ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN General Assembly convenes amid global military escalation

உலகளாவிய இராணுவ தீவிரப்பாட்டிற்கு இடையே ஐ.நா. பொது அவை கூடுகிறது

Andre Damon
21 September 2016

மனிதயினத்தை ஒரு புதிய உலக போருக்குள் தள்ள அச்சுறுத்தும் தொடர்ச்சியான உலகளாவிய நெருக்கடியின் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் 71 வது பொது அவை கூட்டம் இவ்வாரம் கூடியது.

இது, செவ்வாயன்று அந்த அவையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது இறுதி உரையை வழங்கிய பின்புலத்தில் நடந்தது. சிலவேளையில் விருப்பம் போல் முன்தயாரிப்பின்றி பேசிய ஒபாமாவின் சுற்றி வளைந்த உரை, தற்போதைய புவிசார் அரசியல் நிலைமையின் யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்தும் ஒபாமாவின் சித்தரிப்புடன் சேர்ந்து, சுய-முரண்பாடு மற்றும் அப்பட்டமான பொய்களைக் கொண்டிருந்தது.

இறுக்கமான முகத்துடன் அவர் அறிவித்தார், “நமது சர்வதேச ஒழுங்கமைப்பு மிகவும் வெற்றிகரமாக உள்ளது ஏனென்றால் வல்லரசுகள் இனி உலக போரில் ஈடுபடாது என்றும்; பனிப்போர் அணுஆயுத ஆர்மெக்கெடோன் நிழலுலகை நீக்கிவிட்டது என்றும்; ஐரோப்பாவின் போர்க்களங்களை சமாதான ஒன்றியம் பிரதியீடு செய்துள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்,” என்றார்.

ஷேக்ஸ்பியருக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கலாம், சிலர் பொய்யர்களாக பிறந்துவிடுகிறார்கள், இன்னும் சிலர் பொய்யர்களாகி விடுகிறார்கள், இன்னும் சிலர் பொய் பேசும் வேட்கையோடு இருக்கிறார்கள், ஆனால் இந்த மூன்று வரையறைகளுமே அமெரிக்காவின் இப்போதைய ஜனாதிபதிக்கு பொருந்தும்.

“அணுஆயுத ஆர்மெக்கெடோன் நிழலுலகம்" நீங்கிவிட்டது என்ற ஒபாமாவின் அறிவிப்பு அவரது சொந்த 1 ட்ரில்லியன் டாலர் அணுஆயுத மீள்ஆயுதமயப்படுத்தும் திட்டத்தினாலேயே பொய்யாகிவிடுகிறது என்பது மட்டுமல்ல, "துரிதமாக தீவிரமடையக் கூடிய மற்றும் ஓர் அணுஆயுத பரிமாற்றத்தில் சென்று முடியக்கூடிய ஒரு போரைத் தொடங்குவதென மோசமாக முடிவெடுப்பதிலிருந்து" அமெரிக்காவும் சீனாவும் "வெகு குறைந்த தூரத்திலேயே" உள்ளன என்ற Union of Concerned Scientists இன் பிரகடனத்தாலும் பொய்யாகிவிடுகிறது.

அனைத்திற்கும் மேலாக, “ஐரோப்பாவின் போர்க்களங்களை" பிரதியீடு செய்துவிட்ட "சமாதானமான ஒன்றியம்" அதிகரித்துவரும் தேசிய விரோதங்களுக்கு இடையே கலைப்படுவதற்கு மத்தியில் இருப்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஜூன் 2016 இல் பிரிட்டன் வாக்களித்த பின்னர் பின்னர் நடக்கும் முதல் ஐ.நா. பொது அவையில் ஒபாமா பேசிக் கொண்டிருந்தார், அது ஐரோப்பா எங்கிலும் அதேபோன்ற வாக்கெடுப்புகளுக்கான கோரிக்கைகளையும், ஒட்டுமொத்த யூரோ மண்டலமும் உடைவதற்கான எச்சரிக்கைகளையும் உயர்த்த கூடியதாகும்.

“ஐரோப்பாவின் போர்க்களங்களை" பொறுத்த வரையில், மொத்த நேட்டோ துருப்புகளும் மே மாதம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இவ்வாரயிறுதியில் உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், ரஷ்ய எல்லையில் அதன் 4,000 துருப்புகளை நிலைநிறுத்த நேட்டோ முன்னோக்கி நகர்ந்து வருகிறது. திரைக்குப் பின்னால், அத்தகைய எல்லையோர துருப்புகளை “tripwires" என்று குறிப்பிடும் இராணுவ சிந்தனை குழாம்களின் ஆவணங்கள், பால்டிக் அரசுகள் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒரு மோதல் சம்பவத்தில் நேட்டோவின் இராணுவ தீவிரப்பாட்டுக்கு நியாயப்பாடுகளை உருவாக்கி வருகின்றன, அத்துடன் மிகவும் பலமான அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையே முழு அளவிலான போருக்கான வாய்ப்புகளை போதுமானளவிற்கு அதிகரித்து வருகின்றன.

ஒபாமா கருத்துக்களில் ஒரு கணிசமான பகுதி ரஷ்யாவின் சுருள் முள்கம்பிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்தவொரு சமூகம் "சாமானிய பிரஜைகளை விட செல்வந்த தட்டுக்களிடம் இருந்து குறைவாகவே கோருகிறது" என்று மறைமுகமாக வலியுறுத்தியதுடன், ரஷ்யா "படைபலத்தின் மூலமாக, இழந்த மகிமையை மீட்டுப்பெற முயன்று வருவதாக" அவர் அறிவித்தார். ஆனால் இக்கருத்துக்கள் உலகிலேயே மிகவும் சமநிலையற்ற அபிவிருத்தியடைந்த நாடான அமெரிக்காவிற்கும் மிகவும் பொருந்தும். அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் முயற்சியில் முடிவில்லா போரில் ஈடுபட்டுள்ளது.

ஒபாமா அவர் நிர்வாகத்தினது கடந்த எட்டாண்டுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய 25 ஆண்டுகள் மீதான ஒரு பிரதிபலிப்பாக அவர் கருத்துக்களைத் தொகுத்தளித்தார். “பனிப்போர் முடிந்து ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், உலகம் பல விதத்தில் குறைந்த வன்முறையோடு மற்றும் முன்பு எப்போதையும் விட மிகவும் செல்வசெழிப்போடும்" இருப்பதாக ஒபாமா அறிவித்தார், இந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா "நன்மைக்கான ஒரு சக்தியாக" இருந்துள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஒபாமாவின் அரை-மனது அறிவிப்புகளுக்கு முரண்பட்ட விதத்தில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டு வரும் என்று அறிவித்த முதலாளித்துவ வெற்றி பிரவாக ஆதரவாளர்களைக் கூட கடந்த கால் நூற்றாண்டு வெட்கக்கேடாக திருப்திப்படுத்தவில்லை. அமெரிக்கா இக்காலக்கட்டத்தில் "நன்மைக்கான ஒரு சக்தி" என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, ஸ்திரமின்மைப்படுத்தல், வன்முறை மற்றும் நிலைகுலைவிற்கான ஒரே மிகப்பெரிய உறுதுணையாளராக இருந்துள்ளது.

1991 இல் முதல் வளைகுடா போருடன் தொடங்கி, அமெரிக்கா இடைவிடாது போரில் இருந்துள்ளது. ஈராக், சோமாலியா, பொஸ்னியா, யுகோஸ்லேவியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், லிபியா, யேமன் மற்றும் சிரியா மீது குண்டுவீசி உள்ளது அல்லது படையெடுத்துள்ளது, அத்துடன் ஏனைய பல நாடுகளில் ஸ்திரமின்மைப்படுத்தும் நடவடிக்கைகளை நடத்தி உள்ளது.

இத்தகைய போர்கள் இப்போது அதிகரித்தளவில் ரஷ்யா மற்றும் சீனா உடனான நேரடி மோதலாக பரவி வருகின்றன. உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகையில், ஜப்பான் மற்றும் ஜேர்மனி உட்பட பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவமயமாக்கலும் இதில் இணைந்துள்ளது.

ஒருபுறம் அமெரிக்கா மற்றும் அதன் பினாமிகளுக்கு இடையேயும் மற்றும் மறுபுறம் ரஷ்யா ஆதரவிலான சிரிய அரசாங்கத்திற்கு இடையேயும் மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறலாக, அமெரிக்க இராணுவம் சனிக்கிழமையன்று சிரிய இராணுவ தளத்தின் மீது குண்டுவீசியதற்குப் பின்னர் இந்த பொது அவை கூட்டம் தொடங்கியுள்ளது. 90 க்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட இட்டுச் சென்ற இத்தாக்குதல், பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய மற்றும் ஜேர்மன் படைகளின் உதவியுடன் நடத்தப்பட்டதுடன், இந்நாடுகள் ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலில் இழுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.

சிரிய மோதலில் வாஷிங்டனின் கூட்டாளியான துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் திங்களன்று கூறுகையில் ஐந்து மடங்கிற்கு அதிகமாக, 5,000 சதுர கிலோமீட்டர், சிரிய பகுதியை அதன் கட்டுப்பாட்டின் கீழ் துரிதமாக விரிவாக்க துருக்கி திட்டமிடுவதாக தெரிவித்திருந்த நிலையில், இக்குண்டுவீச்சு நடந்துள்ளது. அமெரிக்க தரைப்படைகள் துருக்கி-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களின் பக்கவாட்டில் சண்டையிட்டு வருவதானது, வடக்கு சிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ்ய படைகளுக்கும் துருக்கியை ஒட்டி சண்டையிட்டு வரும் அமெரிக்க தரைப்படை துருப்புகளுக்கும் இடையிலான ஒரு மோதல் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆனால் சிரியாவில் நடந்து வரும் சண்டை ஐரோப்பா மற்றும் ஆசியா எங்கிலுமான உலகளாவிய எண்ணற்ற தொடர்ச்சியான வெடிப்புப்புள்ளிகளில் ஒன்று மட்டுமேயாகும். சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் அமெரிக்க தலைமையிலான ரோந்து நடவடிக்கைகளில் ஜப்பான் பங்குபற்றுமென கடந்த வாரம் அது அறிவித்தது. இது, இரண்டாம் உலக போருக்கு முன்னர் ஜப்பான் படையெடுத்து ஆக்கிரமித்திருந்த சீனாவிடமிருந்து கண்டனங்களை வரவழைத்தது.

இதற்கிடையே காஷ்மீரில், அப்பிராந்தியத்தில் பல ஆண்டுகாலம் நீடித்திருக்கும் சண்டைகளில் பலமான ஒன்றாக ஞாயிறன்று நடந்த தாக்குதலில் 18 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் மேலும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான "ஆசிய முன்னிலையால்" தீவிரபடுத்தப்பட்டு உச்சக்கட்டத்திற்கு வந்துள்ள இந்த மோதல், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஒரு போராக தீவிரமடைந்தால், அது முன்பில்லாத வகையில் இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான முதல் போராக இருக்கும்.

இந்த அல்லது அந்த சிக்கலான மோதல்களில் ஏதாவதொன்று—இவற்றில் பல நாடுகள் ஒவ்வொன்றும் சிறியளவில் பினாமி சண்டையில் ஈடுபட்டு, அவற்றின் பிராந்திய நலன்களுக்காக போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில்—ஜூன் 1914 இல் பால்கன்களில் தொடங்கிய மோதலைப் போன்று ஒரு கட்டுப்படுத்தவியலாத தீவிரப்பாடு அடையக்கூடிய அபாயம் உள்ளது.

ஒபாமா அவர் உரையை “நாம் கடந்து வந்திருக்கும் கடந்த எட்டாண்டுகளை வளர்ச்சிக்கான" கணக்கில் காட்ட உத்தேசித்தார். ஆனால் இறுதியில், அவர் நிர்வாகத்தின் போது உலகம் எந்தளவிற்கு உலக போருக்கு நெருக்கமாக வந்திருக்கிறது என்பதை மொத்தமாக எடுத்துக்காட்டுவதில் தான் அவர் வெற்றி பெற்றுள்ளார்.