ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The class struggle in the US in 2017

2017 இல் அமெரிக்காவில் வர்க்க போராட்டம்

Jerry White
4 January 2017

2017 ஆம் ஆண்டு உறுதியாக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் வர்க்க போராட்டம் அதிகரித்து வரும் ஓர் ஆண்டாக இருக்கப் போகிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் உயரடுக்கும் அவர்களது அரசியல் சேவர்களும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் போர் செலவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய விரும்புகின்றன.

அமெரிக்காவில், தொழிலாள வர்க்கம் அமெரிக்க வரலாற்றிலே வேறெந்த ஒன்றையும் போலில்லாத ஓர் அரசாங்கத்தை எதிர்கொள்ள உள்ளது, அது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியனரின் மேற்பார்வையில் தசாப்த காலமாக நீண்ட சமூக எதிர்புரட்சியை தொடரும் மற்றும் தீவிரப்படுத்தும். வரவிருக்கின்றன ட்ரம்ப் நிர்வாகம், பில்லியனர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் பரம பிற்போக்குத்தனவாதிகளால் நிரப்பப்பட்டுள்ளது. அது கடந்த நூற்றாண்டில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட எஞ்சியுள்ள ஒவ்வொரு ஆதாயத்தையும் அழிக்க பொறுப்பேற்றுள்ள செல்வந்த தட்டின் அரசாங்கமாக, அதற்காக மற்றும் அதனால் நடத்தப்படும் ஓர் அரசாங்கமாக இருக்கும்.

ட்ரம்ப், குறைந்தபட்ச கூலி சட்டங்கள் மற்றும் தொழிலிட பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளில் தொடங்கி, மருத்துவக் கவனிப்பு, மருத்துவ சிகிச்சை உதவி மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற அடிமட்ட சமூக திட்டங்கள் வரையில், இவற்றில் பெருநிறுவன இலாபம் மீதிருக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் நீக்குவதன் மூலமாக "மீண்டும் தலையாய அமெரிக்காவை உருவாக்க" விரும்புகிறார். இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவார்கள், ட்ரம்ப் மீது தொழிலாளர்களின் பிரிவுகளிடையே இருந்த ஏதோ சில பிரமைகள் இருந்திருந்தாலும் அவை ஏற்கனவே வேகமாக மறைந்து வருகின்றன.

வெகுஜன ஊடகங்களால் அரிதாகவே கூறப்பட்ட போதினும், 2017 ஒரு தொடர்ச்சியான வேலைநிறுத்த அச்சுறுத்தல்களுடன் மற்றும் அமெரிக்காவில் தொழிலாளர் உடன்படிக்கை நிறைவடைதலுடன் தொடங்குகிறது. இவற்றில் உள்ளடங்குபவை:

மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியங்கள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதல் ஒபாமாவினது பொருளாதார கொள்கைகளின் மையத்தில் இருந்தது. இது வெறுமனே ட்ரம்ப் இன் கீழ் தீவிரமாக்கப்படும். சுமார் 120,000 ஓய்வூபெற்ற நிலக்கரி சுரங்க தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் மருத்துவக் காப்பீட்டு மற்றும் ஓய்வூதிய நலன்களில் வெட்டுக்களை முகங்கொடுக்கின்றனர், சிலர் ஏறத்தாழ ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், ஏனென்றால் ஒருங்கிணைந்த சுரங்க தொழிலாளர்களது நிதியங்கள் திவால்நிலைமைக்கு அண்மித்துள்ளது.

கார் விற்பனைகள் சரிந்து வருவதால், ஜெனரல் மோட்டார்ஸ், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து, வேலைகளை வெட்ட முனைகின்ற நிலையில், அந்த மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அடுத்த சில மாதங்களில் அவர்களது வேலைகள் வெட்டப்படுவதை முகங்கொடுக்கின்றனர். ட்ரம்ப் அவரது பெருநிறுவன போட்டித்தன்மை குழுவில் ஜெனரல் மோட்டார்ஸ் இன் தலைமை செயலதிகாரி மேரி பார்ராவை நியமித்துள்ளார்.

ஃபோர்டு நிறுவனமும் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும், செவ்வாயன்று மிகப்பெரிய எக்காளத்துடன், அந்நிறுவனம் மெக்சிகோவில் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு புதிய ஆலை கட்டமைக்கும் திட்டங்களை இரத்து செய்வதாகவும், அதற்கு பதிலாக டெட்ராய்டு புறநகரின் ஆலை விரிவாக்கத்தில் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்தன. “ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப் இன் கீழ் அமெரிக்க உற்பத்தித்துறை சூழல் இன்னும் சாதகமாக இருக்கும் என்பதுடன், அவர் பின்பற்ற இருப்பதாக அறிவித்திருக்கும் வளர்ச்சிக்கு சாதகமான கொள்கைகள் சிலவையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கும் காரணிகள் ஒன்றாகும். ஆகவே இதுவொரு நம்பிக்கை வாக்கு,” என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டது என்று ஃபோர்ட் தலைமை செயலதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ் தெரிவித்தார்.

உண்மையில் ஃபோர்ட் நிர்வாகிகளும் செல்வந்த முதலீட்டாளர்களும் நிச்சயமாக ட்ரம்ப் பின்பற்ற இருக்கின்ற வரி வெட்டுக்கள், நெறிமுறை தளர்த்தல் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளின் ஆதாயங்களை அறுவடை செய்யவிருக்கிறார்கள், அதேவேளையில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க அதிகாரத்துவவாதிகள் விருப்பத்திற்கும் அதிகமாகவே அவர்களது சேவைகளை வழங்க இருக்கிறார்கள்.

வர்க்க மோதலின் வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் அடிப்படை அரசியல் கேள்விகளை முன்னிறுத்துகிறது.

முதலாவதாக தொழிலாளர்களது போராட்டங்கள் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுக்கு அடிபணிய செய்யப்படக்கூடாது, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அவை தொழிலாளர்களது அமைப்புகளாக அல்ல, பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் கருவியாக செயல்படுகின்றன.

நிஜமான கூலிகளில் தசாப்த காலமாக ஏற்பட்டு வரும் வீழ்ச்சியைத் தடுப்பதற்கான தொழிலாளர்களின் முயற்சிகள் கணிசமாக அதிகரித்திருப்பதை ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகள் கண்டுள்ளன. ஒவ்வொரு விடயத்திலும், அவர்கள் ஒபாமா நிர்வாகத்துடன் நெருக்கமாக வேலை செய்த தொழிலாள வர்க்க விரோத மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களால் மூச்சடைக்க செய்யப்பட்டனர் அல்லது அவற்றுடன் மோதலுக்கு வந்தனர்.

2015 இறுதியில், ஒப்பந்தங்களை விற்றுத்தள்ள ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) அழுத்தமளித்ததற்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்கள் போராடினர், அந்த ஒப்பந்தங்கள் பொய்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடியின் ஒரு கலவையைக் கொண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டன. டெட்ராய்டு ஆசிரியர்களின் தொடர்ச்சியான பல மறைமுக மருத்துவ விடுப்பு போராட்டங்களுடன் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆசியர்களின் அந்நடவடிக்கை டெட்ராய்டு ஆசிரியர் கூட்டமைப்பு, மற்றும் அதன் தாய் அமைப்பான அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பிற்கு எதிராக இருந்தது, இவை பொதுக் கல்வித்துறை மீதான தாக்குதலை ஆழப்படுத்திய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு உதவியதன் மூலம் அவர்களை வாய்மூடச் செய்தது.

இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 39,000 வெரிஜொன் தொலைதொடர்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 5,000 மின்னிசொடா மருத்துவமனை தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம், பிலடெல்பியா போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு வெளிநடப்பு ஆகியவை நடந்தன. இவை அனைத்தும் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவை வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைத் தாக்கிய ஒப்பந்தங்களைத் திணித்தன.

சாமானிய தொழிலாளர்களின் ஜனநாயகரீதியிலான கட்டுப்பாட்டில், வர்க்க போராட்ட முறைகளின் அடிப்படையில், தொழிலாளர்கள் அவர்களது போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தைப் பலவீனப்படுத்த பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பிளவும் கடந்து வரப்பட வேண்டும் மற்றும் சகல தொழிலாளர்களின் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு பொதுவான போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக, வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நிஜமான போராட்டமானது, தங்களது "சொந்த" பெருநிறுவன முதலாளிகளின் இலாப நலன்களுக்கு தொழிலாளர்களை அடிபணிய வைக்கும் தொழிற்சங்கங்களால் நீண்டகாலமாக ஊக்குவிக்கப்படும் பொருளாதார தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டும்.

வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி அதிகரித்தளவில் சர்வதேச வடிவம் எடுக்கும், எடுக்க வேண்டும். கடந்த ஆண்டின் போது, பிரான்சில் பிற்போக்குத்தனமான தொழிலாளர் "சீர்திருத்தங்கள்", மற்றும் போர்ச்சுக்கல் மற்றும் கிரீஸ் இல் வங்கிகளால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு உட்பட மிகப்பெரிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஐரோப்பா எங்கிலும் வெளிப்பட்டன. இந்தியா, நரேந்திர மோடியின் வலதுசாரி திட்டநிரலுக்கு எதிராக மனித வரலாற்றின் மிகப் பெரிய ஒருநாள் வேலைநிறுத்தங்களைக் கண்டது, அதேவேளையில் 2016 இன் முதல் பாதியில் சீனாவில் வெடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.

மெக்சிகோ, வெனிசூலா மற்றும் பிரேசிலில் அரசு வன்முறைக்கு எதிராக ஆசிரியர்கள், எண்ணெய் துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனைய பிரிவு தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களும் நடந்தன. கனடாவில், நோவா ஸ்காடியாவில் கல்வி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி 9,300 ஆசிரியர்களது போராட்டங்களுடன் அந்த ஆண்டு முடிவுற்றது, கனடா கூலி உறைவின் மீது நடந்து கொண்டிருக்கிறது.

இறுதியாக, தொழிலாளர்களது அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு என்பது அடிப்படையில் ஓர் அரசியல் போராட்டமாகும். வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசு என்பது வர்க்க ஆட்சியின் ஒரு கருவி என்ற யதார்த்தம் மிகவும் அப்பட்டமான வடிவத்தில் அம்பலப்படும். ஒரு கிளிண்டன் நிர்வாகம் இருந்திருந்தால் தொழிலாளர் சார்பு கொள்கையைப் பின்பற்றி இருக்கும் என்ற பிரமையில் யாரேனும் இருந்தால், அவர் கடந்த எட்டாண்டு சாதனைகளையும் மற்றும் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜனநாயக கட்சியின் விடையிறுப்பையும் மட்டுமே பார்த்தாலும் போதும். ட்ரம்ப் இன் வலது சாரி திட்டநிரலுக்காக அவரை விமர்சிப்பதற்கு பதிலாக, ஜனநாயக கட்சியினர் அவர் ரஷ்யாவிற்கு எதிராக போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக இல்லை என்பதற்காக அவரை குறை கூறி கொண்டிருக்கின்றனர், அதேவேளையில் அவரது தேசிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அவருடன் கூடி இயங்க சூளுரைக்கின்றனர்.

2015 இல் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் தீவிரமயப்படல், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலின் போது தன்னைத்தானே ஒரு சோசலிஸ்டாக மற்றும் சமூக சமத்துவத்தின் எதிர்ப்பாளராக முன்வைத்த பேர்ணி சாண்டர்ஸ் க்கான ஆதரவில் வெளிப்பட்டது. சாண்டர்ஸ், அந்த எதிர்ப்பை, நடப்பில் இருப்பதைப் பேணுவதற்கான வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் திருப்பிவிடுவதற்கு அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணியை செய்தார். ஆனாலும் மில்லியன் கணக்கானவர்கள் சாண்டர்ஸை ஆதரித்தனர் ஏனென்றால் அவரது அரசியல் துரோகத்திற்காக அல்ல, மாறாக அவர் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொருளாதார அமைப்புமுறைக்கு ஏதோவொரு வித எதிர்ப்பை அவர்கள் விரும்புகிறார்கள்.

2017 இல் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் இன்றியமையா கேள்வி, வரவிருக்கின்ற மிக முக்கிய போராட்டங்களுக்கு ஒரு சோசலிச தலைமையை அபிவிருத்தி செய்வதாகும். சோசலிச சமத்துவக் கட்சி, வேலைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளுக்காகவும், பொலிஸ் வன்முறை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் மற்றும் ஒவ்வொரு போராட்டத்தையும், சோசலிசத்திற்காக போராடும் ஒரே அரசியல் இயக்கத்திற்குள் ஐக்கியப்படுத்த போராடி வருகிறது. சோசலிசத்திற்காக போராடுவதில் உடன்படும் அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணையவும் மற்றும் அதை கட்டியெழுப்பவும் நாம் ஊக்குவிக்கிறோம்.