ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian budget tabled amid demonetisation shock, mounting economic uncertainty

பணம் செல்லாததாக்குதல் அதிர்ச்சிக்கு மத்தியில் இந்திய வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது, பொருளாதார ஸ்திரமின்மையை பெருக்குகிறது

By Kranti Kumara
3 February 2017

இந்திய இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் நிதி அமைச்சராக அருண் ஜேட்லி புதன்கிழமையன்று ஏப்ரல் 1ல் தொடங்கும் 2017-18ம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

மே 2014ல் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அதன் நான்காவது வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார ஊக்க நடவடிக்கைகள், மற்றும் தொடர்கின்ற "நிதி ஒருங்கிணைப்பு" (சிக்கன நடவடிக்கை) மீதான இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்தின் பல்வேறு பிரிவுகளின் போட்டியிடும் கோரிக்கைகளை பி.ஜே.பி. சமநிலைப்படுத்த முயற்சித்துள்ளது.

புழக்கத்திலிருக்கும் 85 சதவிகிதத்திற்கும் மேலான நாணயத்தை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இனிமேல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் அதிர்ச்சியூட்டும் நவம்பர் மாத அறிவிப்பினால் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கத்தை தணிப்பது இன்னும் ஒரு முக்கிய கவலையாக இருந்தது. இந்த பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையானது இந்திய பொருளாதாரத்தின் பெரும் பிரிவுகளில் உடனடி பறிமுதல் செய்தலை விளைவித்ததால், மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலையே உருவாகிவருகிறது. விவசாயிகள் அவர்களது உற்பத்திப் பொருட்களை மிக அடிமட்ட விலைகளுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதுடன், தொழிலாளர்களை ஒப்பந்தத்திற்கு பெறுவதற்கோ, அல்லது அவர்களுக்கு குறைந்தபட்சம் கூலி கொடுக்கவோகூட இயலாத நிலையில் உள்ளனர் என்ற வகையில் கிராமப்புற இந்தியா குறிப்பாக கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

ஜேட்லி தனது வரவு-செலவுத் திட்ட உரையில், பாதுகாப்புவாத நடவடிக்கைகள், அமெரிக்க முதலீட்டுத் தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கு இந்தியா போன்ற நாடுகளின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது, மற்றும் பூகோள-அரசியல் மோதல், ஆகியவை பற்றிய ஒரு ஆக்கிரோஷமான அமெரிக்க முதல் கொள்கையில் உறுதிப்பாட்டுடன் குறிப்பாக டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஒரு புதிய அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, உலக பொருளாதாரத்தை எதிர்கொள்வதில் உள்ள பாரிய ஸ்திரமின்மையை பற்றிய ஒரு சிறுகுறிப்பை மட்டுமே வழங்கினார்.

அதற்கு ஈடாக, உலகின் பெரிய "வளர்ச்சியாக" இந்தியா உள்ளது என்ற கதையான பி.ஜே.பி. இன் மந்திரத்தையும் ஜேட்லி மீண்டும் வலியுறுத்தினார். அதேநேரத்தில், தொழில்துறை உற்பத்தி தேக்கநிலையில் உள்ளது, 2014ல் இருந்து ஏற்றுமதிகள் தீவிர சரிவினை கண்டுள்ளது, மற்றும் நவம்பர் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்திலிருந்து 10 பில்லியன் டாலருக்கும் கூடுதல் மதிப்பீட்டிலான அந்நிய முதலீட்டினை வெளியேற்றியது போன்ற எதுவும் ஒரு விடயமாக கருதப்படவில்லை.

"இந்த அனைத்து (உலக எதிர்மறையான) நிகழ்வுகளுக்கு மத்தியில்," "உலக பொருளாதார கட்டமைப்புக்குள் ஒரு பிரகாசமான இடமாக இந்தியா நிலைத்து நிற்கின்றது. இந்தியா பொருளாதார வெற்றிக்கு அதன் பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மை அடித்தளமாக இருப்பது தொடர்கிறது." எனவும் ஜேட்லி அறிவித்தார்.

அரசாங்கம் "அரசு தலைமையிலான" முதலீடு மூலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையில் உள்ள வீழ்ச்சியினை சரிக்கட்டுவதற்கு முனையும், அதாவது, போக்குவரத்து மற்றும் பிற "வணிக நட்பு" உட்கட்டமைப்பு திட்டங்கள் மீதான நிதியளிப்பிற்கு வரிசெலுத்துவோர் நிதியின் பயன்பாடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த வரவு-செலவுத் திட்டம் உள்ளது என்று இந்திய பெரு வர்த்தகத்தின் பெரும்பகுதியினர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

பிற மூலதன பிரிவுகள், குறிப்பாக வெளிநாடுகள், பி.ஜே.பி. அரசாங்கத்தை வலியுறுத்திய காரணத்தினால் தான் அதன் முதல் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்களை சுமத்துவதற்கு இட்டுசென்றதே தவிர, "நிதிய ஸ்திரப்படுத்தல்" மீதான "ஆதாயங்களை" கைவிடவில்லை. உதாரணமாக மேற்கத்திய கடன் தரநிர்ணய நிறுவனம் Standard and Poor's, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு கூடுதலாகாமல், 2017-18ம் ஆண்டின் நிதி பற்றாக்குறையினை கட்டுப்படுத்துவதற்கு முந்தைய வரவு-செலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களை பின்பற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தது. (இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினையே கொண்டிருந்த அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015-16 இல் 18 டிரில்லியன் டாலராக இருந்தபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 2.3 டிரில்லியன் டாலராகவே இருந்தது.)

இறுதியில், ஜேட்லியும் பிரதம மந்திரி நரேந்திர மோடியும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு ஏற்றவாறு இந்திய நிதி பற்றாக்குறையில் படிப்படியான குறைப்புக்கு "நிறுத்தம்" அளிக்க முடிவு செய்தனர், ஏனென்றால் இதன்மூலமாக இலக்கு வைக்கப்பட்டுள்ள ஊக்கப்பொதி நடவடிக்கைகள் மீது நிதியளிப்பை எளிதாக்க முடியும். இந்த வரவு-செலவுத் திட்டம், 2016-17ல் இருந்த அதே அளவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தயில் 3.2 சதவிகிதத்தினை வருகின்ற நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறையாக வைத்துக்கொள்ள அரசாங்கத்தை உடன்படவைக்கிறது.

"என்னுடைய அணுகுமுறை," என்னவென்றால் "...கிராமப்புற பகுதிகள், உள்கட்டமைப்பு, நிதிய மதி நுட்பத்துடனான வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் மீது அதிகம் செலவிடவேண்டும்." என்று ஜேட்லி கூறினார்.

உண்மையில், யதார்த்தத்தின் அடிப்படையில் மிகப்பெரிய அதிகரிப்புகள் உள்கட்டமைப்பிலும், இராணுவ செலவினங்களிலும் உள்ளன.

பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை, பாரிய வறுமை மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதியின்மை போன்ற வகையில் முழு நாசம் விளைந்து, அனைத்தும் கருகல் நோய் போன்று இருப்பினும், நகர்புற இந்தியாவின் ஒரு சில கூடுதல் சிறப்புரிமை பெற்ற நிலப்பகுதிகளை பொறுத்தவரை, பி.ஜே.பி. அரசாங்கம் உண்மையான வகையில் நிதியளிப்பினை அதிகரித்து வருகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சமூக திட்டங்கள் மீது தொடர்ந்து ஓரளவுக்கு மட்டும் வரவு-செலவு திட்டம் வகுத்துள்ளது.

மொத்த உத்தேச செலவு ரூபாய் 21.47 டிரில்லியனாக (315.7 பில்லியன் டாலர்) உள்ளது, அசல் உத்தேச வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிரானதாக, 2016-17ல் இருந்த உண்மையான செலவினத் தொகை ரூபாய் 20.14 டிரில்லியன் என்பதிலிருந்து சற்று அதிகரித்ததாக மட்டுமே உள்ளது.

உள்நாட்டு தேவைக்கு உந்துதல் அளிப்பதற்கு, இரயில்வேக்கு மட்டும் ரூபாய் 1.3 டிரில்லியன் நிதி ஒதுக்கீட்டூடன் உள்கட்டமைப்பு செலவினத்திற்காக ரூபாய் 4 டிரில்லியனுக்கு நெருக்கமாக நிதி ஒதுக்கீட்டினை ஜேட்லி மேற்கொண்டார்.

அரசாங்கமும் சிறு தொழில்கள் மீதான வரிகளில் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், வருமானத்தில் முதல் 250,000 ரூபாய் (கிட்டத்தட்ட 3,700 டாலர்) வரையிலான தொகைக்கு 10 முதல் 5 சதவிகிதம் வரையிலும் வரி செலுத்தினால் போதுமென்று வருமான வரி விகிதத்தினை குறைத்து உள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டம், 2017-18ல் இராணுவ செலவினத்திற்கு 3.6 டிரில்லியன் ரூபாய் அல்லது கிட்டத்தட்ட 53 பில்லியன் டாலர் நிதியினை ஒதுக்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டில், பாகிஸ்தான் உடனான கடைசி இலையுதிர்கால போர் நெருக்கடியினால் அரசாங்கம் கூடுதல் நிதியளிப்பை மேற்கொண்டதை தொடர்ந்து உண்மையான இராணுவ செலவினம் ரூபாய் 3.45 டிரில்லியன் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் இந்திய உயரடுக்கு அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை முன்னெடுக்க தொடங்கியதிலிருந்து இந்தியாவின் இராணுவ செலவு வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. மோடியின் கீழ், இந்தியா சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலில் அதனை ஒரு "முன்னணி" அரசாக திறம்பட மாற்றுவதற்கு அமெரிக்காவுடன் ஒரு "பூகோள மூலோபாய கூட்டணி" என்பதில் தன்னை இறுக்கமாக்கி கொண்டுள்ளது.

இந்தியாவில் 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நாள் வாழ்விற்கு 2 டாலருக்கும் குறைவாக செலவு செய்கின்ற நிலையிலும், இந்திய வரவு-செலவுத் திட்டத்தில் 17 சதவிகிதத்திற்கு நெருக்கமான நிதி இராணுவ செலவினங்களுக்கு கணக்கிடப்படுகிறது.

உலக ஆயுத விற்பனையில் 14 சதவிகிதத்தை நுகருகின்ற, உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக சந்தேகத்திற்குரிய பெருமையையும் இந்தியா கொண்டுள்ளது.

கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு குறைந்த கூலியுடனான ஊழிய வேலைக்கு உத்தரவாதமளிக்கின்ற, MNREGA (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்) திட்டத்தின் கீழ் செலவினங்களில் ஒரு அதிகளவு அதிகரிப்பினை ஜேட்லி ஏற்படுத்தியுள்ளார்.

வருகின்ற ஆண்டில் MNREGA க்கு ரூபாய் 480 பில்லியனுக்கான ஒரு வரவு-செலவுத் திட்டத்தை வகுத்துள்ளார். உத்தேசிக்கப்பட்ட இந்த செலவினத்திற்கு கூடுதலாக ஒரு 100 பில்லியன் ரூபாய் நிர்ணயித்தே பிப்ரவரி 2016ல் வரவு-செலவுத் திட்டத்தை வழங்கினார்.

இருப்பினும், கிராமப்புற இந்தியாவை பீடித்துள்ள நாள்பட்ட வேலை நெருக்கடி மற்றும் பணம் செல்லாததாக்குதல் எனும் பேரழிவு இவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டில் MNREGA மீதான செலவு, அரசாங்க புள்ளிவிபரங்களை பொறுத்தமட்டில், 480 பில்லியன் ரூபாய் அளவுக்கு நெருக்கமாக ஏற்கனவே அதிகரித்துவிட்டது.

MNREGA மீதான போலியான செலவு அதிகரிப்பு மற்றும் வணிக ஏற்பு உள்கட்டமைப்பு செலவினம் இவற்றினை தாண்டி, கடந்த தசாப்தத்திற்கும் மேலாக பேரளவில் எண்ணிக்கை அதிகமாகி வருகின்ற வேலையற்றவர்களுக்கு ஜேட்லி திறம்பட எதனையும் வழங்கவில்லை.

அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு மட்டும் இந்திய பொருளாதாரத்தின் முறையான அல்லது ஒழுங்கு செய்யப்பட்ட பிரிவில் 150,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டன. அப்படியிருந்தும், ஒவ்வொரு மாதமும் உழைப்புச் சக்திக்குள் ஒரு மில்லியன் புதியவர்களின் வரவு உள்ளன.

இந்திய குடும்பங்களின் 67 சதவிகிதத்திற்கு சற்று கூடுதலாக குடும்பங்கள் மாதத்திற்கு ரூபாய் 10,000 (147 டாலர்) க்கும் குறைவாக ஊதியம் பெறுவதாகவும், இந்திய குடும்பங்களில் 77 சதவிகிதத்திற்கு கூடுதலாக குடும்பத்திற்கு ஒரு நபருக்கு கூட வழக்கமான ஊதியத்துடன் கூடிய வேலையின்றி இருப்பதாகவும் தொழிலாளர் அமைச்சகத்தின் 2015 "வேலைவாய்ப்பு-வேலையின்மை மதிப்பாய்வு" காட்டுகிறது. 

புதன்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட அறிவிப்பின்போது அரசாங்கம் அதன் நோக்கங்களான, அதன் பங்குகளை விற்பனை செய்வது, தனியார்மயமாக்குதலின் உந்துதல் ஆகியவற்றை திரும்ப திரும்ப வலியுறுத்தியது. பங்குகளை விற்பதன் மூலமாக 725 பில்லியன் ரூபாய் (11 பில்லியன் டாலர்) அளவிற்கு உயர்த்துவதற்கு ஜேட்லி இலக்கு நிர்ணயித்தார், பாரியளவில் இணைக்கப்பட்ட பல பொதுத்துறை பிரிவுகள் மற்றும் அதிகளவு விபத்து பாதிப்புக்குள்ளாகும் இந்திய இரயில்வே உட்பட முக்கிய இலக்கு வைக்கப்பட்டு, இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தை விட இரண்டு மடங்கு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்வினையாக ஆளும் உயரடுக்கினர் மத்தியில் பொதுவாக சாதகமான சூழ்நிலையே உள்ளது. முன்னணி நாளிதழ்களின் பல தலையங்கங்களில், வலதுசாரி Indian Express மற்றும் சென்னையை தளமாக்கொண்ட தாராளவாத Hindu நாளிதழ்கள் உட்பட, இந்த வரவு-செலவுத் திட்டம் "ஜனரஞ்சக" செலவுகளை தவிர்க்கின்றது, அதாவது சமூக செலவினங்களை அதிகரித்துள்ளது என்று அரசாங்கத்தை பாராட்டுகின்றன.

"முக்கியமான மாநில சட்டசபை தேர்தலில்" "இதை முன்வைப்பதை" நிராகரித்து அரசாங்கம் "இன்னும் சில நாட்களே" உள்ளன என்றும் மற்றும் "ஏற்கனவே முதலீடு தீர்ந்துபோன ஒரு பொருளாதாரமாக" "உள்நாட்டில் (பணம் செல்லாததாக்குதல் மூலமாக) மற்றும் பூகோள அளவிலான சிக்கலினால் (புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் கச்சா எண்ணெய் விலை, அதிகரித்துவரும் வட்டி விகிதங்கள் போன்ற நெருக்கடிகளுடனான 'அமெரிக்கர்களிடமிருந்து வாங்கு, அமெரிக்கர்களை பணியமர்த்து' கொள்கை)" அடிபட்டுகொண்டே இருக்கிறது என்ற அடிப்படையில் "வரவு-செலவுத் திட்டத்திலிருந்து சிறந்த சலுகை நீக்கங்கள்" இருப்பதாக Indian Express அறிவித்தது.

வரவு-செலவுத் திட்ட நாளன்று, இந்திய முக்கிய பங்கு சந்தை குறியீட்டு எண் ஒரு மூன்று மாத கால அளவு உயர்வு கண்டது. மூலதன ஆதாயங்கள் வரி விதிப்பு மீதான ஒரு அதிகரிப்பு போன்ற வதந்தியுடன் அரசாங்கத்தின் முடிவை தொடர முடியாது என்பது இந்த உயர்வுக்கான முக்கிய காரணியாக இருந்தது.

எனினும், அரசாங்கம் பெருவணிக வரிகளை 30 லிருந்து 25 ஆக குறைப்பது குறித்த அதன் வாக்குறுதியை செயல்படுத்த தவறியது அல்லது செயல்படுத்துவதற்கு காலக்கெடு அறிவிக்காதது பற்றி பெரும் வணிகம் ஏமாற்றம் அடைந்தது.

Financial Times வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு ஆய்வாளர் JP மோர்கன், பூகோள அளவில் கூட்டுசேர்ந்து அச்சுறுத்துகின்ற பொருளாதார புயல்கள் உள்ளபோதிலும், இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்க கூடுமென மிகவும் மெத்தனமான போக்கான கண்ணோட்டத்தில் ஜேட்லி மூலமாக கருத்து வெளிப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

"உலக பொருளாதார அதிர்ச்சி மீதான பரிமாணம் குறித்து அவர்கள் கலந்துரையாடுவது அல்லது பகுப்பாய்வு செய்வது.... மற்றும் இந்தியாவிற்காக எந்தெந்த விடயங்களில் மாற்றம் வேண்டும்," என்பது போன்று அதிகாரிகளிடமிருந்து கிட்டத்தட்ட எந்தவொரு விடையிறுப்பும் இல்லை." என்றும் ஆய்வாளர் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு நிதி அமைச்சகம் மூலமாக வெளியிடப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பாக இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளின் இருப்புநிலை குறிப்புகள் மற்றும் அதிக கடன்பட்டுள்ள உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இவை உள்ளிட்ட இந்திய பொருளாதாரத்தின் ஒரு மங்கலான சித்திரத்தை வரைந்தது.

உயர்மட்ட 100 பெரு நிறுவன கடனாளிகள் பற்றிய 57ம் ஆய்வின்படி, 75 சதவிகிதத்திற்கும் மேலாக கடன் குறைப்புகள் தேவைப்படும், மேலும் இந்த கடனாளிகள் வங்கி அமைப்பினையே மூழ்கடிப்பதற்கு அச்சுறுத்தக்கூடும் என்று வரு மதிப்பீடு குறிப்பிடுகின்றது. இந்த ஆய்வு, 13 பொதுத்துறை வங்கிகள் கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளன என்று கண்டறிந்துள்ளதுடன் மற்றும் ஒரு அரசாங்கத் தலைமையிலான பிணை எடுப்புக்கும் ஆலோசனை வழங்குகின்றது, இதனால் இந்த கடன் சுமைகள் வரிசெலுத்துபவர்கள் மீது விழும், அதாவது அநேகமாக உழைக்கும் மக்களால் செலுத்தப்பட வேண்டியிருக்கும்.

மூலதன முதலீட்டை எடுத்துக்கொண்டால், புள்ளிவிபரங்கள் கூடுதலாக பேரழிவினை தரக்கூடியவையாக இருக்கின்றன. 2010-11ம் நிதி ஆண்டில் தனியார் முதலீட்டில் வளர்ச்சி 5 சதவிகிதம் அதிகமாக இருந்தபோதிலும், 2015-16ல் அது எதிர்மறையாகியது. நடப்பு நிதி ஆண்டில், வணிக முதலீடு 7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.