ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian elite welcome Trump’s election

இந்திய உயரடுக்கு ட்ரம்ப் இன் தேர்வை வரவேற்கிறது

By Deepal Jayasekera and Keith Jones 
19 November 2016

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இந்திய ஆளும் உயரடுக்கு உற்சாகத்துடன் வரவேற்று உள்ளது. இந்த வரவேற்புக்கு காரணம், ட்ரம்ப் இன் அதிதீவிரமான சீன-எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான்-எதிர்ப்பு நிலைப்பாடுகள் புது தில்லி இன் பிரதான ஆசிய போட்டியாளர்களுக்கு எதிரான அதன் புவிசார்-அரசியல் நலன்களை வலுப்படுத்தும் என்று கணிப்பிட்டு உள்ளதாலாகும்.

இந்திய அரசாங்கத்திற்கும், மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் இடையில் போதுமான முந்தைய கலந்துரையாடல்கள் இல்லாத நிலை குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், இந்தியாவையும் மற்றும் அதன் இந்துமத மேலாதிக்கவாத பிரதம மந்திரி நரேந்திர மோடியையும் தனது பிரச்சார உரைகளிலும் அமெரிக்க ஜனாதிபதி குறித்து பாராட்டி துதிபாடுகிறார் என்று அனைத்து இந்திய ஊடக அறிக்கைகளும் அறிவிக்கின்றன. ஒரு "இந்துமத பலசாலி" ஆக 2002ல் குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைக்குத் தலைமை வகித்தவருமான மோடி, மற்றும் அவரது இரண்டு ஆண்டு கால இந்திய அரசாங்கமும் இனவாதத்தை தூண்டியும், அதிருப்தியாளர்களை ஒடுக்கியும் வந்திருக்கின்றன என்றும், மேலும் "பொருளாதாரத்திலும் மற்றும் அதிகாரத்துவத்திலும் சீரமைப்பை கொண்டுவருவதில் மிகுந்த சுறுசுறுப்பானவராக இருக்கும் பிரதம மந்திரி மோடி உடன் பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறோம். பெரிய மனிதர். நான் அவருக்கு எனது பாராட்டுக்கள்." என்றும் ட்ரம்ப் தெரித்தார்.

மோடி தனது பங்கிற்கு, வாஷிங்டன் உடனான புது தில்லி இன் "உலகளாவிய மூலோபாயக் கூட்டணி" தொடர்ந்து விரிவடையும் என்று நம்பிக்கை குரல் எழுப்புகிறார்.

மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின்  கீழ், இந்தியா, சீனாவிற்கு எதிரான வாஷிங்டன் இன் இராணுவ-மூலோபாய தாக்குதல்களில் ஒரு "முன்னணி நாடாக" உண்மையில் மாறிக்கொண்டு வருகிறது. மேலும், அதன் இராணுவ தளங்களை அமெரிக்க போர் விமானங்களும் மற்றும் போர் கப்பல்களும் வழக்கமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிசெய்து உள்ளது; தென் சீனக் கடல் சச்சரவு பற்றிய வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் சீன-எதிர்ப்பை திரும்பதிரும்ப கூறுவது; ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டுகள் ஆகியவற்றுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-பாதுகாப்பு ஒத்துழைப்பினை வியக்கத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது.

இந்த வாரம் நடைபெற்ற இந்திய அரசியல் தலைவர்களுக்கான ஒரு தனி இரவு விருந்தில், மோடி, ட்ரம்ப் உடனான தனது "நல்ல உறவுகள்" பற்றி பெருமை பேசியதுடன், "இருதரப்பு உறவுகளுக்கு இடையிலான எந்தவொரு பாரிய மாற்றம்" குறித்தும் அச்சமுறுவதற்கு "எந்த காரணமும் இல்லை" எனவும் தெரிவித்ததாக Times of India  குறிப்பிட்டது.

மோடி, இந்தியாவின் உயர்மட்ட இராஜாங்க அதிகாரியான, வெளியுறவு செயலர் S.ஜெய்ஷங்கரை, ட்ரம்பின் இடைக்கால  அணித் தலைவர்களை சந்திக்கவும், ஜனவரி மத்தியில் இந்த பில்லியனர் வாய்ச்சவுடால் அரசியல்வாதி, ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், ட்ரம்ப்-மோடி சந்திப்புக்கு அவர்களுக்கு அழுத்தம்கொடுக்கவும் அமெரிக்காவுக்கு அனுப்பினார்.

சேவானந்த் கட்டலாவின், "ட்ரம்ப் இன் தேர்வினால் இந்தியாவிற்கு என்ன பயன்?" என்ற தலைப்பிட்ட முதல் கருத்துக் கட்டுரையில் Firstpost இல், ஜனநாயகக் கட்சி தலைமையில் இருந்ததைவிட ட்ரம்ப் இன் தலைமையிலான நிர்வாகத்திலிருந்து "இந்தியா மேலும் அதிக பயன்களைப் பெற முடியும்" என்று விவாதிக்கிறது, ஏனென்றால், "சீனா மற்றும் பாகிஸ்தான் மீதான ட்ரம்ப் இன் கடுமையான நிலைப்பாடு" அவ்வாறு உள்ளது. மேலும், "உலகிலேயே மிக ஆபத்தான நாடு" என்று பாகிஸ்தானை ட்ரம்ப் முத்திரைகுத்துவதையும், "பாகிஸ்தானை கட்டுப்படுத்த" இந்தியாவை அவர் அழைப்பதையும் கட்டலா குறிப்பிடுகிறார். கூடுதலாக அவர், ட்ரம்ப் இன் நிர்வாகம் "பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் உதவிகளை நிறுத்துவதற்கு முனைப்பாக இருக்கவேண்டும்," என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில் போதுமான சுமையை தாங்கிக்கொள்வில்லை என்ற நிலைப்பாட்டை கொண்ட அவரது பிரிவினர் அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு அமைப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தலாம். இந்த கன்னை பற்றி குறிப்பிடும் அவர், இஸ்லாமாபாத், தாலிபான் உடன் போர் புரிவது போன்று "பாசாங்கு" செய்து கொண்டே, "அமெரிக்காவிடமிருந்து உதவிகளை சேகரித்துக் கொண்டே இருக்கிறது" என்றும் வாதிடுகிறார்.

இந்நிலையில், இந்தியா வாஷிங்டன் உடனான அதன் மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மைக்கு வழிதேடும் மோடியின் தலைமையிலான இந்தியா, அச்சுறுத்தல், துன்புறுத்தல்கள் மற்றும்  இராணுவ அழுத்தம்  மூலமாக  சர்ச்சைக்குரிய காஸ்மீர் பகுதியில் உள்ள இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய தீவிரவதிகளுக்கு இஸ்லாமாபாத் செய்துவரும் எந்தவொரு இராணுவ தளவாட உதவிகளையும் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தும் பிரச்சாரத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. செப்டம்பர் இறுதியில், மோடி அரசாங்கம் பாகிஸ்தான் உடனான புது தில்லி இன் "மூலோபாய சுய தடுப்பு" எனும் கொள்கையை கைவிட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உள்ளே எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்திவருகின்றது, அதனால் "பயங்கரவாதிகள்" மற்றும் அவர்களது பாகிஸ்தானிய "பாதுகாவலர்கள்" மீது கடும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் பிரகடனப்படுத்திய வகையில் இந்த விவகாரம் ஒரு புதிய தரத்தை அடைந்துள்ளது.

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் அப்பட்டமான சட்டவிரோத மற்றும் உயர்ந்தபட்ச ஆத்திரமூட்டுதல்களுடன் கூடிய தாக்குதல்களை ஒபாமா நிர்வாகம் முதலில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் ஆதரித்தது. அதன் அணுஆயுதமேந்திய அதன் பிரதான போட்டியாளருடனான மோதலுக்கு இன்னும் பாரியளவு சுதந்திரத்தை எதிர்விருக்கும் ட்ரம்ப் இன் நிர்வாகம் இந்தியாவிற்கு கொடுக்கும் என புது தில்லி இப்பொழுதும் நம்பிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு வரை இந்தியாவின் அமெரிக்க தூதராக இருந்த அருண் குமார் சிங், சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய பலமாக இந்தியாவைப் பயன்படுத்தும் வாஷிங்டனின் கொள்கைக்கு ஒரு வலுவான இருகட்சி ஆதரவினை வலியுறுத்துகிறார் என்று Times of India தெரிவிக்கிறது. மேலும் அவர், ஜுலை மாதம் குடியரசு கட்சி மாநாட்டின் போது, மூத்த குடியரசு கட்சியினர் மற்றும் ட்ரம்ப் இன் தேர்தல் பிரச்சார அதிகாரிகள் உடனான தனது கலந்துரையாடல்களில், "இந்தியாவை ஒரு சாதகமான தனித்த பாதுகாப்பு வழங்குநராக கருதுவது, மற்றும் 21ஆம் நூற்றாண்டில் ஒரு வரையறுக்கப்பட்ட அமெரிக்க-இந்திய உறவுகளை எதிர்நோக்குவதுமான வகையில், இந்தியாவின் எழுச்சிäயை அணைத்துக்கொண்டு தற்போது வெளிப்படுத்தப்பட்டிருந்த அமெரிக்க கொள்கையினை ட்ரம்ப் இன் நிர்வாகம் அப்படியே தொடரும் என்ற எனது திடமான நம்பிக்கையினை மீண்டும் வலுப்படுத்தி உள்ளேன்," என்றும் கூறுகிறார். 

இந்திய மூலோபாயவாதி C. ராஜா மோஹன், இந்தியாவின் ஒரு வலுவான ஆதரவாளராக, சீனா-எதிர்ப்பு "சமநிலைக்கு" ஏதுவாக வாஷிங்டன் உடனான இந்தியாவின் கூட்டுக்களை எப்பொழுதும் நெருக்கமானதாக வைத்திருக்கிறார். அமெரிக்க தலைமையிலான உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கமைப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில் அமெரிக்கா அதன் பாரம்பரிய நட்பு நாடுகளிடமிருந்து நிதி மற்றும் இராணுவ செலவினங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ட்ரம்ப் அழைப்பு விடுவதை இந்தியாவும் தன்னை ஒரு முக்கிய ஆசிய மற்றும் இந்திய சக்தியாக உருவெடுக்க வைத்திருக்கும் அதன் சொந்த குறிக்கோள்களை முன்னெடுக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் விவாதிக்கிறார். "புவிசார் அரசியல் முனையில்," என்ற தலைப்பில், மோஹன் அவரது இந்தியன் எக்ஸ்பிரஸின் வழக்கமான பத்தியில், ஐரோப்பிய-ஆசிய நிலப்பகுதிகள் மீதான அமெரிக்காவின் இராணுவ சுமைகள் பற்றிய ட்ரம்ப் இன் மறுபரிசீலனையானது, தில்லி தனது பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அதன் சொந்த பங்களிப்புகளை விரிவாக்கும் ஒரு அரிய வாய்ப்பினை வழங்குகிறது என எழுதினார். அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின் அச்சாணியாக இந்தியா செயல்படுவதை காட்டிலும், சக்தி அமைப்பின் பிராந்திய சமநிலைக்கு தன்னை ஒரு முன்னணி அங்கமாக உருவாக்கிக் கொள்ளலாம். ட்ரம்ப் இன் கண்ணோட்டத்தின்கீழ், ஒருவேளை அமெரிக்கா நேரடி பிராந்திய அமைப்புக்களாக இருந்து செயல்படுவதற்கு பதிலாக அதனை ஒரு தொலைதூர வல்லரசாக கருதி, ஆதரவாக இருந்து உதவிகளை செய்யுமானால், அதன்மூலம், இந்தியா ஒரு வலுவான யுரேசிய கூட்டணியை உருவாக்க தேவைப்படுகின்ற பாரிய இடத்தையும் மற்றும் தகுதியையும் பெறும்.

RSS நிழலில் பிஜேபி இன் இந்து வலதுசாரி கூட்டணிகள் உணர்ச்சிபொங்க ட்ரம்பை பாராட்டியுள்ளனர். குறைந்தபட்சமாக அவரது முஸ்லீம்-எதிர்ப்பு மதவெறியே இதற்கு முக்கிய காரணம். RSS's Organiser இல் வந்த ஒரு அட்டைப்படக் கட்டுரையில் "பாரதம் (இந்தியா) மற்றும் இந்துக்களுக்கு ஒரு விருப்பத்திற்குரியவராகள் ட்ரம்ப் இருக்கிறார்" என்று உரத்துக் கூறுகின்றனர். "பயங்கரவாதத்தின் மீதான போர்" கட்டுக்கதை தவறானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்று தன்மைபடுத்தி, "ட்ரம்ப் இன் தேர்வினால் பாரதம் ஒரு மாபெரும் பயனாளியாக இருக்கும், ஏனென்றால் இரண்டு நாடுகளுமே இஸ்லாமிய தீவிரவாதத்தின் முதன்மை இலக்குகளாக இருக்கின்றன." என்று கட்டுரை தொடருகின்றது, மேலும் "உலக பொருளாதாரத்தில் காணப்படும் சீனாவின் ஆதிக்கத்தினை" தடுக்க "பாரதம்-அமெரிக்கா-ரஷ்யா கூட்டணிக்கு" ஒரு அழைப்பு விடுப்பதோடு இது நிறைவுறுகின்றது.

இந்திய உயரடுக்கு முழுவதும், ட்ரம்ப் இன் சீன விரோத போக்கு குறித்து மகிழ்ச்சியடைகின்றது. ஆனாலும், அவருடைய அமெரிக்கா முதல் என்ற பாதுகாப்புவாத திட்டத்தினால் இந்தியா ஒதுக்கப்பட்டுவிடலாம் என்பது குறித்த கணிசமான கவலையும் இதில் இருக்கிறது. அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களின்போது, வெளிநாடுகள் உடனான அவரது பேரினவாத கண்டனங்களின் ஒரு அங்கமாக அமெரிக்க வேலைகளை "பறிக்கப்படுவதற்கு", அதாவது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு தொழில் வல்லுநர்களை வேலைக்கு அமர்த்த அனுமதியளிக்கும் H1-B விசாவினை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக திரும்ப திரும்ப ட்ரம்ப் கூறுகிறார். அமெரிக்காவில் தற்போது பணியில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் இருக்கும் (IT Sector) அனைவரும் இந்த H1-B விசா அனுமதியில் தான் இருக்கின்றனர். H1-B பணியாளர்கள் தான் இந்தியாவிற்கு கணிசமான அளவு நிதி வருமானத்தை கொடுக்கின்றனர். இருந்தபோதிலும், இந்திய உயரடுக்கின் பெரும் கவலையானது H1-B இட ஒதுக்கிட்டு குறைப்பின் மீதானது அல்ல, அந்த திட்டம் அகற்றப்படுவது பற்றிக்கூட ஒன்றும் கூறுவதற்கில்லை, ஆனால் அமெரிக்காவில் உள்ள இந்தியா சார்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்த திட்டம் சீர்குலைக்கும் என்பதனாலேயே ஆகும்.

ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் இன் ஆக்ரோஷமான நிலைப்பாடு குறித்தும் கவலைகள் இருக்கின்றன. ஏனென்றால் அவர், ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அச்சுறுத்தி உள்ளார், இது இந்திய-ஈரான் பொருளாதாரம் மற்றும் மூலோபாயக் கூட்டுக்களை வெட்டிவிடுவதில் ஒரு எழுச்சியை உருவாக்கும். மத்திய ஆசியாவுடன் ஒரு பொருளாதார வழித்தடத்தை இந்திய ஏற்படுத்திக்கொள்வதற்கு தகுந்தவாறு இந்திய திட்டங்களின் மையமாக ஈரானியன் துறைமுகமான சாபாஹார் இருக்கிறது. இங்குதான் இந்தியா சீனாவுடன் மூலோபாய செல்வாக்கிற்காகவும் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றது.

இந்தியாவில் அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்குகள் ட்ரம்ப் இன் தேர்வுக்கு உற்சாகத்துடன் பதிலிறுக்கும் அதேவேளையில், பாகிஸ்தானில் இத்தேர்வு முடிவு ஒரு நடுக்கத்தினூடேயே கையாளப்பட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க கூட்டணி வலுப்படும் அதேவேளையில், இந்தியாவில் கருத்து நிலவுவது போலவே, ட்ரம்ப் இன் நிர்வாகம் பாகிஸ்தான் உடனான அமெரிக்க கூட்டுக்களை இன்னும் குறைக்கும் என்றே இஸ்லாமாபாத்திலும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

புது தில்லியுடனான வாஷிங்டனின் மூலோபாய அரவணைப்பானது இப்பிராந்திய சக்தி சமநிலையினை நிலைகுலையச் செய்யும் என்று இஸ்லாமாபாத் எப்போதும் உரத்த குரலில் திரும்ப திரும்ப எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கைகளை வாஷிங்டன் புறக்கணிப்பதை முன்னிட்டு, அமெரிக்க-பாகிஸ்தானிய உறவுகள் மேலும் நலிவுறும் பட்சத்தில் மட்டுமே ஒரு வளர்ச்சி ஏற்படும் என்ற கருதுவதனால், பாகிஸ்தான் பெய்ஜிங் உடனான அதன் நீண்டகால உடன்படிக்கையினை மேம்படுத்த முனைகின்றது.

எவ்வாறாயினும், வழமையாக, "அமெரிக்காவின் நேட்டோ அல்லாத ஒரு முக்கிய கூட்டணியாகவும்" மற்றும், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இராணுவ ஒழுங்கமைப்பு அச்சாணியாகவும் பாகிஸ்தான் தொடருகின்றது.

லாகூரைச் சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரான ஹசன் அஸ்காரி ரிஜி, "அமெரிக்கா பாகிஸ்தானை கைவிடாது" என்று எழுதினார். மேலும் அவர், "ஆனால் நிச்சயமாக, பாகிஸ்தானுக்கு ஹிலாரி கிளின்டனை விட ட்ரம்ப் இன்னும் மேலான ஒரு கடுமையான ஜனாதிபதியாகவே இருப்பார்...... என்றும், ஆனால் பாகிஸ்தான் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியா ஒரு சிறந்த மற்றும் சுமுகமான தொடர்பினையே ட்ரம்ப் உடன் கொண்டிருக்கும் என்றே நான் கருதுகிறேன்." என்றும் குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் (PPP) மற்றும் அமெரிக்காவின் முன்னாள் பாகிஸ்தானிய வெளியுறவு தூதருமான ஷெர்ரீ ரெஹ்மான், "கடினமான பாதை முன்னுள்ளது." என்று Dawn இல் எச்சரித்து எழுதுகிறார். அமெரிக்க-பாகிஸ்தானிய கூட்டணியை "அல்லது, சீனாவின் பிரதான கூட்டாளியாக பாகிஸ்தான் இருப்பதை தடுக்கவோ பகிரங்கமாக ட்ரம்ப் கேள்வி எழுப்பாது விடலாம். மிகமோசமான சூழ்நிலையாக பொருளாதாரத் தடைகள் தள்ளிப்போடப்படலாம், ஆனாலும், அவசரமும் மற்றும் திசைகாட்டலும் இல்லாமல் இது வெளியுறவு கொள்கைக்கு பொருந்தாது."

பாகிஸ்தானிய உயர்மட்டத்தினர் இடையே அமெரிக்கா மீதான பரந்த அதிருப்தியே காணப்படுகிறது. அமெரிக்கா அதன் புவிசார் அரசியல் விளையாட்டில் பாகிஸ்தானை ஒரு பகடைக்காயாகவே மீண்டும் மீண்டும் "பயன்படுத்தி", பின்னர் "கைவிடகூடும்" என்ற விதமாகவே இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் ஆட்சிக்கே ஒரு அதிமுக்கிய ஆதரவாக இருந்து வந்திருக்கிறது, இருந்தபோதிலும், பாகிஸ்தானிய முதலாளித்துவம் வாஷிங்டன் உடனான தனது கூட்டணியை நிலைநாட்டும் முயற்சியில் தீவிரமாகவே உள்ளனர்.    

பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு அதனை ட்ரம்ப்பிற்கு உகந்தவராக காட்டிக்கொள்வதில் இருக்கும்  ஆர்வம், மேலும் இந்தியா உடன் அதிகரித்துவரும் போர் நெருக்கடி குறித்த அதன் பயம் இவ்விரண்டும் பற்றி ஒரு சமிக்கையாகவே இது காணப்படுகின்றது. கடந்த வாரம், பாகிஸ்தானிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் நஃபீஸ் ஜக்காரி, ஏழு தசாப்த காலமாக பழமைவாய்ந்த காஷ்மீர் சர்ச்சைக்கு "மத்தியஸ்தம்" செய்ய ட்ரம்ப் இடம் முறையீடு செய்து உள்ளார்.