ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

හම්බන්තොට වරාය කම්කරු අරගලය සංධිස්ථානයක

இலங்கை ஹம்பந்தொட்ட துறைமுக தொழிலாளர்களின் போரட்டம் திருப்புமுனையில்

By Nandana Nannethi and L.P. Udaya
2 January 2018

ஹம்பந்தொட்ட துறைமுகத்தை சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் கூட்டுத்தபானத்துக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் தொழில்களை இழந்த தொழிலாளர்கள், தமது தொழில் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக முன்னெடுத்து வரும் போராட்டம் ஆறாவது வாரத்தை நெருங்கியுள்ளது. 438 பேர் தொழில் இழந்துள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தின் ஏனயை உறுப்பினர்களும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்காக பிரச்சாரத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் உடந்தையுடன் துறைமுக அதிகார சபை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் போராட்டம், தொழிலைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குள் காணப்படும் பெரும் உறுதிப்பாட்டை காட்டுகின்றது.


சோசலிச சமத்துவக் கட்சியினர் துறைமுகத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகின்றனர்

தொழிற்சங்கம் முன்வைத்துள்ள, தொழிலை மீண்டும் பெற்றுக்கொள்ளும் அல்லது 50 இலட்சம் நட்ட ஈடு பெறும் கோரிக்கையை நிராகரித்துள்ள அரசாங்கமும் துறைமுக அதிகார சபையும், தொழிலாளர்களின் போராட்டத்தை தகர்ப்பதற்காக இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நவம்பர் 30 அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரத்தை குழப்புவத்கான முயற்சியாக, வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் துறைமுக வளாகத்துக்குள் நுழைவதை தடை செய்த துறைமுக அதிகார சபை, பிரச்சாரத்திற்கு எதிராக ஹம்பந்தொட்ட மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தது. வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு மாறாக, ஒப்பந்த அடிப்படையில் மனித வள கம்பனிகள் மூலமாக புதிய தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை சீனக் கம்பனி இப்போதே ஆரம்பித்துள்ளது.

அரசாங்கமும் துறைமுக அதிகார சபையும் கட்டவிழ்த்துவிட்டு இந்த தாக்குதல், தம்மைப் போலவே பல்வேறு தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர் தட்டினரின் பக்கம் திரும்பி, மீண்டும் வேலையைப் பெற்றுக்கொள்வதற்காக பலம்வாய்ந்த போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டிய ஒரு திருப்புமுனைக்கு ஹம்பந்தொட்ட துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் வந்துள்ளதைக் காட்டுகின்றது. ஹம்பந்தொட்ட போராட்டமானது அரசாங்த்தின் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் வடிவத்தை எடுத்துள்ளது. ஏனெனில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் அடிப்படையில், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கல் மற்றும் “மறுசீரமைப்புக்கு” நடவடிக்கை எடுக்கின்ற நிலைமையின் கீழ், இதற்கு சமாந்தரமான தாக்குதல்களை ஏனைய தொழிலாளர்களும் முகம் கொடுக்கின்றனர்.

எனினும், பிரச்சாரத்தை முன்னெடுக்கும் மாகம்புற துறைமுக ஊழியர் சங்கம், இந்த போராட்டத்தைச் சூழ ஏனைய தொழிலாளர்களின் ஒத்துழைப்பை அணிதிரட்டும் வேலைத் திட்டத்தை எதிர்க்கின்றது. தொழில் அல்லது நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை, தொழிலாளர்களுக்கு ஒரு பொறிக்கிடங்காகி உள்ளது. இந்த கோரிக்கைகள் மூலம், தொழில் இழந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முற்றிலும் துறைமுக அதிகார சபைக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்து, தொழில் இல்லாவிட்டால் குறைந்தபட்சம் நியாயமான நட்ஈட்டை பெற முடியும் என்ற மாயைக்குள் தொழிலாளர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையிடம் தீர்வு கிடைக்காத நிலையில், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிடம் தொழிற்சங்க தலைவர்கள் அடுத்து வேண்டுகோள் விடுத்தனர். ஒரு கிழமைக்குள் பதில் கொடுப்பதாக டிசம்பர் 21 அன்று வாக்குறுதி கொடுத்த சிறிசேன, பின்னர் பிரச்சினையை “குறித்த” துறைக்கு அனுப்பியுள்ளதாக அறிவித்து, பிரச்சினையில் இருந்து நழுவிக்கொண்டுள்ளார். இவ்வாறு செய்தது அவர் துறைமுக அதிகாரசபையின் நடவடிக்கையை அனுமதிப்பதாலேயே ஆகும்.

துறைமுக அதிகாரசபை தொழிலாளர்களை வெளியேற்றியதற்கு நட்ட ஈடாக அவர்களுக்கு அற்ப தொகையை வழங்க முன்வந்துள்ளது. அதன்படி வேலை இழந்த தொழிலாளர்களுக்கு சேவைக் காலத்தின் அடிப்படையில் மாதச் சம்பளம் மற்றும் பணியை இட்டு நிரப்பியதற்கான கொடுப்பனவைப் போன்று குறைந்த பட்சம் மும்மடங்கும் அதிகபட்சம் 10.5 வீத நட்டஈடு கிடைக்கும். அது தொழிற்சங்கம் கேட்டுள்ள தொகையில் 25ல் ஒரு பங்காகும். நட்டஈடு கொடுக்கும் அதிகபட்ச காலம், மூன்று வருட சேவை காலத்துக்கு வரையறுக்கப்பட்டுள்ளதால், 14,200 அடிப்படை சம்பளம் பெற்ற சாதாரண தொழிலாளிக்கு சுமார் 200,000 ரூபா தொகையே கிடைக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் அங்கீகரிக்கின்ற நட்ட ஈட்டுத் தொகையுடன் ஒப்பிடும் போது, இது “மிகவும்” உயர்ந்த தொகை என அதிகார சபை கூறியுள்ளது. எனினும் தொழில் இழப்பு மற்றும் மீண்டும் தொழில் ஒன்றைத் தேடிக்கொள்வதில் உள்ள சிரமங்கள், 25-30 இலட்சங்கள் என்ற அளவில் வங்கிகளில் பெற்றுள்ள வீட்டுக் கடன்களுடன் ஒப்பிடும் போது, பிரேரிக்கப்பட்டுள்ள நட்ட ஈடு எந்த வகையில் போதுமானதல்ல என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தொழில், தொழிற்சங்கம் மற்றும் சபரகமுவ மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சரால் “பிரச்சினையை தீர்ப்பதற்காக” அதை இறுதி முடிவெடுக்கும் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது, அரசாங்கமும் துறைமுக அதிகார சபையின் இந்த திட்டம், தொழிலாளர்கள் மீது பலாத்காரமாக சுமத்தும் சூழ்ச்சியே ஆகும்.

சீனக் கம்பனிக்கு தொழிலாளர்களை விநியோகிக்கும் “கொழும்பு லொஜிஸ்டிக்”, எக்ஸஸ் ஆகிய மனித வள கம்பனிகளின் கீழ் வேலை செய்யுமாறும் தொழில் இழந்த தொழிலாளர்களுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. சகல உரிமைகளும் அபகரிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் சேவை ஒப்பந்தத்தின் கீழ் செயற்படும் முறையை இந்த வேலை இழந்த தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.

வேலை இழந்துள்ள தொழிலாளர்கள் மத்தியில் உள்ள 140 தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவர் என துறைமுகை அதிகாரசபை பரப்பியுள்ள உத்தியோகபூர்வமற்ற செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை பிளவுபடுத்தி கலைத்துவிடும் சதித்திட்டமாகும் என உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுக்கு விளக்கிய தொழிலாளர்கள் கூறினர்.

மாகம்புர துறைமுக முகாமைத்துவ (தனியார்) கம்பனியின் கீழேயே தொழில் இழந்த தொழிலாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். இந்த கம்பனியின் வர்த்தகப் பங்குகளின் முழு உரிமையும், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானதாக இருப்பதோடு அதன் நிர்வாகிகளில் 9 பேரில் 8 பேர், இலங்கை துறைமுக அதிகார சபையினாலும் துறைமுக அமைச்சராலும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் தொழிலாளர்கள் நேரடியாக துறைமுக அதிகாரசபையினால் இணைத்துக்கொள்ளப்படாமல், அதிகாரசபையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கம்பனியின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பது, தேவையான போது அவர்களை தொழிலில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடனேயே ஆகும். இது பொதுவில் இலங்கையில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையிலும் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, இது தொழில் மற்றும் சேவை நிலைமைகளை வெட்டி, உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்குவதன் பாகமாக, சர்வதேச ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வேலைத் திட்டமாகும்.

ஒப்பந்த அடிப்படையில் ஹம்பந்தொட்ட தொழிலாளர்களை வைப்பதன் மூலம் தொழில் ஆபத்து நிலைமை உள்ளபடியே நிலவுகின்றது. 2016 டிசம்பர் சீனக் கம்பனிக்கு துறைமுகத்தை விற்கும் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலைமையின் கீழ், தொழிலை நிரந்தரமாக்கக் கோரி தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கடற்படையினரை அனுப்பி நசுக்கியதில் அரசாங்கத்தின் திட்டம் அம்பலத்துக்கு வந்தது. எவ்வாறெனினும் இந்த அனைத்தும் நடக்கும் போது, தொழிற்சங்கம் தொழிலைப் பாதுகாக்கும் ஆழமான போராட்டத்திற்கு எதிராக இருக்கின்றது.

சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மாகம்புற துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தைச் சூழ, ஏனைய தொழிலாளர்களின் ஒத்துழைப்பை அணிதிரட்டுவதற்காகப் போராட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்த போது, தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே அதை எதிர்த்தது. தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதன் மூலம், அது ஏனைய தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), வலதுசாரி இயக்கமொன்றைத் வளர்ப்பதற்கு முயற்சிக்கும் மஹிந்த இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க் கட்சி மற்றும் வெகுஜன இயக்கங்கள் என அழைத்துக்கொள்பவை உடனும் கூட்டுச் சேர்ந்தது.

வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமையை மீண்டும் ஸ்தாபிப்பதற்காக, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் பலத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும் என்ற பிரோரணையை சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த போது, மாகம்புற துறைமுக ஊழியர் சங்கத்தின் உப அழைப்பாளர் புத்திக பிரசாத், தாம் அரசாங்கத்தை தூக்கி வீசத் தயார் இல்லை என்றும், தொழில் அல்லது நட்ட ஈடு கிடைக்காவிட்டால் “கூட்டாக சாவதைத் தவிர வேறு செய்வதற்கு ஒன்றும் இல்லை” எனக் கூறினார்.

தொழிலாளர்கள் இந்த குழப்பமான எதிர்பார்ப்பற்ற கருத்தை கடுமையாக கண்டனம் செய்ய வேண்டும். தொழில்களை அழிக்கும் வேலைத் திட்டத்தின் எதிரில், அவர்கள் அரசியல் ரீதியாக நிராயுதபாணிகளாக்கிய தொழிற்சங்கத் தலைவரின் கருத்து, முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு காண்பதற்கு தொழிலாளர்கள் தங்களை வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே சமிக்ஞை செய்கின்றது.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துக்கொள்ளும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் அடிப்படையில் முதலாளித்துவ அரசாங்க்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் தொழில் மற்றும் சேவை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் முதலாளித்துவ அரசாங்கத்தின் கொள்கையுடன் ஹம்பந்தொட்ட துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் புறநிலையில் மோதிக்கொள்கின்றது. உயிரைப் பணயம் வைத்து முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கும் தொழிற்சங்கத் தலைவரின் இலட்சியத்தை நிராகரித்து தமது போராட்டத்திற்கு ஏனைய தொழிலாளர்களின் ஒத்துழைப்பை வெற்றிகொள்வதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திரும்ப வேண்டும். அத்தகைய போராட்டத்திற்கு எதிரான ஒரு தடையாக செயற்படும் தொழிற்சங்கத்தில் இருந்து பிரிந்து, தொழிலாளர்கள் தாமே தேர்வு செய்துகொள்ளும் நடவடிக்கை குழுவின் மூலம், போராட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.