ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German police spread false information about events in Cologne on New Year’s Eve

கோலோனில் புத்தாண்டு தின நிகழ்வுகள் பற்றி தவறான தகவல்களை ஜேர்மன் பொலிஸ் பரப்பியுள்ளது

By Elisabeth Zimmermann
25 January 2017

இரண்டாவது முறையாக, அகதிகள் பற்றி வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்கள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை பரப்புவதற்கும், மேலும் ஒரு பொலிஸ் அரசை உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்கும் கோலோன் புத்தாண்டு தின நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2015ல், அகதிகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்திற்கு இயன்றளவு கைப்பை களவுகளும், அச்சுறுத்துவதும் மிகப்பெரியளவில் மிகைப்படுத்தப்பட்டது மற்றும் சுரண்டப்பட்டது. இந்த நாள் வரைக்கும், பாரியளவில் பாலியல் தாக்குதல்கள் போன்ற கூற்றுக்களை நியாயப்படுத்துவதற்கு எந்தவித உறுதியான சான்றும் முன்வைக்கப்படவில்லை.

இந்த வருடம், அடையாள அட்டைகளை சோதனையிடவும், மற்றும் வெளிநாட்டினர் போல் தோன்றும் ஆண்களை துன்புறுத்தவும், 1,700 மாநில அரசு பொலிஸ், 300 மத்திய பொலிஸ் மற்றும் 600 கோலோன் நகர பாதுகாப்பு காவலர்கள் ஆகியோரை பயன்படுத்தி பொலிஸ் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையினை மேற்கொண்டது.

நகரின் முக்கிய இரயில் நிலையத்தில் பல நூறு "Nafri" (வட ஆபிரிக்கர்கள்)களின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டது பற்றி பொலிஸ் அறிக்கைகளை வெளிவிட்டது. ஜேர்மன் இரயில்வே (Deutsche Bahn) இன் அறிக்கையின்படி, அங்கு எந்தவொரு தாக்குதலும் நடந்திராதபோதும், கோலோன் டொய்ட்ச் இரயில் நிலையத்தில் அவர்கள் நான்கு இரயில்களை நிறுத்தியதுடன், பயணிகளை இரயிலிருந்து இறங்குவதற்கும் கட்டாயப்படுத்தினர்.

பின்னர், பொலிஸ் ஆணையாளர் ஜூர்கன் மாத்திஸ் "Nafri" போன்ற இனவாத பதப் பிரயோத்திற்கு மன்னிப்பு கோரினார். எனினும், கோலோனில் 2,000 க்கும் மேற்பட்ட வட ஆபிரிக்கர்கள் "ஒன்றாக சேர்ந்திருந்தனர்", அவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு பிரதான இரயில் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர் என்ற பொலிஸின் அறிக்கைகளை அவர் மறுக்கவில்லை.

மாறாக, Spiegel Online ஐ பொறுத்தவரை, "அந்த ஆண்கள் ஜேர்மன் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர். இதனால் அங்கு ஏதேனும் கூட்டாக செயல்படுகின்றனரோ என்று பரிசோதிக்கவும், மேலும் அங்கிருந்தவர்கள் வைத்திருந்தவற்றை சோதனையிடவும் பொலிஸ் விரும்பினர்" என்று பொலிஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டதாக தெரிவிக்கிறது.

இதிலிருந்து, "பொலிஸ் உடனான ஒரு நனவான மோதல் அபாயம்" பற்றி முன்னணி அரசியல்வாதிகள் பின்னர் புலம்பினர். சாக்சோனி மாகாண உள்துறை மந்திரி, மார்குஸ் உல்பிக் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் - CDU) பின்வருமாறு தெளிவுபடுத்துவதற்கு கோரினார்: "மெக்ரெப் நாடுகள் என்று குறிப்பிடப்படும் மொராக்கோ, துனிசி, அல்ஜீரியா நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் பல நகரங்களிலிருந்து ஒரு பெரியளவிலான ஒன்றுகூடல் இருந்தது என்பது பற்றி நான் கவலையடைந்தேன்." உல்பிக் பொறுத்தவரை, "இவை வெறும் தன்னிச்சையான அல்லது எதேச்சையான ஒன்றுகூடலா, அல்லது ஏற்பாடு ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடலா?" என்ற வகையில் ஒருவர் கேள்வியை முன்வைக்கவேண்டியுள்ளது.

"வன்முறையை பயன்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் அங்கு மீண்டும் வந்திருந்தனர்" என்று WDR வானொலி அறிவித்தது. "எங்களது மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அபாயத்தினை விளைவிக்கின்ற வகையில் நீலக்கண் கண்கள் கொண்ட பன்முக கலாச்சாரத்தினை நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (Christian Social Union-CSU) பொது செயலர் ஆன்ட்ரியாஸ் ஷொயர் பரபரப்பு செய்தித்தாளான Bild இல் எச்சரித்தார். மேலும் Frankfurter Allgemeine Zeitung இன் வலைத் தளத்தில், பதிவர் "டான் அல்போன்ஸோ" "Nafri" க்கு இந்த கேள்வியை முன்வைத்தார்: "நீங்களும் உங்கள் நண்பர்களும் ஏன் 'ஆத்திரமூட்டுவதற்கு' ஒரு காரணமாக இருக்கிறீர்கள்?"

அதிக அளவிலான பொலிஸுக்கும், கூடுதல் வீடியோ கண்காணிப்புக்கும், மற்றும் நிராகரிக்கப்பட்ட வட ஆபிரிக்க தஞ்சம் கோருவோர் வேகமாக நாடு கடத்தப்படுவதற்கான அழைப்பும் சூறாவளி வலிமை பெறுகின்றது.

அத்தகைய கூற்று அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்டிருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஜனவரி 13 அன்று, கோலோன் பொலிஸார், புத்தாண்டு தினத்தன்று அவர்களால் அடையாள அட்டைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பற்றிய தங்களது அறிக்கையினை "திருத்தினர்".

"வட ஆபிரிக்கர் போல் தோற்றமளிக்கின்ற 2000 இளைஞர்கள்" கோலோனில் உள்ள பிரதான இரயில் நிலையத்திற்கும், கோலோன் டொய்ட்ச் ரயில் நிலையத்திற்கும் வந்துவிட்டனர் என்று புத்தாண்டின் வேளையில் உடனடியாக அவர்கள் கூறிவிட்டனர், அதில் 674 நபர்களின் அடையாள அட்டைகளை மட்டும் பொலிஸ் சோதனையிட்டுள்ளதாக தற்போது தெரிவித்தனர். பொலிஸ் நடத்திய மொத்தம் 2,500 அடையாள அட்டைகள் சோதனையில், ஒரே நபர்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இதுவரை பொலிஸ் 425 நபர்களின் தேசியத்தை கண்டறிய முடிந்ததில், வெறும் 30 பேர் வட ஆபிரிக்காவிருந்தும், 17 பேர் மொரோக்கோ மற்றும் 13 பேர் அல்ஜீரியாவிலிருந்து வந்தவர்களாக இருந்தனர். மேலும் அதில் தொன்னூற்று ஒன்பது ஈராக்கியர்கள், 94 சிரியர்கள், 48 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 46 ஜேர்மனியர்கள் இருந்தனர். இவ்வாறு அடையாள அட்டைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணையாளர்களுக்கு கிடைத்த ஆதாரங்களைப் பொறுத்தவரையில், 2015 புத்தாண்டு தினத்தையொட்டிய சந்தேக நபர்களில் ஒருவர் கூட இப்போது வந்திருக்கவில்லை.

எனவே, ஒரு "ஒன்றாக சேர்வதற்கும்," "பொலிஸ் உடனான ஒரு திடீர் மோதலுக்கும்" அல்லது பல ஆயிரக்கணக்கான நபர்கள் சேர்ந்து குற்றம்புரிகின்ற விதத்திலான ஒரு சதிக்கும் அங்கு வாய்ப்பு இருப்பதற்கு சாத்தியமில்லை. ஒரு புலன்விசாரணையாளரை பொறுத்தவரையில், Kölnische Rundschau பத்திரிகை மேற்கோளின்படி, ஜேர்மன் மத்திய அல்லது மாகாண அரசுகளின் அகதிகள் தங்கியிருக்கும் நிலையங்களில் இருந்து சாதாரணமாக முன்னரே அறிமுகமான பல நபர்கள், அருகாமையிலுள்ள பெரிய நகரத்தில் 2016 புத்தாண்டினை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வாகவே இது பெரும்பாலும் உள்ளது.

புத்தாண்டு வேளையிலான பொலிஸ் தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் விரிவாக அறிக்கைகளை வெளிவிட்டிருந்தபோதும், அதில் பொலிஸ் இனரால் செய்யப்பட்ட "திருத்தங்கள்" தொடர்பாக எந்தவொரு சிறியளவிலான குறிப்பும் வெளியிடப்படவில்லை. இணைய தளத்தில் இந்த "போலி செய்தி" பற்றி அவர்கள் ஆர்வத்துடன் தங்களது கோபத்தினை வெளிப்படுத்துகின்ற போதிலும், அவர்கள் தாங்களால் பரப்பப்பட்ட பொய்களுள் அகப்பட்டு கொள்ளாமல் அவர்களே அவற்றை மிக விரைவாக மூடி மறைக்கின்றனர்.