செலுத்தப்படாத நிலுவை ஊதியத்தை கோருகின்றனர்

ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டு சேவையாற்றும் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்கும் 60க்கு மேற்பட்ட தாதிகள் மற்றும் குழந்தை நலப்பணியாளர்கள் 13 மாதங்களாக செலுத்தப்படாத நிலுவை மற்றும் ஊதியத்திற்காக ஆர்ப்பாட்டத்தின்மூலம் எச்சரித்தனர்.  பழங்குடியினர் பகுதிகளில் கூட்டாக நிர்வகிக்கின்ற பஜெளர் தொண்டு நிறுவனத்தில் இந்த தொழிலாளர்ள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இந்த மாத இறுதிக்குள் நிலுவையிலிருக்கும் பணத்தினை வழங்கவில்லையென்றால் இந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்காகவும் மற்றைய நடவடிக்கைக்காகவும் ஏற்பாடு செய்யப்போவதாக கூறினார்கள் என திங்களன்று பஜெளர் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடந்த ஒரு ஊடக கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் பராமரிக்கும் தாதிகள் மற்றும் குழந்தை நலப்பணியாளர்கள் மார்ச் 2016 இலிருந்து பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தடவையேனும் சம்பளம் வழங்கப்படவில்லை. அப்படியிருந்தபோதிலும் பிப்ரவரி 2017 இல் அனைத்து கட்டணங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

பஞ்சாப் சுகாதாரப் பணியாளர்கள் பாகிஸ்தானில் போராட்டம்

அரசாங்கத்தால் நடத்தப்படும் லேடி சுகாதாரத் தொழிலளார்கள் (LHW)  திட்டத்தில் பணிபுரியும் சுமார் 250 தொழிலாளர்கள் 5 மாதங்களாக செலுத்தப்படாமலிருக்கும் நிலுவைத் தொகைக்காக செவ்வாய்கிழமையன்று லாகூரில் பஞ்சாப் மாகண பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஓரே இரவில் நகரத்தின் பிரதான சாலையில் போக்குவரத்தினை தடைசெய்த அனைத்து மாகாண பகுதிகளிலிருந்த தொழிலாளர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்துவிட்டனர்.

மாதமொன்றுக்கு ரூபாய் 7,000 மட்டுமே பெறுகின்ற சில தொழிலாளர்களும் ஒரு கணிசமான சம்பள அதிகரிப்பையும்,  சரியான நேரத்தில் பதவி உயர்வினையும் மேலும் சேவைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தவும் கோரினர்.   நூற்றுக்கணக்கான லேடி சுகாதாரத் தொழிலளார்கள் ஒப்பந்தமுறையில் பணியிலமர்த்தப்பட்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் நீண்ட ஒரு மாதகாலமாகத் தொடர்கிறது

20 சதவீத சம்பள உயர்வு, மொழித் திறமை கொடுப்பனவு, சலுகை கடன்கள் அதிகரிப்பு, மருத்துவக் காப்பீடு அறிமுகப்படுத்தவும் மேலும் ஒரு ஓய்வுதியத் திட்டம் ஆகியவற்றிற்காக சுமார் 15,000 கல்விசாரா பல்கலைக்கழக தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது.  நடந்துகொண்டிருக்கும் வேலைநிறுத்தம் இலங்கை முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களை நிறுத்தும் அளவுக்கு கொண்டுவந்திருக்கிறது.

செவ்வாய்கிழமையன்று போராட்டக்காரர்களை ஆதரித்து நாடுமுழுவதிலிமிருந்து சுமார் 2,000 பல்கலைக்கழக மாணவர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டம் இடைநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்விசாரா தொழிலார்களின் போராட்டத்தினை ஸ்தாபன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் அதேவேளை அரசாங்கத்துடனான அமைச்சர்களுடன் ஒரு உடன்படிக்கை பற்றி வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு மாயைகளை உருவாக்க தொடர்ச்சியாக செயற்பட்டுவருகிறது.

பங்களாதேஷ் ஆடைத்தொழிலாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்

மார்ச் 21 அன்று சிட்டாங்கொங் நகரத்தில் ஷாட்-முஸா குழு நிறுவனத்திலிருந்த பெண் ஆடைத்தொழிலாளர்களின் போராட்டத்தின்போது காவல்துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர்.  செலுத்தப்படாத சம்பளம் மற்றும் நிலுவையிலிருக்கும் கட்டணங்கள் ஆகிய கோரிக்கைகளைவைத்து சிட்டாங்கொங்-ஹதஸாரி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்குப் பின்னர் நடந்த இச்சம்பவத்தில் குறைந்தது 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இரண்டு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷாட்-முஸா குழு மற்றும் அதன் ஹோம்டெக்ஸ்டைல் நிறுவனமானது நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்ட ஆடைகளை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

வியட்நாம் தொழிலாளர்கள் உத்தேச ஊதிய வெட்டுகளுக்கெதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

டோங் நயி மாகாணத்திலுள்ள தாய்வான் அரசுக்கு சொந்தமான பெளச்சென் வியட்நாம் காலணித் தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று ஆயிரத்திற்குமதிகமான தொழிலாளர்கள் புதிய ஊதிய முறையை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டிருக்கும் நிறுவனத்திற்கு எதிராக வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர். அதிகாரபூர்வற்ற இந்நடவடிக்கையானது டோங் நயி இலிருந்து அருகிலிருக்கும் ஷய்கொன் மாகாணத்தை இணைக்கும் சாலையான தேசிய நெடுஞ்சாலை 1K யின் ஒரு பகுதி போக்குவரத்தினை தடுத்திருந்தது. இது பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தொழில்முறை நடவடிக்கைக்கு நிறுவனம ஏற்கனவே நடப்பிலிருக்கும் ஊதிய முறையினை தொடர்வதாக உடனடியாக அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. நிறுவனம் பின்வாங்கிய தகவலை ஒரு மாகாண தொழிலாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அவர்களுக்கு அறிவித்தபோதும் கூட தொழிலாளர்கள் நெடுஞ்சாலையை மறியல் செய்வதை நீண்டநேரம் தொடர்ந்தனர்.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் கூற்றப்டி, 2017 இல் வியட்நாமில் 314 அதிகாரபூர்வமற்ற அல்லது “திடீர்” வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. சென்ற ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.  நல்ல ஊதியம், வேலை நிலைமைகள், மற்றும் நிறுவனம் கோரும் மேலதிகமான நேரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக வேலைநிறுத்தங்கள் இருந்தன.