ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN Ambassador Samantha Power hails Sri Lanka as human rights champion

ஐக்கிய நாடுகள் சபை தூதர் சமந்தா பௌவர் இலங்கையை மனித உரிமைகளின் பாதுகாவலனாக பாராட்டுகிறார்

By Kumaran Ira
10 May 2016

வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த அமெரிக்க-இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை (TIFA) குழுவின் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க நிரந்த பிரதிநிதி சமந்தா பௌவர், சீனாவைத் தனிமைப்படுத்த மற்றும் அதற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்ய நோக்கங்கொண்ட அமெரிக்காவினது "ஆசியாவில் முன்னிலை" பாத்திரத்தை ஊக்குவிப்பதற்கு நேரமெடுத்துக் கொண்டார். அவர், “ஆசியாவில் முன்னிலையின்" பாகமாக ஜனவரி 2015 இல் வாஷிங்டனால் கொண்டுவரப்பட்ட இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்தை, அதன் மனித உரிமைகள் நடவடிக்கைகளுக்காக பாராட்டினார்.

“இலங்கை, ஜனவரி 2015 க்குப் பின்னர், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பொறுப்புடைமைக்கு ஓர் உலகளாவிய பாதுகாவலனாக உயர்ந்திருப்பதாக" கூறி, சிறிசேன இன் ஆட்சி "அசாதாரண முன்னேற்றம்" அடைந்துள்ளதாக பௌவர் தெரிவித்தார்.

பௌவர் சொல்வது முற்றுமுழுதான பொய். சிறிசேன அரசாங்கம் அப்படியான ஒன்றல்ல. உண்மையில் பாசாங்குத்தனமான வெற்று "ஜனநாயக" வாய்சவடால்களின் திரைமறைவில், வாஷிங்டன் அதன் "ஆசியாவில் முன்னிலையை" நடத்துவதற்கு எந்த மாதிரியான அப்பிரதேச கூட்டாளிகளைச் சார்ந்துள்ளது என்பதைத்தான், சிறிசேன அரசாங்கத்தின் ஜனநாயக உரிமை மீறல்களும் மற்றும் இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் பெருந்திரளான மக்கள் மீதான அதன் படுமோசமான அவமதிப்பும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

சிறிசேன அரசாங்கம் இதற்கு முந்தைய இராஜபக்ஷ ஆட்சி நடத்திய போர் குற்றங்களை மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. 2009 இல் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் (LTTE) படுகொலையுடன் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் காணமல்போயுள்ளார்கள். உயர்மட்ட சிறிசேன அதிகாரிகள் பலர் இந்த குற்றங்களுக்கு மிக நெருக்கமாக உடந்தையாய் இருந்தார்கள். சிறிசேன, அவரே கூட அந்த உள்நாட்டு போரின் முடிவில் இராஜபக்ஷ இன் இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக சேவையாற்றி கொண்டிருந்தார்.

போரின் போது காணாமல் போன தங்களின் உறவினர்களை அரசாங்கம் விடுவிக்க கோரி, போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினர் உள்நாட்டு போர் முடிந்த பின்னர் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளனர், மற்றும் ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் வருந்தத்தக்க நிலைமைகளில் இடம்பெயர்த்தும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லா இனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய கோரிக்கைகள் எல்லாம் சிறிசேனவினால், அத்துடன் தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள அவரது தமிழ் தேசியவாத கூட்டாளிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தங்களின் விடுதலை கோரி தமிழ் அரசியல் கைதிகள் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்திய பின்னரும் கூட, சிறிசேன அரசாங்கம் ஆணவத்துடன் இலங்கையில் அரசியல் கைதிகளே இல்லை என்று வலியுறுத்தினார்.

சிறிசேன அரசாங்கம் அதன் சமூக செலவினக் குறைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து வந்த எதிர்ப்பை ஒடுக்கி உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வறிய வேலையிட நிலைமைகளை எதிர்த்து போராடியதற்கு எதிராக அது சட்ட போலிவழக்குகளிடம் தஞ்சமடைந்ததுடன், வங்கி பணியாளர்களின் போராட்டங்களை தடுக்கும் தடை அதிகார ஆணைகளை வழங்கியது. மானிய வெட்டுக்களுக்கு எதிராக மற்றும் தங்களின் விளைபொருளுக்கு குறைந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகளதும், கல்வித்துறை வெட்டுக்களுக்கு எதிராக மாணவர்களதும் மிகப் பெரியளவிலான போராட்டங்களை அது முகங்கொடுத்தபோது, அது போராட்டக்காரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதற்கு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டது.

பௌவர் மற்றும் ஏனைய உயர்மட்ட அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் அடிக்கடி கொழும்புவிற்கு விஜயம் செய்து, ஜனநாயக உரிமைகள் மீதான சிறிசேனவின் தாக்குதல்களைக் குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ள போதினும், கொழும்பில் உள்ள வாஷிங்டனின் கையாள் அரசு முன்னொருபோதும் இல்லாதளவிற்கு ஜனநாயக மலர்ச்சியை மேற்பார்வையிட்டு வருவதாக பௌவர் கூறினார்.

பௌவர் குறிப்பிட்டார், “நவம்பரில் நான் விஜயம் செய்த போது, அதற்கு முன்னர் 2010 இல் எனது விஜயத்தின் போதிருந்திருந்ததை விட மாற்றத்தை உணரக்கூடியதாக இருந்தது. பயப்படுத்தும் ஓர் ஒடுக்குமுறை சூழ்நிலை நீக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களால் மீண்டும் உணர்ந்துகொள்ள முடிவதாகவும் மக்கள் என்னிடம் கூறினார்கள். நடவடிக்கையாளர்களால் வெளிப்படையாக வேலை செய்ய, சொல்லப் போனால், புதிய உற்சாகத்துடன் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும் கூட பாதுகாப்பாக உணர்ந்தார்கள். இதழாளர்கள் சுதந்திரமாக செய்தி அளித்தார்கள்; அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்; நிலம் மக்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டிருந்தது; உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்திருந்தவர்கள் புதிய எண்ணிக்கையில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப தொடங்கி இருந்தார்கள். அனைத்திற்கும் மேலாக, கடந்த கால துஷ்பிரயோகங்களைக் கையாள்வதில் அது தீர்மானகரமாக இருந்ததன் பாகமாக, அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்கும் சேவை செய்யும் முயற்சியில் நீதி மற்றும் நல்லிணக்க நிகழ்வுபோக்குகளுக்கு பொறுப்பேற்றிருந்தது,” என்றார்.

பௌவர் யாரை ஏமாற்ற நினைக்கிறார்? சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அரசு பயங்கரவாதத்தைக் கொண்டு பரந்த மக்கள் எதிர்ப்பை மௌனமாக்கும் ஒரு வெற்றியடையாத முயற்சியில், கடத்தல்கள், சித்திரவதை மற்றும் கற்பழிப்பு உட்பட மனித உரிமைகள் மீறல் அதிகரித்திருப்பதை ஒரு பரந்த மற்றும் அதிகரித்தளவிலான பொது ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகிறது.

சமீபத்தில், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டம்-இலங்கை என்பது கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 20 தமிழர்களை நேர்காணல் செய்ததன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை பிரசுரித்தது.

அவர்களது சாட்சியங்கள், பீதியூட்டல் உட்பட சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஸ்தூலமான ஆதாரத்தாலும் மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் மனரீதியான அல்லது உளவியல்ரீதியான பாதிப்பின் அடையாளங்களாலும் உறுதி செய்யப்பட்டது. “அடிப்பது, சாட்டையால் அடிப்பது, சிகரெட்களைக் கொண்டு சூடு வைப்பது, சூடான இரும்பு கம்பிகளால் அடையாளமிடுவது, நீரில் சித்திரவதை செய்வது, பெட்ரோல் அல்லது மிளகாய் நிரப்பிய ஒரு பிளாஸ்டிக் உறையை அவர்களது கழுத்தைச் சுற்றி கட்டி மூச்சுத் திணறடிப்பது, தலைகீழாக கட்டித் தொங்க விடுவது, காலால் உதைப்பது மற்றும் அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது" ஆகியவை சித்திரவதை முறைகளில் உள்ளடங்கி இருந்தன.

உண்மையில் கிழக்கு இலங்கையின் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரும் இப்போது இலண்டனில் வசிப்பவருமான, சித்திரவதைக்கு உள்ளான ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு படை அங்கத்தவர்கள் அவரை மீண்டும் மீண்டும் தீயால் சுட்டு, தமிழ் புலி போராளி என்று ஒரு பொய் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு வாங்கியதாக தெரிவித்தார். “அங்கே மாற்றம் நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை, இந்த புதிய அரசாங்கத்தின் கீழ் அங்கே எந்தவொரு மாற்றமும் நடந்திருப்பதாக நான் கருதவில்லை,” என்றார்.

அதன் சித்திரவதை கூடங்கள் மற்றும் சிறைச்சாலைகளை ஜனநாயகத்திற்கான அடையாளமாக கொண்டிருக்கும் சிறிசேன அரசாங்கத்திற்கு துதிபாடி கொண்டிருக்கையிலேயே, பௌவர் அவரது தனிச்சிறப்பான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளார்: அதாவது அமெரிக்க வெளியுறவு கொள்கையை "மனித உரிமைகளின்" மோசடி பதாகையின் கீழ் நியாயப்படுத்துவது. ஒபாமா நிர்வாகத்தில் 2009 இல் இருந்து 2013 வரையில் தேசிய பாதுகாப்பு குழுவின் பல்துறை விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான இயக்குனராக இருந்த அப்பெண்மணி, R2P (மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்புறுதி) கொள்கை என்றழைக்கப்படுவதில் ஒரு முன்னணி ஆலோசகராக இருந்தார். அது ஒபாமாவின் "மனிதாபிமான" போர்களுக்கு நியாயப்பாடுகளை வழங்க சேவையாற்றியது.

கடாபிக்கு எதிராக லிபியர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க அவசியமானது என்று கூறி, லிபியாவை நாசமாக்கிய மற்றும் பத்தாயிரக் கணக்கானவர்களை கொலை செய்த, மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து கீழிறக்கி படுகொலை செய்த அமெரிக்க-நேட்டோவின் ஆட்சி மாற்றத்திற்கான போரில், பௌவர் ஒரு முன்னணி வடிவமைப்பாளராக இருந்தார்.

2014 இல் ஐக்கிய நாடுகள் சபையில், அப்பெண்மணி, காசாவில் ஒரு போர் நிறுத்தம் கொண்டு வருவதுடன் தொடர்புபட்ட எந்தவொரு தீர்மானமும் ஐ.நா பாதுகாப்பு அவையில் நிறைவேற்றுவதைத் தடுத்து, காசாவில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததை ஆதரித்தார். இஸ்ரேல் மீது எந்தவிதத்திலும் குற்றஞ்சுமத்துவது வாஷிங்டனை "விலக்கிவைத்துவிடும்" என்றவர் எச்சரித்தார்.

அவ்விதத்தில், ஆசியா எங்கிலும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதிலும் மற்றும் போர் தயாரிப்பிலும் கொழும்பை ஒரு நம்பகமான பங்காளியாக உறுதிப்படுத்தி வைக்க வாஷிங்டன் முயன்று வருகையில், சிறிசேன இன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு ஒரு பாசாங்குத்தனமான "ஜனநாயக" மூடிமறைப்பை வழங்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.