ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN officials warn of worst famine crisis since World War II

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய கால மோசமான பட்டினி நெருக்கடி குறித்து எச்சரிக்கின்றனர்

By Patrick Martin
13 March 2017

இரண்டாம் உலகப் போர் முடிவுக்குவந்த பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக, நான்கு நாடுகளில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உடனடியான பட்டினிக்கு முகம்கொடுக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கடந்த வார இறுதியில் எச்சரித்தனர். யேமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா போன்ற இந்த அனைத்து நான்கு நாடுகளும் உள்நாட்டு போர்களால் சீர்குலைந்து இருக்கின்றன. இந்த நாடுகளில் போரில் ஈடுபட்டுள்ள ஏதாவது ஒரு பக்கத்திற்கு ஆயுத உதவியும் நிதியும் வழங்குவதில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

ஐ.நா. சபையின் அவசரகால உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஓ'பிரையன் வெள்ளிக்கிழமையன்று இந்த நான்கு நாடுகளின் நிலைமைகள் குறித்த விரிவான விபரங்களடங்கிய ஒரு அறிக்கையினை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அளித்தார். மேலும் மார்ச் இறுதிக்குள் அவசரகால நிவாரண உதவிக்காக 4.4. பில்லியன் டாலர் தொகையினை திரட்டமுயற்சி செய்கிறது என்பது போன்ற இந்த நெருக்கடி குறித்து கூடுதல் தகவல்களையும் ஐ.நா. சனிக்கிழமையன்று வெளியிட்டது. ஐ.நா. சபையின் பொது செயலர் அன்டோனியா கட்டரெஸ் ஐ பொறுத்தவரையில், மொத்த தேவையில் இரண்டு சதவிகிதமான 90 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிக்கு மட்டுமே இதுவரை வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டதுபோல், யேமனில் 7.3 மில்லியன் எண்ணிக்கையிலான மக்களும், சோமாலியாவில் 2.9 மில்லியன் மக்களும், தெற்கு சூடானில் 5 மில்லியன் மக்களும், நைஜீரியாவில் 5.1 மில்லியன் மக்களும், ஆக மொத்தம் 20.3 மில்லியன் மக்கள் மிகுந்த உடனடி அபாய நிலைமையில் உள்ளனர். யேமனில் 462,000 எண்ணிக்கையிலான குழந்தைகளும், சோமாலியாவில் 185,000 குழந்தைகளும், தெற்கு சூடானில் 270,000 குழந்தைகளும், மேலும் நைஜீரியாவில் 450,000 குழந்தைகளும், ஆக மொத்தம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் மோசமான போஷாக்கின்மை அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதகமான வானிலைகள், குறிப்பாக வறட்சி, மனிதாபிமான பேரழிவுக்கு ஒரு பங்களிக்கும் காரணியாக இருக்கின்றன, இதற்கு முதன்மை காரணமாக இருப்பது உள்நாட்டு போர், இதில் வெளிப்படையாக "எதிரியின்" மக்களை பசியால் வாடச்செய்யும் நோக்கத்துடன் ஒவ்வொரு பக்கமும் உணவு பொருட்கள் விநியோகத்தையே ஒரு ஆயுதமாக பயன்படுத்திவருகிறது.

அமெரிக்க ஆதரவுடைய படைகள் இந்த நான்கு நாடுகளிலும் இத்தகைய போர் குற்றங்களை புரிந்த குற்றவாளிகளாக உள்ளனர், யேமன் பகுதியில் சவூதி தலையீட்டுக்கும், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் அரசாங்க படைகளுக்கும் முக்கிய ஆதரவாளராக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இந்த பஞ்ச அபாயத்திற்கும், ஒரு மாபெரும் மனிதாபிமான பேரழிவாக வளர்ந்துவரும் அபாயத்திற்கும் முக்கிய பொறுப்பாக உள்ளது.

சவூதி அரேபியாவிலிருந்தும், ஐக்கிய அரபு எமிரேட், பிற வளைகுடா முடியரசுகளிலிருந்து நேரடியாக வழிநடாத்தப்படும் அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய இராணுவ பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள யேமன் நாடு தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நியமித்த ஜனாதிபதியை தூக்கிவீசிய ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுடன் இவை போரில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கான கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவி தேவையை எதிர்நோக்கி உள்ளனர்.

ஏடன் மற்றும் ஹொடய்டா போன்ற துறைமுகங்கள் உட்பட நாட்டின் முக்கிய துறைமுகங்களை கட்டுப்படுத்துவதற்கு அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவுடன் இணைந்து சவூதி படைகள் போரிடுகின்றன, மேலும் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது ஒரு பொருளாதார முற்றுகையை சுமத்துவதற்காக செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் அமெரிக்க கடற்படை பிரிவுகளின் ஆதரவினை கொண்டிருக்கின்றன.

ஜனவரி இறுதியில் ஒரு கிராமத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு பேரழிவு தாக்குதலில் குறைந்தபட்சம் யேமன் நாட்டின் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருந்தனர். மேலும் அமெரிக்க சிறப்பு படைகளை சேர்ந்த ஒரு சிப்பாயும் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதிலும் பரந்தளவில் இதைப்போன்று நிகழ்த்தப்படுகின்ற ஆளில்லா ஏவுகணை தாக்குதல்களும், அவ்வப்போது நிகழ்த்தப்படும் அதிரடி தாக்குதல்களும் இதைப்போன்று மோசமானதாக இருக்கின்றன.

சோமாலியாவில், மொகடிசுவில் அமெரிக்க ஆதரவுள்ள அரசாங்கத்திற்கும், நாட்டின் பெரும்பாலான தெற்கு பகுதியை கட்டுப்படுத்துகின்ற அல் ஷபாப் போராளிகளுக்கும் இடையிலான நீண்டகால உள்நாட்டு போர், ஏற்கனவே 2011ல் ஒரு அழிவுகரமான பஞ்சத்தால் பாதிப்படைந்ததும், மேலும் கடந்த கால் நூற்றாண்டில் பெரும்பாலும் உள்நாட்டு போரால் நாசமாக்கப்பட்டதுமான ஒரு நாட்டையே மீண்டும் வீணடித்துவருகிறது,

ஐ.நா. மதிப்பீடுகளின்படி, நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் பாதியளவு, அதாவது ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டோர், மனிதாபிமான உதவியை எதிர்நோக்கியுள்ளனர். வறட்சி நிலவரங்கள் நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளை கொன்றுவிட்டது. சோமாலியாவிலும், அமெரிக்க இராணுவ படை பிரிவுகள் தொடர்ந்து செயல்படுவதற்கு சிறப்பு படை தாக்குதல்களையும், ஆளில்லா ஏவுகணை தாக்குதல்களையும் நடத்திவருகின்றன. அருகாமையிலுள்ள கென்யா நாட்டிலும் சோமாலிய அகதிகளின் நிறைந்து போயுள்ளனர், அங்கு மற்றொரு 2.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.

சூடானில் ஒரு நீண்டகாலம் நடைபெறும் உள்நாட்டு போராக வாஷிங்டனின் தலையீட்டின் மூலமாக உருவாக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு பெற்ற ஒரு ஆட்சியின் போட்டி பழங்குடி பிரிவினருக்கு இடையிலான ஒரு மோதலே தெற்கு சூடானில் ஒரு உள்நாட்டு போராக உள்ளது. ஒரு அமெரிக்கா மத்தியஸ்துவம் வகித்த ஒரு உடன்படிக்கையினாலும் மற்றும் பிரிவினைக்கு ஒப்புதலளிக்கும் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு பின்னர், 2011ல் தெற்கு சூடான் ஒரு புதிய சுதந்திர அரசாக நிறுவப்பட்டது.

புதிய நாட்டினுள் காணப்படும் பழங்குடிகுழுக்களுக்கு இடையேயான மோதல்களானது வறட்சியினாலும், கடுமையான வறுமையினாலும், மற்றும் நாட்டின் ஒரே குறிப்பிடத்தக்க இயற்கை வளமும், அண்டை நாடான சூடான் மூலமாக சீனாவிற்கு பெருமளவு ஏற்றுமதியை கொண்டதுமான எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் போராட்டம் போன்றவற்றினாலேயே முன்னிலும் அதிகரித்து வருகின்றன. இந்த நாடு நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் அவசரகால உணவு பொருள் விநியோகத்திற்கு போக்குவரத்தினை உருவாக்குவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

நான்கு நாடுகளில் இருப்பதைவிட தெற்கு சூடானில் சுமார் 40 சதவிகித மக்கள் பட்டினிக்கு முகம்கொடுக்கின்ற சூழலுடன் பஞ்சம் குறித்த எச்சரிக்கைகள் பெருகி கொண்டிருந்த நிலையில் அங்கு நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று கூறப்பட்டது. கடந்த மாதம், ஐ.நா. அதிகாரிகள் தெற்கு சூடானில் 100,000 மக்களுக்காக ஒரு முழு அளவிலான பஞ்சம் குறித்த எச்சரிக்கையை அறிவித்தனர். காலரா தொற்றுநோய் பரவிவருவது குறித்த தகவல்களும் வருகின்றன.

இந்த முறை, இஸ்லாமிய அடிப்படைவாத குழுவான போகோ ஹரம் என்பதற்கும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் இராணுவ ஆதரவினை கொண்ட நைஜீரிய அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதி விளைவாகவே நைஜீரியாவில் இத்தகைய பஞ்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, கமரூன், சாட் மற்றும் நைஜர் ஆகிய பகுதிகள் தங்களது எல்லைகளை பகுந்துகொள்கின்ற பகுதியான சாட் ஏரி பகுதி இந்த மோதலின் குவிமையப்புள்ளியாக இருந்துவருகிறது. இந்த பகுதிதான் மிக அதிக மக்கள் தொகையினை கொண்டுள்ளதும், மேலும் பஞ்சத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நான்கு பகுதிகளின் ஒரே வளமான பகுதியுமாக உள்ளது.

நைஜீரிய அரசு படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதல் மூலமாக போகோ ஹராம் குழுவை பின்னோக்கி தள்ளியதுடன், அமெரிக்க ஆதரவிலான இராணுவ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உணவு விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ளூர் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பாதிப்பின் அளவினையும் வெளிப்படுத்தியது.

மேற்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதியை உடனிணைத்துக்கொண்டுள்ள சஹாரா பாலைவனத்தின் தெற்கு விளிம்பில் ஒரு பரந்த பகுதியான ஸஹேல் பகுதி முழுவதிலும் அமெரிக்க இராணுவ படைகளின் வரம்பு பரந்துவிரிந்துள்ளது. மாலி மற்றும் புர்கினா பாசோ போன்ற முன்னாள் பிரஞ்சு காலனிகளில், அத்துடன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பகுதிக்கு இன்னும் தெற்கில், பிரஞ்சு மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆயுதப்படைகளும் செயல்பாட்டில் உள்ளனர்.

ஐ.நா. அறிக்கைகளை பொறுத்தவரை, சமீபத்திய மாதங்களில் யேமனில் மனிதாபிமான பேரழிவு அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் பட்டினியால் உடனடி அபாயத்தை எதிர்நோக்கும் யேமனியரின் எண்ணிக்கை நான்கு மில்லியனிலிருந்து ஏழு மில்லியனுக்கு உயர்வை கண்டது. யேமனில் ஒரு தடுக்கக்கூடிய நோயினால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை வீதம் இறக்கிறது.

கடந்த வாரம் ஐ.நா. சபையின் மனிதாபிமான தலைவர் யேமனில் இருந்தபோது, நாட்டின் மூன்றாவது பெருநகரம், மேலும் கடந்த ஏழு மாதங்களாக முற்றுகையிடப்பட்டிருக்கின்றதுமான தைய்ஜ் நகரத்திற்கு மனிதாபிமான பொருட்கள் விநியோகிப்பதற்காக முதல் பாரவூர்தி செல்வதற்கான பாதுகாப்பான வழித்தடத்தை பாதுகாக்க ஏதுவானதாக இருந்தது.

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அளிக்கப்பட்ட ஓ'பிரையன் அறிக்கை மீதான விவாதம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இத்தாலி, அத்துடன் சீனா மற்றும் ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் மூலமாக அடுத்தடுத்து உருவான எல்லா துன்பங்கள் பற்றி புலம்புகின்றதும், ஆனால் அனைத்தும் ஆழ்ந்த நெருக்கடியின் உண்மையான காரணத்தை மறைக்கின்றதுமான ஒரு பாசாங்குதனமான அறிக்கையாக இடம்பெற்றதாக தெரிவித்தது.

அமெரிக்க பிரதிநிதி மைக்கேல் சிசன் அவரது வழக்கமான கருத்துரைகளாக, "2017 ஆம் ஆண்டில் உலகம் பஞ்சத்தோடு போராடுவது குறித்து பாதுகாப்பு சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் சீற்றமடையவேண்டும். பஞ்சம் என்பது ஒரு மனிதனால் தீர்வு காணப்படக்கூடிய ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பிரச்சனை." என அறிவித்தார்.

நான்கு நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினரிடம் "பொதுமக்கள் அணுகுதலுக்கு முன்னுரிமை கொடுக்கவும்," "உதவிகளை தடுக்கவேண்டாம்" என்றும் அழைப்புவிட்டார். ஆனால் அமெரிக்க ஆதரவுடைய படைகள் குறிப்பாக யேமனில் சரியாக செயல்படுத்தி வருகின்றதும், மேலும் மற்ற மூன்று நாடுகளில் சற்று குறைந்த அளவிலும் இதையே செய்கின்றன.

ஈராக், சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட (முதல் மூன்றும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, இறுதியானது பல பசிபிக் புயல்களின் தாக்கத்தின் காரணமாக) மிகவும் தீவிரமான பாதிப்புக்குள்ளாகி, "நிலை மூன்று" என்ற உலக உணவு திட்டத்தின் மூலமாக வகைப்படுத்தப்படுகின்ற இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள மற்ற மனிதாபிமான நெருக்கடிகளை ஐ.நா. சபையின் அறிக்கை எடுத்துக்காட்டவில்லை. அதேபோல் லிபியா அல்லது ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற போர் நடவடிக்கைகளினால் சூறையாடப்பட்ட பேரழிவுகரமான உள்நாட்டு மோதலையும் இது எடுத்துக்காட்டவில்லை.

அதேபோல் உலகளவில் தீவிர உணவு உதவி தேவையுள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை குறித்தும் பரிசீலனை செய்ததில், பஞ்ச முன்னெச்சரிக்கை அமைப்புக்களின் வலைப்பின்னலை (Famine Early Warning Systems Network) பொறுத்தவரையில், 45 நாடுகளில் 70 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2015 முதல் உள்நாட்டு போர்களின் அதிகரிப்பு, வறட்சி, ஏனைய காலநிலையால் உந்தப்பட்ட நிகழ்வுகள், மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் விளைவாக 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உலக உணவுத் திட்டம் 2016ல், 8.6 பில்லியன் டாலர் ($8.6 billion) மதிப்புக்கொண்ட திட்டத்தின் செலவினங்களுக்கு நன்கொடையாளர்களிடமிருந்து 5.9 பில்லியன் டாலருக்கான ($5.9 billion) தொகை மட்டுமே பெறமுடிந்தது என்ற வகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பங்களிப்புகளில் ஒரு பற்றாக்குறையினை அனுபவித்தது. இதனால் கென்யாவிலும், உகண்டாவிலும் அகதிகளுக்கான பொருட்கள் வழங்கலை குறைப்பதற்கு தமது நிறுவனங்களை வலியுறுத்தவேண்டியிருந்தது. 2016ல் மொத்த நிதியாதாரமற்ற மனிதாபிமான முறையீடுகள் 10.7 பில்லியன் டாலராக ($10.7 billion) இருந்தது என்பது, 2012ல் இருந்து இத்தகைய கோரிக்கைகளின் மொத்த மதிப்பீட்டு தொகையைவிட பெரியளவினதாக இருந்தது.

இந்த தொகைகள் தேவை அடிப்படையில் மகத்தானதாக இருக்கும்போது, அவைகள் போர் மற்றும் இராணுவவாதம் மீது பெரும் சக்திகள் மூலமாக வீணடிக்கப்பட்டுவரும் வளங்களோடு ஒப்பிடுகையில் ஒரு வாளி நீரில் ஒரு துளியாகவே உள்ளது. மனிதாபிமான உதவிகளின் மொத்த பற்றாக்குறையானது, உலகளாவிய இராணுவ செலவினத்தின் மூன்று நாட்களுக்கான செலவின மதிப்பை விட குறைவானதாகவே உள்ளது. பஞ்ச நெருக்கடிக்காக 4.4 பில்லியன் டாலர் தொகையானது, அமெரிக்க பென்டகனின் ஒரு வாரத்திற்கான பொதுவான செலவினத்தின் பாதியளவாக உள்ளது.