ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers Struggles: Asia, Australia and the Pacific

தொழிலாளர்கள் போராட்டங்கள்; ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்

10 March 2018

ஆசியா

இந்தியா: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாக்கின்றனர்

மதுரையில் மார்ச் 6 அன்று போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு (த.போ.க) வெளியே ஜனவரி மாதம் ஒரு வாரத்திற்கு அதிகமாக நடந்த மாநிலந் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 11 தொழிலாளர்கள் பணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவும் மற்றும் வேலைநிறுத்தத்தில் முக்கிய தலைமையேற்றிருந்த தொழிலாளர்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த அனைத்து காவல்துறையினரின் குற்றச்சாட்டுகளிலிருந்து  விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நூற்றுக்கணக்கான தமிழ்நாடு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்கள் த.போ.க நிர்வாகத்தினரால் 60 நாட்களுக்கு பணியிலிருந்து இடைநீக்கப்பட்டிருந்தனர்.

இந்திய தொழிற்சங்க மையத்தால் (சிஐடியு) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டம் நடந்த அதேவேளை இதே தொழிற்சங்கம் தொழிற்துறை  நடவடிக்கையை ஏற்பாடு செய்வதற்கு மறுத்தும் தமிழ்நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான அதன் மற்றைய உறுப்பினர்களை கலந்துகொள்ளவிடாமலும் தனிமைப்படுத்தியிருந்தது..

இந்தியா: முன்னூறுக்கு மேற்பட்ட பெண்கள் தமிழ்நாட்டில் போராட்டம்.

திங்கட்கிழமையன்று நல்ல கூலி மற்றும் நலன்களுக்காக முன்னூறுக்கும் அதிகமான பெண் தொழிலாளர் சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் சுமார் சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலிருக்கும் திருவள்ளூர் இரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்ட முழுவதிலிமிருந்து கட்டிடத் தொழிலில் மற்றும் வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்கள் அவர்களுடைய கோரிக்கைகள வைத்து போராட சேர்ந்திருந்தனர்.

வீட்டுவேலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு குறைந்தபட்ச கூலிக்காகவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், விதவைகளுக்கான ஓய்வூதியத்தினை முறைப்படுத்துவும் மேலும்  சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மாநில வரவுசெலவு திட்டத்தில் குறைந்தபட்சம் 5 சதவீதம் ஒதுக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்

தமிழ்நாட்டு உழைப்புசக்தியில் குறைந்தபட்சம் பெண்கள் 25 சதவீதம்பேர் இருக்கிறார்கள் மேலும் தொலைதூரத்தில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு வருமானமே இல்லை என அத் தொழிற்சங்கம் கோருகிறது.

தமிழ்நாடு போக்குவரத்து உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோருகிறார்கள்.

காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட றோலான் நிறுவனத்தின் பாதிக்கப்பட்ட ஏழு தொழிலாளர்கள் இந்த வாரம் பிணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் கோயம்புத்தூர் ஆலையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கான பிரச்சனையில் தலைமையேற்ற அந்த தொழிலாளர்கள் ஐந்து நாட்களுக்கு மேலாக சிறையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

காவல்துறையின் கைது நடவடிக்கையானது நிறுவனத்தின் நிர்வாகக் கட்டளையின்படி நடந்துள்ளது என மாவோயிச அமைப்புடன் தொடர்புபட்ட தொழிற்ச் சங்கங்களின் அனைத்திந்திய மத்திய கவுன்சில் (AICCTU)  குற்றஞ்சாட்டியிருக்கிறது. உடல் ரீதியாகவும், தகாத வார்த்தைகளாலும் தாங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டதாக விடுதலையான நாளன்று தொழிலாளர்கள் கூறினார்கள். றோலான் தொழிலாளர்கள் 2017 இன் இறுதியிலிருந்து ஆலையில் தொழிற்சங்கத்தைக் கட்டுவதற்கான முயற்சியினை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தொடர்ச்சியாக தொழிற்சங்க உறுப்பினர்களை பணியிடை மாற்றம் செய்து தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கான கோரிக்கைகளை நிர்வாகம் மறுத்துவருகிறது.

ஆந்திரப் பிரதேச ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

தெற்கு ஆந்திரப் பிரதேசத மின்சார வாரியம், நகராட்சி சபை மற்றும் பிஎஸ்என்எல் தொலைதொடர்புத்துறை ஆகியவற்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் மார்ச் 6 அன்று விசாகப்பட்டினத்தில் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி எந்தத் தீர்வும் கிடைக்காமல் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தினை முடித்துக்கொண்டனர்.

ஒப்பந்த தொழில்முறையை ஒழித்தல் மற்றும் ”குறிப்பிட்டவேலைக்கான விலை” நடைமுறை, நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான சம்பளம், பணியிலிருக்கும் போது இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் வேலைப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.

பாகிஸ்தான்: பஞ்சாப் துணை மருத்துவ குழுவினர் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 28 அன்று பஞ்சாப், முல்டன் அரசாங்க மருத்துவமனையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தப்படுத்தவும் கோரி நூற்றுக்கணக்கான துணை மருத்துவக் குழு பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

டெஃஹசில் தலைமை மருத்துவமனையின் குழந்தைகளின் பிரிவு, முல்டன் இதயமருத்துவ கல்லூரி, அதைப் போன்று ஷாகாஹ்பாஸ் ஷாகிரிப் பொது மற்றும் பிற மருத்துவமனைகள் ஆகியன சேவைகளை நிறுத்தக் கட்டாயபடுத்தியதால் தொழிற்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் முல்டன் நகரின் மையத்தில் நான்கு மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியதும் அடங்கும்.

பாகிஸ்தான் துணை மருத்துவக்குழு பணியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, அதிகப்படியான துணை மருத்துவப்பணி ஒப்பந்த அடிப்படையில் உள்ளது, சில வேலைகள் 20 வருடங்களுக்கு மேலாக நடந்துவருகிறது. இந்தப் பணியாளர்கள் பல வருடங்களாக சம்பள உயர்வை பெறவில்லை. தெற்கு பஞ்சாப் கிரான்ட் ஹெல்த் அலையன்ஸ் இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது.

பார்வை குறைபாடான அரசாங்கத் தொழிலாளர்கள் பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்றமாதம் லாகூரில் நடந்த பார்வைகுறைபாடான தொழிலாளர்களின் போராட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க் கிழமையன்று ராவல்பிண்டி நகரத்தில் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலிருந்து பார்வை குறைபாடான பல எண்ணிக்கையான தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட எல்லா காவல்துறையினரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரினர். ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு ஒதுக்கீட்டில் அதிகமாகவும் மற்றும் நிரந்தர வேலையும் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். செவ்வாய்க் கிழமையன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் உறுதிமொழிகளை கொடுக்காததால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

கராச்சி அரசாங்க எழுத்தர்களை மீது பாகிஸ்தான் காவல்துறையினர் தாக்குதல்

திங்கட்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 கீழ்நிலையிலிருக்கும் அரசாங்க எழுத்தர்களை கண்ணீர் புகை மற்றும் நீர்பாய்ச்சி காவல்துறையினர் தாக்குதலை நடாத்தினர். இந்த எழுத்தர்கள் சம்பள உயர்வு மற்றும் படித்தொகை உயர்த்தக்கோரிப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

பாதுகாக்கப்பட்ட முக்கிய அரசாங்க அமைப்புக்கள் இருக்கும் பகுதியான பிரஸ் கிளப் பகுதியிலிருந்து ரெட் மண்டலம் வரை தொழிலாளர்கள் அணிவகுத்து செல்ல தொடங்கிய பிறகு தாக்கப்பட்டார்கள். இதில் குறைந்தது 41 போரட்டக்காரர்கள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அகில சிந்து எழுத்தர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிட்டிருந்தது.

பாகிஸ்தான் ஆய்வக ஊழியர்கள் நிலுவை ஊதியத்திற்காக ஆர்ப்பாட்டம்

டாக்காவில் தேசிய தடயவியல் டிஎன்ஏ விவரக்கூற்று ஆய்வகம் மற்றும் பிரதேச டிஎன்ஏ ஸ்கிரினிங் ஆய்வகம் ஆகியவற்றிலிருந்து 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நிலுவையிலிருக்கும் சம்பளத்தினை கேட்டு ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் அன்று ஒரு உள்ளிருப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். பெண்கள் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றிற்கு வெளியே இப்போராட்டம் நடைபெற்றது.

கடந்த வருடம் ஜனவரியிலிருந்து அக்டோபர் வரை நிலுவையிலிருக்கும் சம்பளத்தை தரவேண்டும் என்பதே தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. கடந்த ஜனவரியில் சம்பளம் நிறுத்தப்பட்டபோது தொழிலாளர்கள் இரண்டரை மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் துறைக்கான மாநில அமைச்சகம் அவர்களுடைய சம்பளத்துடன் நிலுவைப் பணத்தினையும் சேர்த்து கொடுப்பதற்கு உறுதியளித்ததின் பேரில் அப்பொழுது தொழிற்சங்கங்களால் வேலைநிறுத்தம் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த வாக்குறுதி கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை.

ராஜ்ஷாஹி, சில்ஹெட், சிட்டாக்கொங், ஹூல்னா, பாரிஷல், ரான்கபூர் மற்றும் பரிட்பூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 2007 இலிருந்து டிஎன்ஏ ஸ்கிரினிங் ஆய்வகம் நிறுவப்பட்டிருக்கிறது.

பங்களாதேஷ் வங்கி ஊழியர்கள் மேம்பட்ட ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்

பங்களாதேஷ் கிராமின் வங்கியின் ஐந்து பிராந்திய கிளைகளிருந்த தொழிலாளர்கள் மார்ச் 26 தொடக்கம் 28 வரை வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழு சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டிருக்கும் பிராந்திய கிராம வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றத்தினால் [United Forum of Regional Rural Bank Unions (UFRBU)] திட்டமிடப்பட்ட வெளிநடப்பானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏழைகளுக்கு பிணையம் எதுவுமில்லாமல் சிறிய அளவிலான கடனைக் கொடுப்பதற்காக இந்த சமூக வங்கியானது 1970 இன் இறுதியில் உருவாக்கப்பட்டது. மொத்தமாக 20000 மக்களுக்கு வேலைகொடுத்திருக்கும் இந்த வங்கி நாட்டில் 2500 கிளைகளைக் கொண்டிருக்கிறது.

வணிக வங்கிகளுடன் வருங்கால வைப்புநிதி மற்றும் சமமான ஓய்வூதியம் வேண்டும் என்பதுடன் கணிணிக்கான கொடுப்பனவும் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தினக்கூலி/சாதாரண தொழிலளார்களுக்கு சட்டரீதியான நலன்கள் ஆகியவற்றுக்காகவும் கிராமின் வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  

இலங்கை: பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

இலங்கையில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் மார்ச் 6 அன்று கொழும்பு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு [University Grant Commission (UGC)] அலுவலகத்துக்கு வெளியே வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். பல்கலைக்கழக தொழிற்சங்க இணைப்புக் குழுவால் [University Trade Union Joint Committee (UTUJC)] இந்த தொழில்துறை நடவடிக்கைக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 15,000 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 20 சதவீத சம்பள உயர்வு, மொழித் திறமை கொடுப்பனவு, சலுகை கடன்கள் அதிகரிப்பு, மருத்துவக் காப்பீடு அறிமுகப்படுத்தல் மற்றும் ஒரு ஓய்வுதியத் திட்டம் ஆகிய கோரிக்கைகளை வைத்தனர். தொடர்ச்சியாக எட்டாவது நாள் நுழைந்திருக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் விரிவுரை வகுப்புக்கள் மற்றும் தேர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கல்விசாரா தொழிலாளர்கள் இதே கோரிக்கைகளை வைத்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் யூலை 2016 இல் வெளிநடப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.  UGC இடமிருந்து எழுத்துபூர்வமான உடன்படிக்கையை பெற்றுவிட்டதாக கூறி 12 நாட்களாக நடந்த வேலைநிறுத்தத்தினை UTUJC முடித்துக்கொண்டது.

இலங்கை: கொழும்பு துறைமுக கொள்கலன்களைக் இயக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

கொழும்பு துறைமுக கொள்கலன்களைக் (container) இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் மார்ச் 5 அன்று இலங்கை துறைமுக அதிகாரசபை [Sri Lanka Ports Authority (SLPA)] கொள்கலன் ஆய்வு கட்டுப்பாட்டினை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரி வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர்.   இந்த வேலையானது 2003 இல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை அதனுடைய வளாகத்தில் ஆய்வுக்காக போதுமான வசதிகளை வழங்கியிருக்கவில்லை மேலும் ஒரு தனியார் நிறுவனத்தால் கொ.ழும்பு துறைமுகத்துக்கு வெளியே இரண்டு பக்கமாக ஒரு நாளைக்கு 1,500 கொள்கலன்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் விளைவாக பெரும்பாலான ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் அவர்களுடைய டிரக் வண்டிகளிலேயே இருக்க, தூங்க வேண்டியிருக்கிறது ஏனேனில் நிறுத்துவதற்கு போதிய இடப் பற்றாக்குறையினால் அவர்கள் வண்டிகளைவிட்டு போகமுடியவில்லை.

மனித தன்மையற்ற இந்த வேலைநிலைமைகள் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் மேலும் துறைமுகத்தின் வளாகத்துக்குள்ளேயே ஆய்வு மற்றும் சரக்குகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று துறைமுக தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்த வேலைநிறுத்தம் அனைத்து இலங்கை கொள்கலன் போக்குவரத்து தொழிற்சங்கத்தால் (All Ceylon Container Transport Employees Union) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் 8,000 தொழிலாளர்கள் ஈடுபட்டதாக அதுகூறியுள்ளது.

இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது

நூற்றுக்கணக்கான இலங்கை மின்சார சபை (இ.மி.ச) தொழிலாளர்கள் கண்டி, காலி மற்றும் திரிகோணமலை ஆகிய இடங்களிலுள்ள இ.மி.ச அலுவலகத்துக்கு வெளியே ஒன்று கூடி தொழிற்சங்க தலைவர்களை பதவிநீக்கம் செய்ததற்கு எதிராகவும், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் மூத்த மேலாளர்களுக்கான சம்பள உயர்வை ரத்துசெய்யவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜனவரி 17 ன்று இலங்கை மின்சார சபை தலைமையலுவலகத்துக்கு முன்னால் அணிதிரண்டு மறியலில் ஈடுபட்டது சட்டத்தை மீறிய செயல் என்று கூறி தொழிற்சங்க தலைவர்கள் மீது பிப்ரவரி 16ன்று குற்றம்சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

சுமார் 22,000 இ.மி.ச தொழிலார்கள் கடந்த வருடம் இதே கோரிக்கைகளை வைத்து எட்டு நாட்கள் நடத்திய போராட்டத்தை தொழிற்சங்கம் அரசாங்கத்துடன் செய்துகொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து முடித்துக்கொண்டது. இந்த இ.மி.ச தொழிற்சங்க கூட்டணி மார்ச் 14 ன்று கொழும்பில் இ.மி.ச தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்புவிடுத்திருந்தது.

கொரியன் கண்ணாடித் தொழிலாளர்கள் ஜப்பானில் போராட்டம்

கொரியாவிலிருந்து வந்து பணியிலிருக்கும் கண்ணாடிதயாரிக்கும் தொழிலாளர்கள் குழு டோக்கியோவில் மார்ச் 7 அன்று ”ஒழுங்கற்றமுறையில் தொழிலாளர்களைப் பயன்படுத்தல்” மற்றும் கொரியா ஜியோன்சங் பிராந்தியத்தின் அஷாஹி கண்ணாடி தொழிற்சாலையில் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை வேலையிலிருந்து நீக்கயதற்காகவும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.   இந்த ஒழுங்கற்றமுறையில் பயன்படுத்துப்படும் தொழிலாளர்கள் கொரியாவின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் முழு நலன்களையும்  பெற முடியாது.

இந்தப் போராட்டம் ஜப்பான் பாராளுமன்ற கட்டிடத்திலிருக்கும் ஜப்பான் உணவு பிரதிநிதிகள் இல்லத்துக்கு வெளியே நடந்தது. ஜப்பான் குடிமக்கள் தொழிலாளர்களுடன் இணைந்து “தொழிலாளர்களை தூக்கியெறியும் பொருட்களாய் நடத்துவதை நிறுத்து!” என்று முழக்கமிட்டனர்.

ஹாங்காங் பேருந்து ஓட்டுநர்களின் மீதான பழிவாங்கலை நிறுத்துவற்காக ஆர்ப்பாட்டம்

ஹாங்காங் இல் புதன்கிழமையன்று மற்ற ஓட்டுநர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஒருநாள் போராட்டத்திற்கு பிறகு நான்கு பேருந்து ஓட்டுநர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

சென்ற மாதம் திடீர் வேலைநிறுத்தம் மேற்கொள்ள தலைமைவகித்த ஓட்டுநர்களை பணியைவிட்டு நீக்குவதற்கான நிர்வாகத்தின் திட்டத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை இரவு ஹெளலூன் மோட்டார் பஸ் கோ. [Kowloon Motor Bus Co. (KMB)] க்கு சொந்தமான லாய் ஷி ஹொக் பேருந்து பணிமனையில், சுமார் 200 தொழிலாளர்கள் கூடினர்.

சென்ற மாதம் நடந்த வேலைநிறுத்தம் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருந்தது என்றும் பயனிகளுக்கும் மற்ற சாலை பயனாளர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது என்றும் KMB நிர்வாகம் கூறியிருக்கிறது. இந்த நிறுவனத்தால் கட்டாயத்தின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட  மாதாந்திர பணம் செலுத்தும் ஓட்டுநர்கள் கூட்டமைப்பினால் (Alliance of Monthly-Paid Drivers) இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.